கேள்வி- - பதில்
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

03 மே
2015
00:00

கேள்வி: கேஷ் மெமரி என்பது நாம் கம்ப்யூட்டரை அணைத்த பின்னர் நீங்கிவிடுமா? அல்லது அதனைத் தொடர்ந்து தக்க வைக்க, ஆப்பரேட்டிங் சிஸ்டத்தில் வழி உள்ளதா? இதனை புதுப்பிக்க முடியுமா?

என். பூபதி, புதுச்சேரி.
பதில்: உங்களின் நீண்ட கடிதம் பல வரிகளில் ஒரே விஷயத்தை, அதாவது கேஷ் மெமரி, குறித்து கேட்டுள்ளது. இதனை அனைவரும் அறிய வேண்டும் என்பதால், சற்று விரிவாக இதனைப் பார்க்கலாம். நாம் கம்ப்யூட்டரில் பயன்படுத்தும் அனைத்து பிரவுசர்களும் வெப் கேஷ் (Web cache) என்ற ஒரு டூலைப் பயன்படுத்துகின்றன. இது நீங்கள் சந்தேகப்படுவது போல தற்காலிகம் தான். இதில் நம்முடைய அனைத்து இணையப் பயன்பாடுகளும் பதியப்படுகின்றன. பார்த்த தளங்கள், தேடிய தகவல்கள், குறியீடுகள், இன்னும் பிற தகவல்கள் பதியப்படுகின்றன. இதனால், அதே தளங்களுக்கு நாம் மீண்டும் செல்கையில், இந்த பதிவு செய்யப்பட்ட கோப்பிலிருந்து நாம் செல்லும் தளப் பக்கங்கள் விரைவாக நமக்குக் கிடைக்கும். அதற்கு இந்த தற்காலிக ஸ்டோரேஜ் வசதி பயன்படுகிறது. அந்த தளங்கள் அப்டேட் செய்யப்பட்டிருந்தால், அவை தங்கியுள்ள சர்வரிலிருந்து தகவல்கள் பெறப்பட்டு கிடைக்கும். இதனால், நமக்கு விரைவாக இணையப் பயன்பாடு கிடைக்கிறது. இது போல பழைய அமைப்பில், புதிய தகவல்களையும் இணைக்க நாம் இணைய கேஷ் மெமரியை ரெப்ரெஷ், அதாவது புதுப்பிக்க, வேண்டியுள்ளது. இதற்கான பொதுவான ஷார்ட் கட் கீ CTRL+F5. இதில், F5 மட்டும் பயன்படுத்தினால், அந்தப் பக்கம் மட்டும் புதுப்பிக்கப்படும். கண்ட்ரோல் இணைத்து செயல்படுத்துகையில், பிரவுசரிடம், அந்த தளம் உள்ள சர்வருக்குச் சென்று, புதிய பக்கத்தை எடுத்து வா எனக் கட்டளையிடும்.

கேள்வி:
விண்டோஸ் 7 சிஸ்டத்தில், வேர்ட் 2007 பயன்படுத்தி வருகிறேன். இதில் டாகுமெண்ட்களில் டேபிள்களை உருவாக்கிய பின்னர், நம் தேவைக்கேற்ப அவற்றைப் பிரித்து அமைக்க முடிவதில்லை. இதனை எப்படி மேற்கொள்ளலாம்?
கா.சிக்கந்தர், பொட்டல்புதூர்.
பதில்: டேபிள் எடிட்டர் என்ற டூலைப் பயன்படுத்தி நீங்கள் விரும்பும் வேலையை மேற்கொள்ளலாம். வேர்ட் 2007ல், இது தரப்பட்டுள்ளது. இதன் வழியாக, நீங்கள் உங்கள் டேட்டாவினை, அழகான, வசதியான டேபிளில் அமைக்கலாம். பொதுவாக மிகப் பெரிய டேபிளை நாம் உருவாக்கினால், ஒரு நிலையில் அதனைப் பிரித்து அமைக்க திட்டமிடுவோம். அந்த தேவையினை நிறைவேற்றும் வழி முறைகளைப் பார்க்கலாம்.
1. எந்த படுக்கை வரிசையிலிருந்து டேபிளைப் பிரித்து, அதனை முதல் வரிசையாக அமைக்க வேண்டும் எனத் திட்டமிடுகிறீர்களோ, அந்த வரிசையில் கர்சரைக் கொண்டு சென்று வைக்கவும்.
2. அடுத்து ரிப்பனில் Layout டேப்பினைத் தேர்ந்தெடுக்கவும். டேபிளின் உள்ளாக உங்கள் கர்சர் இருந்தால் தான், இந்த டேப்பினைப் பார்க்கலாம்.
3. அடுத்து Merge group குரூப் உள்ளாக உள்ள Split Table டூலைக் கிளிக் செய்திடவும்.
4. உடன் வேர்ட், சாதாரணமாக அமைக்கப்படும் பாரா போன்ற பார்மட் ஒன்றினை, அந்த வரிசைக்கு முன்பாக இணைக்கும். இதனால், இரண்டு டேபிள்கள் தனித்தனியாக அங்கே உருவாக்கப்படும்.

கேள்வி: மொபைல் போன்களில் பயன்படுத்தப்படும் சிம் கார்டுகளில், சாதாரண சிம், மைக்ரோ சிம் மற்றும் நானோ சிம் எனக் கூறுகிறார்கள். நான் ஒரு ஸ்மார்ட் போன் வாங்கி, அதற்கான மைக்ரோ சிம் வாங்கச் சென்றேன். தொலைபேசி வாடிக்கையாளர் பிரிவைச் சேர்ந்தவர் என் மொபைல் எது எனக் கேட்டு, அதற்கு நானோ சிம் தான் பொருத்த வேண்டும் எனக் கூறி, நானோ சிம் தந்தார். அது பொருத்தப்பட்டு இயங்குகிறது. இவற்றிற்கிடையேயான வேறுபாடு என்ன?
என். பூரணலிங்கம், முத்தியால்பேட்டை, புதுச்சேரி.
பதில்: நீங்கள் சொல்வது சரியே. மொபைல் போனுக்கான சிம்களில், முதலில் 1991 ஆம் ஆண்டு முழு அளவிலான சிம் 85.60 மிமீ நீளத்தில் வெளி வந்தது. இதனை (1FF) என அளவு கூறுவார்கள். அடுத்து, 1996ல், (2FF) தர அளவில், 25 மிமீ நீளத்தில், மினி சிம் 1996ல் வெளியானது. மைக்ரோ சிம் (3FF), 2003 ஆம் ஆண்டில், 15 மிமீ அளவில் வெளியானது. நானோ சிம் (1FF) என்ற வரையறை அளவில், 12.30 மிமீ நீளத்தில், 2012 ஆம் ஆண்டில் வெளியானது. முதல் மூன்று சிம்களுக்கும் தடிமன் 0.76 மிமீ ஆகவும், நானோ சிம் தடிமன் 0.67 மிமீ ஆகவும் உள்ளது. இந்த தகவல் தொழில் நுட்ப உலகத்தில், ஏறத்தாழ கடந்த 25 ஆண்டுகளாக, மாறா நிலையில் உள்ளது இந்த மொபைல் சிம் தான். முதல் முதலில் வந்த (1FF) வரையறை கொண்ட சிம் ஒரு கிரெடிட் கார்ட் அளவில் இருந்தது. பின்னர், இதன் நீள, அகலம் தான் மாறி உள்ளதே தவிர, இதன் வடிவம் மாறவே இல்லை.

கேள்வி: முன்பு ஒருமுறை நீங்கள் கொடுத்த டிப்ஸ் பின்பற்றி, வேர்டில் தயாரிக்கப்படும் டாகுமெண்ட்களுக்கு, தானாக பேக் அப் பைல்கள் உருவாகும்படி அமைத்தேன். இந்த பேக் அப் பைல்களை எங்கு போய் எடுப்பது? எனக்கு இப்போது அவசரத் தேவையாய் ஒரு பைல் தேவைப்படுகிறது. வழி காட்டி உதவவும்.
எஸ். கீர்த்தனா, கோவை.

பதில்: வழக்கமாக டாகுமெண்ட் ஒன்றை எப்படிப் பெறுகிறீர்களோ, அதே போல் தான், பேக் அப் பைல்களையும் பெறலாம். கீழ்க்கண்டபடி செல்லவும்.
1. Open டயலாக் பாக்ஸை முதலில் திறக்கவும். வேர்ட் 2007 பயன்படுத்தினால், ஆபீஸ் பட்டன் அழுத்தி Open என்பதில் கிளிக் செய்திடவும். வேர்ட் 2010 எனில், ரிப்பனில் பைல் டேப்பினைத் தட்டில் அதில் Open என்பதில் கிளிக் செய்திடவும்.
2. இங்கு File Name பாக்ஸின் வலது பக்கம் உள்ள கீழ்விரி மெனுவினைத் திறந்து, All Files என்பதனைத் தேர்ந்தெடுக்கவும். இதனால், Open டயலாக் பாக்ஸ், அனைத்து போல்டரில் உள்ள அனைத்து பைல்களையும் காட்டும்.
3. டயலாக் பாக்ஸில் உள்ள கண்ட்ரோல்களைப் பயன்படுத்தி, பேக் அப் பைல்கள் உள்ள போல்டரைக் கண்டறியவும்.
4. இங்கு "Backup of" என்று தொடங்கும் பைல் பெயர் பார்த்து திறக்கவும். இங்கு பேக் அப் பைல்கள் அனைத்தும் இருக்கும்.
5. அதில் உங்களுக்குத் தேவையான பைலைக் கண்டறிந்து தேர்ந்தெடுக்கவும்.
6. பின்னர் ஓகே கிளிக் செய்தால், பேக் அப் பைல் கிடைக்கும்.
கேள்வி: சில பைல்களை “ரீட் ஒன்லி” என வகைப்படுத்தப்பட்டு அமைகின்றன. சில வேளைகளில், பைல்கள் தாமாகவே, ரீட் ஒன்லி பைலாக அமைந்துவிடுகின்றன. ஏன் இவ்வாறு பைல்கள் குறிப்பிடப்படுகின்றன. இவற்றை எடிட் செய்திட முடியவில்லையே, ஏன்?
ஆர். நிரஞ்சனா, திருப்பூர்.

பதில்: 'ரீட் ஒன்லி' (read-only file) பைல் என குறியிடப்பட்ட பைலை நீங்கள் திறந்து பார்க்கலாம். ஆனால், அதனை எடிட் செய்து, மாற்றங்களை ஏற்படுத்தி, அதே பெயரில் சேவ் செய்திட முடியாது. நாம் உருவாக்கிய ஒன்றை வேறு யாரும் மாற்றங்களை ஏற்படுத்திவிடாமல் இருக்கவும், நாமே நம்மை அறியாமல் மாற்றங்களை ஏற்படுத்திடாமல் இருக்கவும், இந்த வசதி நமக்கு உதவுகிறது. ஆனால், நீங்கள் குறிப்பிடுவது போல, தாங்களாகவே அவை இந்த வகைக்கு மாற்றிக் கொண்டால் என்ன செய்வது?
சில வேளைகளில், நம் கம்ப்யூட்டரைப் பயன்படுத்தும் வேறு ஒருவர், வேர்டில் பைல்கள் சேவ் செய்யப்படும் தன்மையினை மாற்றி இருக்கலாம். read-only வகையில், அனைத்து பைல்களும் சேவ் செய்திடும் வகையில் அமைத்திருக்கலாம். இதனை அறிய, வேர்டில் Save As dialog box செல்லவும். அதன் பின்னர் Tools | General Options எனச் செல்லவும். இங்கு Read-Only Recommended என்ற ஆப்ஷன் தான், பைல்கள் இவ்வாறு சேவ் செய்திடும் நிலையை அமைக்கிறது. இதனைப் பார்த்து நாம் விரும்பும் வகையில் மாற்றி அமைக்கலாம்.
இன்னொரு வழியிலும் இவ்வாறு அமைக்கப்பட்டிருக்கலாம். உங்கள் வேர்ட் டாகுமெண்ட்களை நீங்கள் ஒரு நெட்வொர்க்கில் அமைக்கப்பட்டிருக்கும் கம்ப்யூட்டரில் உருவாக்கியிருக்கலாம். அவை நெட்வொர்க்கில் இணைக்கப்பட்டிருக்கும் மற்ற கம்ப்யூட்டர் இயக்குபவர்களால், கையாளப்படலாம். ஒருவர் டாகுமெண்ட் ஒன்றைத் திறந்து பயன்படுத்திக் கொண்டிருந்தால், அதே டாகுமெண்ட்டினை நீங்களும் பயன்படுத்தத் தொடங்குகையில், நிச்சயமாக அது ரீட் ஒன்லி என்றுதான் காட்டும். நீங்கள் முன்னவர் முடிக்கும் வரை காத்திருக்க வேண்டும்.
சில நேரங்களில், அந்த பைல் வைக்கப்பட்டிருக்கும் போல்டர் Read-Only போல்டராக இருக்கலாம். விண்டோஸ் எக்ஸ்புளோரர் சென்று, அந்த போல்டரின் தன்மையைக் கண்டறிந்தால், இதனை உறுதி செய்திடலாம். ஒரு குறிப்பிட்ட பைல் ரீட் ஒன்லியாக உள்ளது; அதனை மாற்ற வேண்டும் என நினைத்தால், அந்த பைலைத் திறந்து, அதில் உள்ள அனைத்து வரிகள் மற்றும் படங்கள் அனைத்தையும், கண்ட்ரோல் + ஏ கொடுத்துத் தேர்ந்தெடுக்கவும். புதிய டாகுமெண்ட் ஒன்றைத் திறந்து, காப்பி செய்ததை ஒட்டவும். இப்போது இந்த புதிய டாகுமெண்ட்டை நீங்கள் புதியதாக ஒரு பெயரில் சேவ் செய்திடலாம். அல்லது பழைய பைலை அழித்துவிட்டு, அதே பெயரில் சேவ் செய்து கொள்ளலாம்.

கேள்வி:
யு ட்யூப் தளத்தில் உள்ள விடியோ காணொளிக் காட்சிகளை நம் கம்ப்யூட்டரில் இறக்கி சேவ் செய்திடப் பல இணைய தளங்கள் உதவுகின்றன. ஆனால், பேஸ்புக்கில் பதியப்பட்டுள்ள விடியோக்களை அதே முறையில் சேவ் செய்திட இயலவில்லை. இதற்கென இயங்கும் தள முகவரிகளையும், அவற்றில் எப்படி செயல்பட்டு இந்த வீடியோக்களைத் தரவிறக்கம் செய்திடலாம் என்பதனை விளக்கவும்.
ஆ. பஞ்சாபிகேசன், சேலம்.
பதில்: எந்த சாப்ட்வேர் தொகுப்பும், இணைய தள உதவியும் இதற்குத் தேவை இல்லை. பேஸ்புக் தளத்தில் பதியப்பட்டுள்ள எந்த வீடியோ தேவையோ, அதனை இயக்கவும். தவறு எதுவும் ஏற்படாமல் இருக்க, அதனைப் பதித்தவர் பக்கம் சென்று, அந்த விடியோவினை இயக்கலாம். இயங்கும் போது, அதன் தள முகவரியில், www என்பதற்குப் பதிலாக 'm' என அமைக்கவும். இவ்வாறு அமைத்தவுடன், பேஸ்புக்கின் மொபைல் தளத்திற்கு நீங்கள் இட்டுச் செல்லப்படுவீர்கள். இங்கு மறுபடியும் கிளிக் செய்து, விடியோவினை இயக்கவும். விடியோ இயக்கப்படுகையில், நீங்கள் உங்கள் பெர்சனல் கம்ப்யூட்டர் திரையில், விடியோவின் மீது, ரைட் கிளிக் செய்திடவும். கிடைக்கும் மெனுவில், "save video as" என்பதில் கிளிக் செய்திடவும். உடனே சேவ் செய்திட வேண்டிய ட்ரைவ், போல்டர் காட்டப்படும். உங்களுக்கு விருப்பம்
இருந்தால், வேறு போல்டருக்கு மாறிக் கொள்ளலாம். பின் சேவ் பட்டனை அழுத்த, அந்த விடியோ, நீங்கள் உங்கள் கம்ப்யூட்டரில் தேர்ந்தெடுத்த இடத்தில் இந்த காணொளி சேவ் செய்யப்படும்.

கேள்வி:
சில டாகுமெண்ட்களின் பிரிண்ட் அவுட் எனக்குக் கிடைக்கும்போது, அதன் இறுதிப் பக்கத்தில், அந்த டாகுமெண்ட் தயாரித்தவர் பெயர், வகை, எத்தனை கேரக்டர், நாள் போன்ற தகவல்கள் அச்சாகி வருகின்றன. ஆனால், நான் அச்செடுக்கையில், ஏன், பெரும்பாலானவர்கள் அச்செடுக்கையில் இந்த தகவல்கள் அச்சாவதில்லை. இதனை அச்சிட என்ன செட்டிங்ஸ் ஏற்படுத்த வேண்டும்?
கா. துரைச்சாமி, மதுரை.
பதில்: நாம் டாகுமெண்ட்களைத் தயாரிக்கையில் நம் டெக்ஸ்ட் மற்றும் பார்மட்டிங் தவிர, டாகுமெண்ட் குறித்த மேலதிகத் தகவல்களையும், வேர்ட் சேவ் செய்து வைத்துக் கொள்கிறது. இந்த மேலதிகத் தகவல்கள் எனப்படுபவற்றை document properties என அழைக்கிறோம். இதில் பைல் பெயர், டாகுமெண்ட் தயாரிப்பு சார்ந்த தேதிகள், சொற்கள், கேரக்டர்கள் மற்றும் இது போன்ற புள்ளி விபரங்கள் இருக்கும்.
பொதுவாக நாம் டாகுமெண்ட்டினை அச்செடுக்கையில், இந்த விபரங்கள் அச்சாகாது. இவையும் தேவை எனில், கீழ்க்கண்ட செட்டிங்ஸ் அமைப்பினை ஏற்படுத்தவும்.
1. வேர்ட் ஆப்ஷன்ஸ் டயலாக் பாக்ஸைத் திறக்கவும். வேர்ட் 2007ல், ஆபீஸ் பட்டன் அழுத்தி, அதன் பின்னர், Word Options என்பதில் கிளிக் செய்திடவும். வேர்ட் 2010ல், ரிப்பனில், பைல் டேப் தேர்ந்தெடுத்து, பின்னர், Options என்பதைக் கிளிக் செய்திடவும்.
2. தொடர்ந்து டயலாக் பாக்ஸின் இடது பக்கம் உள்ள Display என்பதில் கிளிக் செய்திடவும்.
3. இங்கு Print Document Properties என்ற செக்பாக்ஸில் டிக் அடையாளத்தை ஏற்படுத்தவும்.
4. தொடர்ந்து ஓகே கிளிக் செய்து வெளியேறவும். இனி, எந்த டாகுமெண்ட் அச்சடித்தாலும், இறுதியாக, அந்த டாகுமெண்ட் குறித்த மேலதிகத் தகவல்களும் தனிப் பக்கமாக அச்சடிக்கப்படும். இது தேவை இல்லை எனக் கருதினால், இங்கு சுட்டிக் காட்டியபடி சென்று, குறிப்பிட்ட செக் பாக்ஸில், டிக் அடையாளத்தினை எடுத்துவிடவும்.

Advertisement

 

மேலும் கம்ப்யூட்டர் மலர் செய்திகள்:Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X