இது உங்கள் இடம்!
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
Advertisement
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

30 மே
2010
00:00

கள்ளனும், காப்பானும்!
சிங்கப்பூர் நகரம் சுத்தமாக இருக்கிறதென்றால், ரோட்டில் குப்பை கொட்டினால், அபராதம் என்ற சட்டம் மட்டும் காரணமல்ல... நகரை சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டுமென்ற மக்களின் மனோபாவமும் முக்கிய காரணம்.
தொட்டில் பழக்கம் சுடுகாடு மட்டும் என்ற பழமொழி மாதிரி, அரசு அலுவலகங்களுக்கு சரியான நேரத்தில் வருபவர்களை, "லேட்'டாக வரச் செய்யவோ, "லேட்'டாக வருபவர்களை சரியான நேரத்திற்கு வரச் செய்வதோ இயலாத காரியம். எங்கள் அலுவலகத்தில், அலுவலர்கள் சரியான நேரத்திற்கு வர வேண்டுமென்பதற்காக, கையெழுத்து போடும் பதிவேட்டிற்கு பதில், கைரேகை பதியும் இயந்திரம் வைக்கப்பட்டது; விளைவு?
சரியான நேரத்திற்கு வருபவர்கள், சரியான நேரத்திற்கு வருகின்றனர். வழக்கமாக, "லேட்'டாக வருபவர்களோ, சரியான நேரத்திற்கு முன்பாகவே வந்து, ரேகையைப் பதித்து விட்டு, சுற்றக் கிளம்பி விடுகின்றனர். அட்டென்டென்ஸ் பர்பெக்ட்; பெர்பாமென்ஸ் அப்செட்! மிஷினை வைத்தவர்கள், "பேய் முழி' முழித்துக் கொண்டிருக்கின்றனர்.
இதை, இதைத்தான், "கள்ளன் பெரிதா, காப்பான் பெரிதா...' என்கின்றனரோ... ஒவ்வொரு செக்ஷனிலும், குளோஸ் சர்க்யூட் கேமரா பொருத்தினாலாவது, உட்கார்ந்து வேலை செய்வரா அல்லது அதையும் எதிர் கொள்ள, உபாயம் ஏதும் கண்டுபிடிப்பரா?
— பெயர்,  ஊர்வெளியிட விரும்பாத அரசு அலுவலர்.
* * *
நீங்களும் சமாளிக்கலாமே!
என் நண்பர் ஒருவர், ஆயிரம், இரண்டாயிரம் ப்ளாட்டுகளை கட்டி, விற்கும் பெரிய நிறுவனத்திடம், நகருக்கு வெளியே ப்ளாட் வாங்கினார். எட்டு மாதம் ஆகியும், வாடகைக்கு ஆள் வரவில்லை. வாங்கிய வட்டிக் கடனுக்கான மாதாந்திர ஈ.எம்.ஐ., கட்ட முடியாமல், நண்பர் திணறினார். "தெரியாமல் வாங்கி விட்டேனே...' என்று நொந்து கொண்டார். கட்டிய ப்ளாட்க்களில், முக்கால் வாசி ப்ளாட்களுக்கு ஆள் வரவில்லை. இதை எப்படி சமாளிப்பது என, இந்தத் துறையில் அனுபவம் உள்ள ஒருவரை சந்தித்து, உதவி கேட்டேன். அவர் கொடுத்த இரண்டு வழிகள்:
* வாடகைக்காரர் நிச்சயம் வரும் அளவுக்கு வாடகையை குறைக்க வேண்டும்; இதனால், வாடகைக்கு ஆள் வருவர். அதே சமயம், சும்மா பூட்டி வைத்திருப்பதற்கு பதில், கணிசமாக பணம் கிடைக்கும்; வட்டித் தொகையையும் சமாளிக்கலாம்.
* கடன் கொடுத்த வங்கியிடம், ஈ.எம்.ஐ., காலத்தை, மேலும் சில ஆண்டுகள் நீட்டிக்க சொல்வதன் மூலம், அப்போதைக்கு கட்ட வேண்டிய தொகை குறையும்!
இத்தகவலை பாதித்த நண்பரிடம் கூறினேன். இதில் முதல் யோசனையை ஏற்று, வாடகையை குறைத்தார்; உடனே, வாடகைக்கு ஆள் வந்து விட்டனர். நீங்களும் இப்படி சமாளிக்கலாமே!
— ராஜி ராதா, பெங்களூரு.
* * *
சரிதான் போடா...

என்னுடைய ஆசிரிய நண்பருக்கு நேர்ந்த அனுபவம்... வண்டியில் செல்லும்போது, எதிர் வரும் வாகனத்தில், தேவையின்றி விளக்கு எரிந்தால், தன் விரல்களைக் குவித்தும், விரித்தும் சைகை செய்து, விளக்கு எரிவதை சுட்டிக் காட்டுவது அவரது வழக்கம். எதிரில் வருபவர்களும், விளக்கை அணைத்துவிட்டு, நன்றி சொல்வது வழக்கம். ஒருநாள், எதிரில் ஒரு கல்லூரி மாணவி, தன் ஸ்கூட்டியில் விளக்கு எரிந்து கொண்டிருந்த நிலையில் வந்தார். இவரும், வழக்கம் போல் தன் விரல்களை குவித்தும், விரித்தும் சைகை காட்ட, அப்பெண் அவரைப் பார்த்து முறைத்ததும் அல்லாமல், "சரிதான் போடா...' என்று திட்டியும் சென்றுவிட்டார்.
ஓய்வு பெற்றுவிட்ட அந்த ஆசிரியர், ஒரு நிமிடம் அதிர்ச்சியில் உறைந்தார். அவர் சைகையால் சுட்டிக் காட்டியதை, அந்தப் பெண் தவறாக புரிந்து கொண்டார் போலும். அன்றிலிருந்து, யார் வண்டியில் விளக்கு எரிந்தாலும், இவர் சைகை காட்டுவதில்லை. நல்லதுக்குக் காலமில்லை!
— வி.ரத்தின பாண்டியன், மதுரை.


* * *


Advertisement

 



வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X