சீனாவில், 'டாட்டூஸ்' எனப்படும் பச்சை குத்தும் மோகம் உச்சகட்டத்தை அடைந்துள்ளது. மனிதர்களை தாண்டி, தற்போது மிருகங்களுக்கும் டாட்டூஸ் குத்தப்படுகிறது. அதிலும், வென் பன்றிகளுக்கு டாட்டூஸ் குத்துவதில், சீனர்களுக்கு அப்படி என்ன அலாதி பிரியமோ தெரியவில்லை.
பன்றிகளுக்கு மயக்க மருத்து செலுத்தி, அவை மயக்கமடைந்ததும், பிரபல கார்ட்டூன் கேரக்டர்களை பச்சை குத்துகின்றனர். இப்போதெல்லாம் சீனாவில் பன்றிகளை பார்க்கும்போது, நடமாடும் நவீன ஓவியக் கூடம் போல் காட்சி அளிக்கிறன. இந்த பன்றிகள் இறந்ததும், அவற்றின் தோல்கள், பல லட்சத்துக்கு விற்பனை செய்யப்படுகிறது.
— ஜோல்னாபையன்.