ஹாலிவுட்டில், எக்ஸ்மென் பட சீரியல்களில் ஓநாய் மனிதராக வந்து மிரட்டும் ஹியூக்ஸ் ஜாக்மேனை ஞாபகமிருக்கிறதா? கடந்த, 15 ஆண்டுகளில், ஏழு படங்களில் ஓநாய் மனிதராக நடித்துள்ள ஹியூக்ஸ்கிற்கு, ஓநாய் வேடம் போரடித்து விட்டதாம்.
இதனால், 'இனிமேல் அதுபோன்ற படங்களில் நடிப்பதை தவிர்க்க போகிறேன்...' என, அறிக்கை விடுத்துள்ளார். வரும், 2017ல், வெளியாகப் போகும் படம் தான், அவர், ஓநாய் மனிதராக நடிக்கும் கடைசிப் படமாக இருக்கும்.
ஆனால், 'ஓநாய் மனிதர் வேடத்துக்கு ஹியூக்ஸ்சை தவிர வேறு ஒரு நடிகரை நினைத்து கூட பார்க்க முடியாது...' என, ஹாலிவுட் ரசிகர்கள் மத்தியில் இப்போதே பேச்சு எழுந்துள்ளது.
— ஜோல்னாபையன்.