சாம்சங் நிறுவனத்தின் ஜே வரிசையில் மேலும் இரு மொபைல் போன்கள் வர உள்ளன. இவை ஜே5 மற்றும் ஜே7. இறுதியாக, சென்ற பிப்ரவரி மாதம் கேலக்ஸி ஜே1 ஸ்மார்ட்போன் விற்பனைக்கு அறிமுகப்படுத்தப்பட்டது. தற்போது அறிமுகமாகும் இரு ஸ்மார்ட் போன்களும், மத்திய நிலையில் இடம் பெறுபவை.
இந்த இரண்டு ஸ்மார்ட் போன்களின் அம்சங்கள் குறித்து தகவல்கள் வெளி வந்துள்ளன. கேலக்ஸி ஜே 5 ஸ்மார்ட் போன், 5 அங்குல HD TFT LCD டிஸ்பிளே திரை கொண்டது. இதன் ப்ராசசர் குவால்காம் ஸ்நாப் ட்ரேகன் 410 ப்ராசசர். இதன் ராம் மெமரி 1.5 ஜி.பி. இதன் ஸ்டோரேஜ் மெமரி 8 ஜி.பி. இதனை மைக்ரோ எஸ்.டி. கார்ட் கொண்டு அதிகப்படுத்தலாம். இதன் லித்தியம் அயன் பேட்டரி 2,600 mAh திறன் கொண்டது.
கேலக்ஸி ஜே7 ஸ்மார்ட் போன், 5.5 அங்குல அளவில் HD TFT LCD டிஸ்பிளே திரை கொண்டதாக இருக்கும். இதில் 1.5 கிகா ஹெர்ட்ஸ் அல்லது 1.2 கிகா ஹெர்ட்ஸ் திறன் கொண்ட மார்வெல் ப்ராசசர் இடம் பெறும். இதன் ராம் மெமரி 1.5 ஜி.பி. ஸ்டோரேஜ் நினைவகம் 4 அல்லது 8 ஜி.பி. இதனை மைக்ரோ எஸ்.டி. கார்ட் கொண்டு அதிகப்படுத்தலாம். இதில் 3,000 mAh திறன் கொண்ட பேட்டரி தரப்படுகிறது.
இந்த இரண்டு ஸ்மார்ட் போன்களிலும் 13 எம்.பி. திறன் கொண்ட பின்புற பேட்டரியும், 5 எம்.பி. திறன் கொண்ட முன்புறக் கேமராவும் இடம் பெறுகின்றன.
இந்த இரண்டு போன்களும் ஆண்ட்ராய்ட் 5.1 சிஸ்டத்தில் இயங்கும். ஜே5 ஸ்மார்ட் போனின் தடிமன் 8.5 மிமீ ஆகவும் ஜே7 போனின் தடிமன் 7.9 மிமீ ஆகவும் இருக்கும்.