இழந்ததும் பெற்றதும்!
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar advertisement tariff
 
Advertisement
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

26 ஏப்
2015
00:00

ஒன்றை இழக்காமல், மற்றொன்றை அடைய முடியாது என்பர். இது தெரிந்திருந்தும், கையில் உள்ளதை இழக்க விரும்பாமலும், அதேசமயம் எதிர்பார்ப்பை விட முடியாமலும், மனித மனம் அல்லாடுகிறது. ஆனால், யாருக்கு எதை, எப்போது தர வேண்டும் என்பது கடவுளுக்கு தெரியும்.
வயது முதிர்ந்த ஒருவர், வாத நோயால் பீடிக்கப்பட்டிருந்தார். அது, குணமாவதற்காக குருவாயூர் சென்று, 48 நாட்கள் விரதமிருப்பதாக வேண்டி, பக்தியோடு குருவாயூரப்பனை வழிபட்டு வந்தார்.
தினமும் மூன்று வேளை குளத்தில் குளிப்பதும், குருவாயூரப்பனைத் தரிசனம் செய்வதுமாக இருந்தார். அவ்வாறு அவர் குளத்தில் குளிக்கும்போது, தன் சேமிப்பு பணமான, 2,000 ரூபாயை ஒரு துணியில் மூட்டையாக கட்டி, கரையில் வைத்து விட்டுக் குளிப்பார்.
அவர், எட்டு வயது சிறுவனை தன் உதவிக்காக வைத்திருந்தார். அவன், இப்பெரியவரை அழைத்துச் சென்று குளிக்க வைத்து, சாமி தரிசனமும் செய்ய வைப்பான். அதற்காக, அவனுக்குச் சம்பளமும் உண்டு. அப்பையனும், தன் கடமைகளை ஒழுங்காக செய்து வந்தான்.
கடைசி நாளான, 48வது நாள், தன் பண மூட்டையைக் கரையில் வைத்து, சிறுவனைக் காவலுக்கு இருக்கச் செய்து, குளத்தில் மூழ்கினார் பெரியவர். அவர் மனதில் ஏமாற்ற உணர்ச்சி ஏற்பட்டு, 'என்ன குருவாயூர் இது... ஒரு மண்டலமாக விரதம் இருந்து வழிபாடு செய்றேன்; துளிக்கூட முன்னேற்றம் இல்ல. சரியாக நடக்க கூட முடியலயே...' என்று வெறுப்போடு மூழ்கி எழுந்தார்.
அதே நேரம், கரையில் பண மூட்டைக்குக் காவலாக இருந்த பையன், பண மூட்டையை தூக்கியபடி ஓடத் துவங்கினான்.
'டேய்... திருடன் திருடன்...' என்று கத்தியவாறு, அவனைத் துரத்தினார் முதியவர்.
பையன் ஓட, பின்னாலேயே முதியவர் ஓட, இருவருமாக மூன்று முறை கோவிலை வலம் வந்தனர். அதன்பின், கோவிலுக்குள் நுழைந்து, கொடிமரத்தைக் கடந்து, கருவறைக்குள் மறைந்த சிறுவன், குருவாயூரப்பனாக தரிசனம் தந்தார்.
திகைத்துப் போன முதியவர், 'குருவாயூரப்பா... என்ன நியாயம் இது... என் வாத நோயையும் குணமாக்கல; பணத்தையும் கொள்ளையடிச் சுட்டீங்களே..' என்று கண்ணீர் விட்டார்.
உடனே, குருவாயூரப்பன், 'பக்தா... உன் நோயை தீர்க்கவில்லை என்றால், நீ, எப்படி இவ்வளவு தூரம் என்னைத் துரத்தி ஓடி வந்திருக்க முடியும்...' என்றார்.
முதியவருக்கு அப்போது தான் உண்மை புரிந்தது. தன் வாதநோய் குணமாகி, கால்கள் நன்றாக இருப்பதை உணர்ந்தார். ஆனாலும், தன் பண மூட்டை போனது வருத்தத்தை கொடுத்ததால், 'பகவானே... என் கால்கள் குணமாகி விட்டது; ஆனால், என் பணம் போய் விட்டதே...' என்றார்.
'நீ ரோகம் போய், ஆரோக்கியம் வேண்டுமென்று கேட்டாய்; ஆரோக்கியம் கொடுத்தேன். உன்னைப் போலவே, ஓர் ஏழை, தன் மகள் திருமணத்திற்குப் பணம் வேண்டுமென்று, என்னை வேண்டிக் காத்திருந்தான். உன் பணத்தை, அவனிடம் கொடுத்தேன்...' என்றார் பகவான். உண்மையை உணர்ந்தார் முதியவர்.
இறைவனுக்குத் தெரியும். யாருக்கு, எப்போது, எதைக் கொடுக்க வேண்டுமோ, அப்போது அதைக் கொடுப்பார். அதனால், இறைவனை நினைப்போம்; இன்னல்கள் விலகி, சுகமாக இருப்போம்!

பி.என்.பரசுராமன்

திருமந்திரம்!
சன் மார்க்கச் சற்குரு சந்நிதி பொய்வரின்
நன் மார்க்கமும் குன்றி ஞானமும் தங்காது
தொன் மார்க்கம் மாய துறையும் மறந்திட்டுப்
பன் மார்க்கமும் கெட்டுப் பஞ்சமும் ஆமே
கருத்து: ஞானத்தைப் போதிக்கும் சத்குருவின் முன் பொய் சொல்லக் கூடாது. சொன்னால், அதுவரை, குருநாதர் காட்டிய நல்வழியெல்லாம் குன்றி, ஞானமும் தங்காது. குருவை அடைவதற்கு முன், ஏதேனும் நல்வழியை அறிந்திருந்தாலும், அதுவும் மறைந்து விடும். வழி தெரியாமல், பல திசைகளிலும் திகைப்பே மிஞ்சும். வறுமை, தானே வந்து சேரும்.

Advertisement

 



வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (2)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
P. SIV GOWRI - Chennai,இந்தியா
30-ஏப்-201511:19:20 IST Report Abuse
P. SIV GOWRI அருமை. இறைவனுக்குத் தெரியும். யாருக்கு, எப்போது, எதைக் கொடுக்க வேண்டும் என்பதை அறிவார் .குருவாயூர் கோவிலில் பால் பாயசம் பிரசாதம் கொடுப்பார்கள். ஒரு தம்பதியனர் இந்த பிரசாதம் கிடைக்குமா என்பதை கேட்டு கொண்டு இருந்தார்கள். ஆனால் தேவஸ்தானதில் இல்லை. ஆனால் அவர்கள் பிரகாரம் சுற்றி வரும்போது ஒரு குழந்தை பால் பாயாசம் கொண்டு வந்து அவர்களிடம் கொடுத்து தேவஸ்தானதில் கொடுத்தார்கள் என்று சொல்லி உள்ளது. பிறகு தான் தெரிந்தது தேவஸ்தானம் நிர்வாகம் கொடுக்கவில்லை.அந்த குழந்தையாக வந்தது குருவாயூர அப்பன்என்று. இது நடந்தது எப்போவோ இல்லை . ஒரு 70 வருடம் காலம் தான் இருக்கும். என் அம்மா சொல்ல கேட்டது. என்ன மகிமை.
Rate this:
Cancel
Rajan Stalin - Tokyo,ஜப்பான்
30-ஏப்-201509:46:00 IST Report Abuse
Rajan Stalin மிகவும் உண்மை.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X