22 ஏப்ரல் 2014: ஒரு டாக்டரின் டைரி குறிப்பு
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

29 ஏப்
2015
00:00

ராதா, அதிகபட்ச குழப்பத்திற்கிடையே என்னை சந்திக்க வந்திருந்தார். நிறைய மருத்துவர்களை சந்தித்து, எந்த தீர்வும் கிடைக்காததால், அவர், என்னிடம் வந்திருந்தார்.
ராதாவிற்கு பெரிய பிரச்னை எல்லாம் இல்லை. ஆனால் தினசரி கஷ்டப்படும் சூழ்நிலை. காரணம் 'சைனசைடிஸ். மழை வந்தாலோ அல்லது காற்றடித்தாலோ வானிலை மாறுவது போல ராதாவின் உடல்நிலையும் மாறிக்கொண்டே இருந்தது.
மூக்கடைத்து கொள்வதால், சுவாசிக்கவே சிரமப்பட்டு கொண்டிருந்தார். அதுமட்டுமில்லாமல், அவர் கர்ப்பம் தரித்திருந்தார். மற்ற மருத்துவர்களிடம் சென்று பார்த்தபோது தாய்மை அடைந்துள்ளதால், தற்போது எதுவும் செய்ய முடியாது என, கூறிவிட்டிருந்தனர். மேலும் காது, மூக்கு, தொண்டை நிபுணரை சந்திக்கவும் அறிவுறுத்தியிருந்தனர்.
அதனால் செய்வதறியாது என்னிடம் வந்தார். நானும் சில பரிசோதனைகள் செய்தேன். பரிசோதனையின் முடிவில் ராதா மூக்கின் உட்புறம் முழுவதும், சதை வளர்ந்து, அடைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
'சைனஸ்' எதனால் வருகிறது? மூக்கில் 'சைனஸ்' பகுதி இணையும் இடத்தில் காற்று இல்லாமல், சளி சேர்ந்து தடை ஏற்பட்டு 'சைனசைடிஸ்' வருகிறது. அதுமட்டுமல்ல, மூக்கு துவாரத்தை பிரிக்கும் எலும்பு, வளைவாக இருப்பதாலும், 'சைனஸ்' பகுதிக்கு அருகிலுள்ள எலும்பு மற்றும் சதைகளின் முறையற்ற வளர்ச்சியாலும், 'சைனஸ்' வருகிறது,
மூக்கில், ' சைனசைடிஸ்' மற்றும் ஒவ்வாமை இருப்போரின், 'சைனஸ்' அறைகளில் உள்ள சதை, மூக்கு துவாரத்தின் வெளியேயும், பின்புறத்திலும் வளர்ச்சியடையும். அது, 'பாலிப்' எனப்படும். இந்த நோயின் ஆரம்பகாலம் என்றால், மருந்து மாத்திரைகள் மூலம் குணப்படுத்தலாம். நோய் தீவிரம் அடைந்தால், அறுவை சிகிச்சை மட்டுமே தீர்வு.
கன்னம், நெற்றி பகுதியில் கடுமையான வலி, இதன் அறிகுறி. தலை குனிந்தால் தாங்க முடியாத தலைவலி இருக்கும். ஒவ்வாமையுடன், 'சைனஸ்' இருந்தால், தொடர்ச்சியான தும்மல் இருக்கும்.
ராதாவிற்கு, மருந்துகள் மூலம் மட்டுமே, பிரச்னையை சரி செய்ய தீர்மானித்து, பாதுகாப்பான 50 மைக்ரோ மில்லி கிராம் கொண்ட, 'ஸ்டீராய்டு' மருந்துகள் சில நாட்களுக்கு கொடுத்தும், மூக்கிற்கு சரியான 'ஸ்பிரே' கொடுத்தும், அவரது பிரச்னை, அறுவை சிகிச்சை இல்லாமலேயே சரி செய்யப்பட்டது. சிகிச்சை முடிந்து இரண்டு ஆண்டுகள் கடந்தும் 'சைனஸ்' பிரச்னை இல்லாமல் இருக்கிறார் ராதா.

- சங்கர் நாராயணமூர்த்தி
காது, மூக்கு, தொண்டை பிரிவு பேராசிரியர்
ராஜிவ் காந்தி அரசு பொது மருத்துவமனை, சென்னை
9444 468277

Advertisement

 வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (1)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
skv - Bangalore,இந்தியா
03-மே-201505:56:29 IST Report Abuse
skv<srinivasankrishnaveni> டாக்டரையா வணக்கம், சில டாக்டருங்க நோயாளிக்கு எதனால் ச்டீரய்ட் தராங்க விளக்கம் தேவை. என் தோழிக்கு ஓரு டாக்டர் இதை தந்தாரு. இன்று அவள் அவ்ளோ கஷ்டம் படுறா. நம்ப மாட்டீங்க ஒரு வேளைக்கி 18 மாத்திரைகள் விளுங்குரா. பாவம் உணவு எதுவுமே இறக்கமில்ல , ஆனால் உடம்பு ஏகமா பெருத்து விட்டது , உடல் எடைய குரையுங்க என்ற ஒரே அட்வைஸ் தான் எல்லா dr tamum. என்ன வ்யாதின்னே கண்டு பிடிக்க தெரியாமல் இருக்கும் டாக்டர்காளிடம் மாட்டிண்டு தவிக்குரா 3 வருஷமா. பாவமா இருக்கு . டபுள் காதலே 2/3 அவளுக்கே தான் வேண்டும். அவ்ளோ பருமன் ஆயிட்டா. சாதம்னா 2 அற 3டெபில் ஸ்பூன் தயிர்தவிர வேறு எதுவும் இல்லே வாய்புன்களால் அவதி இப்போ மாத்திரைகளின் சைட் அபெக்ட் உடம்புமுழுக்க நீர் கொப்புளங்கள் கிளம்பிட்டுருக்கு , வலி தாங்கலேன்னு அலற்ராங்க , டாய்லெட் போயிட்டுவந்தாலே அலறல்த்தான் பாவம் ஓவரா மருந்துதந்தே டாக்டர் அவள்ளை சித்ரவதை செய்றா, அவ படும்பாடு காணசகிக்களே ஆசன்வாஎல்லாம் கட்டிகள்தான் இவ்ளோ துயரத்துலேயும் கில்லே யும் பலன்சே இழந்து விழுந்தடராலாம் , எதுக்கு ச்டீரைடு தந்து டாக்டர்கள் படுத்தறாங்க பேட்ரிட்டேன் ஆயிட்டா , 67வயது நேக்கு தெரிஞ்சு ஜுரம்னுகூட படுத்ததே இல்லே அவ , ஆனால் இன்று அவள் படும் அவதி அவ்லொகொடூரமா இருக்கு எதனால் டாக்டர்கள் இப்படி ட்ரீட்மென்ட் தராங்க
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X