அவர் வருவாரா?
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar advertisement tariff
 
Advertisement
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

26 ஏப்
2015
00:00

மே 2 - நரசிம்மர் ஜெயந்தி

திருமாலின் தசாவதாரங்களிலேயே, மனிதனாகவும் இல்லாமல், மிருகமாகவும் இல்லாமல் இரண்டும் கலந்து வடிவெடுத்தது நரசிம்ம அவதாரத்தில் தான். அதேபோன்று, மற்ற அவதாரங்களில் திருமால் சங்கு, சக்கரம் ஏந்தி வந்தார். இந்த அவதாரத்தில், தன் நகத்தையே ஆயுதமாகக் கொண்டார்.
'நரன்' என்றால் மனிதன்; 'சிம்மம்' என்றால் சிங்கம். சித்திரை மாதம் சதுர்த்தசி திதியில் அவதரித்தார் நரசிம்மர். சுவாதி நட்சத்திரத்தில் அவதரித்ததாகவும் சொல்வர்.
திருமாலை தரிசிக்க சனகர், சனாதனர், சனந்தனர் மற்றும் சனத்குமார் போன்றோர் வைகுண்டம் வந்தனர். ஆனால், காவலர்களான ஜெயன், விஜயன் ஆகியோர் வைகுண்டத்திற்குள் அனுமதிக்காமல் பிரச்னை செய்தனர். அவர்களின் செயல்களால் அதிருப்தி அடைந்த திருமால், 'பூலோகத்தில், நல்லவர்களாக, 100 பிறவிகள் எடுக்க வேண்டுமா அல்லது கெட்டவர்களாக மூன்று பிறவிகள் எடுக்க வேண்டுமா எதைத் தேர்ந்தெடுக்கிறீர்கள்...' என்று கேட்டார்.
அவர்கள், கெட்டதைத் தேர்ந்தெடுத்து, பூலோகத்தில் பிறந்தனர். அதில், ஒரு பிறவியில் அண்ணன் இரண்யாட்சனாகவும், தம்பி இரண்யனாகவும் பிறந்தனர்.
இரண்யன், திருமாலை நிந்தனை செய்தான். ஆனால், அவன் மகன் பிரகலாதனோ நாராயண பக்தனானான். இது, இரண்யனுக்குப் பிடிக்கவில்லை. பெற்ற பிள்ளையென்றும் பாராமல், அவனைக் கொல்லவும் துணிந்தான். ஒருமுறை தந்தைக்கும், மகனுக்கும் தர்க்கம் ஏற்படவே, 'இந்த தூணில் உன் நாராயணன் இருக்கிறானா?' எனக் கேட்டான் இரண்யன். 'ஆம்' என நம்பிக்கையோடு பிரகலாதன் சொல்லவே, தூணை உடைத்தான் இரண்யன். அதிலிருந்து வெளிப்பட்ட நரசிம்மர், இரண்யனை தன் நகங்களாலேயே கொன்றார்.
தசாவதாரங்களில் திருமாலுக்கே மிகவும் பிடித்தது நரசிம்மம் தான். அதனால் தான், சீனிவாசனாக (வெங்கடாஜலபதி) அவர் பூமிக்கு வந்த போது, நரசிம்மர் தங்கியிருந்த மலையைத் தேர்ந்தெடுத்தார்.
ரிஷபாசுரன் என்ற அசுரன், நரசிம்மரை நினைத்து தவமிருந்தான். நரசிம்மர் அவன் முன் தோன்றி, 'என்ன வரம் வேண்டும்?' என்று கேட்டார். 'உம்மோடு சண்டை போட வேண்டும்...' என்றான் ரிஷபாசுரன்.
நரசிம்மரும் சம்மதித்து சண்டையிட்டு அவனை வென்றார். உயிர் போகும் வேளையில், 'நரசிம்ம வடிவத்தை யாரொருவன் பார்த்துக் கொண்டே உயிர் விடுகிறானோ அவனுக்கு மோட்சம் நிச்சயம் என்பர். நான் உம்மைப் பார்த்தபடியே உயிர் விடுவதால், மோட்சம் செல்கிறேன். இந்த மலை, என் பெயரால், 'ரிஷபாத்ரி' என்று வழங்க வேண்டும்...' என்று வேண்டினான் ரிஷபாசுரன். நரசிம்மரும் சம்மதித்தார்.
அந்த ரிஷபாத்ரி மலை மீது தான், ஏழுமலையான் கோவில் கொண்டிருக்கிறார்.
'அநியாயம் நடக்கும் போது அன்று பூமியில் தோன்றிய நரசிம்மர், இன்று, பல இரண்யன்கள் பூமியில் அதர்மம் செய்து வரும் நிலையில், அவர்களைக் கொல்ல அவதாரம் எடுத்து வரவில்லையே...' என கேட்கலாம். இரண்யன்கள் இங்கு இருக்கின்றனர்; ஆனால், அவரை ஆத்மார்த்தமாக நம்பி அழைக்க ஒரு பிரகலாதன் கூட இங்கு இல்லை என்பதே நிஜம்.
நாட்டில் நடக்கும் அநியாயங்கள் குறைய நரசிம்மர் இங்கே வர வேண்டும்; அதற்காக, நாம் ஒவ்வொருவரும் அவரை தீவிரமாக நம்பும் பிரகலாதனாக மாற வேண்டும்!

தி.செல்லப்பா

Advertisement

 



வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (3)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Manian - Chennai,இந்தியா
02-மே-201500:03:48 IST Report Abuse
Manian மகாபாரதத்தை நன்றாக படியுங்காள். கண்ணன் எல்லா கொடியவர்களுக்கும் தகுந்த மாதிரி அவர்களை கொல்லவும் முன்னாலேயே எதிரிகளையும் படைத்து இருக்கிறான். அது மெதுவாகவே நமக்கு தெரிய வருகிறது. ஆகயால் நேரம் என்பது கூடி வரவேண்டும். லஞ்சாுரகள் கண்டிப்பாக ஒழிக்கப்படுவார்கள். நமது நேரமும் அவனது நேரமும் ஒன்றாக இருக்காது. அவனை முற்றிலும் நம்புங்கள். எப்பதோ ஒரு நல்லவன் :அல்லல் பட்டு ஆறாரத கண்ணீர் செல்வம் துடைக்கும் படைஎன்பது உண்மையாகும். திரு முருக்ாராஜ் எழுதும் மனிதர்களில் ஒருவராவது நல்ல பிரகலாதனாக இருப்பார்.
Rate this:
Cancel
Anantharaman - Porur, Chennai,இந்தியா
26-ஏப்-201509:07:32 IST Report Abuse
Anantharaman உண்மை செல்லப்பா சார்....இங்கு பிரகலாதனாய் இருக்க முயன்றாலும் இருக்க விடமாட்டார்கள்....எதுவும் அவன் மனதுவைத்தால் தான் முடியும்....
Rate this:
Cancel
N.Purushothaman - Kuala Lumpur ,மலேஷியா
26-ஏப்-201506:47:18 IST Report Abuse
N.Purushothaman ஓம் நமோ நாராயணாய நமஹ....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X