இது உங்கள் இடம்!
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar advertisement tariff
 
Advertisement
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

26 ஏப்
2015
00:00

சொல்லக் கூடாத வார்த்தை!
இரு ஆண்டுகளுக்கு முன், ஒரு குறும்படத்தில் நடித்தேன். அப்படத்தின் கதாநாயகி, திருநங்கை. அவர் வசனம் பேசும் போது ஒரு இடத்தில், 'சனியனே...' என, திட்ட வேண்டும். 'அந்த வசனத்தை பேச மாட்டேன்...' என்று, அவர் பிடிவாதமாக மறுத்து, 'நீங்க கோடி ரூபாய் கொடுத்தாலும் அச்சொல்லை சொல்ல மாட்டேன்; நான் மட்டுமல்ல, எந்தத் திருநங்கையும் சொல்ல மாட்டார்கள். நாங்கள் ஒருவரை திட்ட வேண்டுமானால், அந்த சொல்லை தவிர்த்து, வேறு எல்லாவிதமான கெட்ட வார்த்தைகளையும் பயன்படுத்துவோம்...' என்றார்.
மேலும், 'அக்கிழமையை சொல்லும் போது கூட, வெள்ளிக்கு அடுத்த நாள் அல்லது ஞாயிறுக்கு முதல்நாள் என்று தான் கூறுவோம்...' என்றார்.
பலரது இழி பார்வைக்கு ஆளானவர்களாக இருந்தாலும், இவ்வளவு உயர்ந்த நற்பண்பு இருப்பதை நினைத்து பெருமை அடைந்தேன். அன்றிலிருந்து, நானும் அந்த வார்த்தையை பயன்படுத்துவதை தவிர்த்து வருகிறேன்.
வாசகர்களே... இனி நாமும் அந்த அச்சானியமான சொல்லை தவிர்க்கலாமே!
— எம்.கோபால், வேடபட்டி.

நிஜத்தை போதித்த நண்பர்!
சில மாதங்களுக்கு முன், மதுரையில், சில முக்கிய பகுதிகளில் சினிமா படப்பிடிப்பு நடைபெற்றது. அப்போது, நாள் தவறாமல் என் நண்பர், தன் ஆறு வயது மகனுடன் அங்கே வேடிக்கை பார்த்ததை காண முடிந்தது. இத்தனைக்கும் நண்பருக்கு சினிமா அறவே பிடிக்காது.
இதுபற்றி, நண்பரிடம், 'என்னப்பா... உனக்கு சினிமாவே பிடிக்காதுன்னு சொல்வே... இப்ப என்னடான்னா தினமும் உன் மகனை, படப்பிடிப்பு நடக்கிற இடத்துக்கு கூட்டிட்டு வந்து, ரொம்ப ஜாலியா என்ஜாய் செய்யுறே...' என்றேன். அதற்கு நண்பர், 'விஷயத்த அப்புறம் சொல்றேன்...' என்று என்னை அனுப்பி விட்டார்.
அதன்பின் மற்றொரு நாள் நண்பர் வீட்டுக்கு சென்றிருந்த போது, 'அங்கே பாரு... என் மகன் இந்தியா, 'மேப்' வரைஞ்சிட்டு இருக்கான்; இவ்வளவு நேரம் படிச்சுட்டு இருந்தான்; கொஞ்ச நேரம் கேரம் போர்டு விளையாடினோம்...' என்றார்.
'இப்போ எதுக்கு இதை என்கிட்ட சொல்றே...' என்றேன்.
'காரணமிருக்கு. என் மகன் சினிமா, 'டிவி'ன்னு ரொம்ப மோகமா இருந்தான். அதனால தான் சினிமா ஷூட்டிங்குக்கு கூட்டிட்டு போயி, அங்க ஒரு பாட்டை எத்தனை முறை எடுக்கிறாங்க, ஒரு சண்டைக் காட்சியில எப்படியெல்லாம் ஏமாத்துறாங்க, எப்பவெல்லாம், 'டூப்' போடுறாங்கன்னு நேரடியா காட்டினேன். அப்புறம் அவன்கிட்ட, 'ஒரு காட்சிய, 20 முறை எடுப்பாங்க; ஆனா, நீ தேர்வு எழுதிட்டு, இது சரியில்லன்னு அப்புறம் எழுதினா ஒத்துக்குவாங்களா?'ன்னு கேட்டேன். பையனுக்கு வாழ்க்கையில் நிஜம் எது, போலி எது, ஏமாற்றுத்தனம் எதுன்னு ஓரளவுக்கு புரிஞ்சதால, இப்போ சினிமா பக்கம் போறதேயில்ல...' என்றார்.
தற்போது, திறன் வளர்க்கும் கலை மற்றும் விளையாட்டு என, மாற்றுவழிகளை கையாண்ட நண்பரை, வியந்து பாராட்டினேன்.
— கே.கார்த்திக், மதுரை.

தனித்தனி கவர்!
சமீபத்தில், நண்பர் வீட்டிற்கு சென்றிருந்தேன். அவரது வீட்டில் ஒரு பெரிய பிளாஸ்டிக் டப்பாவில், சிறிய காகித கவர்களில் மாத்திரைகளை போட்டு, அதன் மேலே மாத்திரைகளின் பெயர் மற்றும் காலாவதியாகும் தேதியை குறித்து வைத்திருந்தார்.
'மாத்திரைகளின் அட்டையிலேயே பெயர் மற்றும் காலாவதியாகும் தேதியும் இருக்குமே... அப்பறம் எதுக்கு மாத்திரைகளை காகித கவர்களில் போட்டு, அதையெல்லாம் குறிச்சு வச்சுருக்கே...' என்று கேட்டேன்.
அதற்கு அவர், 'எல்லாருடைய வீட்டிலும், தலைவலி, காய்ச்சல், ஜலதோஷம் மற்றும் வயிற்று போக்கு போன்ற சிறிய பிரச்னைகளுக்கு, மாத்திரைகள வச்சிருப்போம். மாத்திரைய அட்டையிலிருந்து எடுக்கறப்ப, அதனோட பெயரும், காலாவதி தேதியும் சில சமயம் கிழிஞ்சு போகும். அப்பறம், சில நாட்கள் கழிச்சு, மீண்டும் அதே மாத்திரையை பயன்படுத்தும்போது பெயரும், காலாவதி தேதியும் தெரியாமல், குழம்பிப் போவோம். இது, அந்த மாத்திரையாகத் தான் இருக்கும்ன்னு குத்து மதிப்பா நினைச்சு மாத்திரைய சாப்பிடுறது, சமயத்தில பெரிய ஆபத்தை ஏற்படுத்திரும். அதோட, தேதி தெரியாம, காலாவதியான மாத்திரைகளை சாப்பிட்டா நம் கிட்னி தான் பாதிக்கும். அதனால தான், சிரமம் பாக்காம மாத்திரைகளை ஒரு காகித கவரில் போட்டு, அதன் மேல் பெயரையும், காலாவதி தேதியும் எழுதி வைச்சுருக்கேன்...' என்று விளக்கம் அளித்தார்.
நீங்களும் அவர் வழியை பின்பற்றலாமே!
ஜெ.கண்ணன்,சென்னை.

Advertisement

 வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (4)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Manian - Chennai,இந்தியா
27-ஏப்-201505:49:07 IST Report Abuse
Manian ஒருவர் பேசும்போது எந்த சூழ்நிலை யில் பேசுகிறார் என்று தெளிவாக தெரிந்து கொள்ளமுடியாது. இதனாலே பல நட்புக்கள் முறிகிகின்றன. எழுதும்போதும் இந்த பிரக்சினை வரும். எனவே பலரும் தங்கள் அனுப அறிவை பகிர்ந்து கொள்ளுவதில்லை. எந்த சூழ் நிலை என்பதய் சொல்லவே நீண்ட நேரமாகும்போது நமது பொறுமையும் போய்விடும். எனவே தான் நமது முன்னோர்கள் நாம் சொன்னதை திரும்ப சொல்லி இதுதானே என்று கேட்பார்கள். காலமில்லாமல் இன்று இது நடைமுறையில் இல்லை. எனவே பொருளை தவராக எண்ணுதல், விரோதங்கள் அதிகம் ஆகும் பல கல்வி புத்தகங்கள் ஆசிரியாரின் புரிதலெயே காட்டுத்மே தவிர மாணவன் எவ்வாறு புரிந்து கொள்ளவேண்டும் எந்று சொல்லித்தருவதில்லை. எனவே இந்த புத்தகங்கள் பாதுக்காகபடுவதில்லை. புரிந்து பேசுதல் கற்க வேண்டியை திறாமாமயே. "இங்கு யாாாவது "ஹவ் எ நைஸ் டே" என்று வாழ்த்தும் பொழுது அதனை உணர்ந்து சொல்கிறார்களா இல்லை கடமைக்காக சொல்கிறார்களா என்ற சந்தேகம் எழும்"- இது கேட்போரின் மன நிலையய் பொருத்தது. நல்லதே சொன்னார் என்று எண்ணுவதே மேல்.சென்னையில் "எளவு கிராக்கி ஊட்டாண்டே சொல்லிக்கினு வந்தியா என்பதே மேல் என்றால் இந்தியாவுக்கே திரும்ப வா அய்யா தொரை.
Rate this:
Cancel
malar - chennai,இந்தியா
26-ஏப்-201508:18:16 IST Report Abuse
malar கடிதம் 1)எல்லா கிழமைகளும் நாட்களும் ஆண்டவரால் உண்டாக்கபட்டது தானே .. ஏன் இந்த கிழமையை ஆகாத கிழமை என்று சொல்லுகிறார்கள் ?எங்களுக்கெல்லாம் week end , no need to wake up early, என்று சனிக்கிழமை வருவது ரொம்ப happy யா இருக்கும் . but yet I appreciate their determination in what they believe... 2) Good idea . Also when we take medicines in hurry we wont bother to search for the expiry dates , true.
Rate this:
Cancel
வழிப்போக்கன் - Somerville, MA,யூ.எஸ்.ஏ
26-ஏப்-201500:35:06 IST Report Abuse
வழிப்போக்கன் வார்த்தைகள் தவறானவை அல்ல. அவற்றை அர்த்தம் காணும் மனிதர்களும் அதனை அப்படியே மூடவழக்கம் ஆக்கும் சமூகமும்தான் தவறானவர்கள். எங்க ஊர் பக்கம் திட்ட நினைக்கும் பொழுது எனது வீட்டு பெரியவர்கள் , "நல்லா இருடா " என்பார்கள். ஆக அது நல்ல வார்த்தைதானே, ஆனால் அதனை கேட்கும் பொழுது மனம் கஷ்டப்படுமே. ஆக அது அச்சானியமா அல்லது நல்லதா? இங்கு யாாாவது "ஹவ் எ நைஸ் டே" என்று வாழ்த்தும் பொழுது அதனை உணர்ந்து சொல்கிறார்களா இல்லை கடமைக்காக சொல்கிறார்களா என்ற சந்தேகம் எழும். ஒரு நாள் உரைத்தது. ஐயா, வார்த்தைகள் நல்லவை, கெட்டவை அல்ல. அதனை பயன்படுத்துவோர் (அவர்களின் எண்ண ஓட்டம், intent) தான் நல்லவர் கெட்டவர் நல்லது கேட்டது என்று தரம் பிரிக்கிறது. ஒரு அன்னை தன பையனை பார்த்து, அட திருட்டு பயலே என்பது போல.. திருட்டு பயலே கெட்ட வார்த்தை அல்ல, அதனை ஒரு காவல்துறை அதிகாரி ஒரு திருடனை பார்த்து சொல்லுவது வேறு, ஒரு அன்னை தன சிறு குழந்தையை பார்த்து சொல்லுவது வேறு.
Rate this:
Sami - Tirupur,இந்தியா
26-ஏப்-201509:33:29 IST Report Abuse
Samiநீங்கள் உரைப்பது நல்ல கருத்து. இன்று நல்ல தமிழ் வார்த்தைகள் கூட தவறான அர்த்தமாகி பொது இடங்களில் உபயோகிக்க பயப்பட வைக்கிறது. விளக்கிச்சொன்னால் புரிந்துகொள்ள முடியாதபடி வார்த்தைகளை தவறாக அர்த்தப்படுத்தும் பழக்கம் இன்றைய இளைஞர்களிடம் ஊடுருவிட்டது. பேசுவது தமிழ் தான் என்று வெறும் வறட்டு பிடிவாதமாய் தமிழ் பற்று பேசும் கூட்டமும் மலிந்துவிட்டன. நம்மிடம் கற்றலின் பொறுமையுமில்லை கற்பித்தலில் சரியான அணுகுமுறையுமில்லை. யாரும் அளிக்கும் முன் நாமே அழித்துவிடுவது என்பதே நமது நோக்கம். கேட்டால் தவறு. திருத்தமுயன்றால் பிடிவாதக்காரன் என்று பொருள். பட்டனுபவம்....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X