கேள்வி - பதில்
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

18 மே
2015
00:00

கேள்வி: விண்டோஸ் 10 ஒரு கோடி சாதனங்களில் இயங்க வைக்க இலக்கு கொண்டுள்ளதாக, மைக்ரோசாப்ட் அறிவித்துள்ளது. விரைவில் விண்டோஸ் 10 வர உள்ளது. திருட்டு நகலாக முந்தைய விண்டோஸ் இருந்தாலும், விண்டோஸ் 10 பதிய அனுமதிக்கப்படும் எனவும் அதுவும் இலவசம் எனவும் அறிவித்துள்ளது. அப்படியானால், விண்டோஸ் 7 /8 /8.1 மற்றும் முந்தைய விண்டோஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டங்களுக்குத் தரப்பட்டு வரும் பாதுகாப்பு பைல்கள், சப்போர்ட் உடனே நிறுத்தப்பட்டுவிடுமா?
என். ரத்னமாலா, திருப்பூர்.
பதில்
: தங்கள் சந்தேகம் நியாயமானதே. விண்டோஸ் எக்ஸ்பிக்கான சப்போர்ட் முழுமையாக நிறுத்தப்பட்டதனால், விண்டோஸ் பயன்படுத்தும் அனைவருக்கும் இந்த சந்தேகம் மட்டுமின்றி, பயமும் மனதில் ஏற்பட்டுள்ளது. இது போல பல வாசகர்கள் கடிதங்களை எழுதி உள்ளனர். பொதுவாக, ஓர் ஆப்பரேட்டிங் சிஸ்டம் வெளியான பின்னர், மைக்ரோசாப்ட் பத்து ஆண்டுகளுக்கு அதற்கான சப்போர்ட் பைல்களைத் தருவது வழக்கம்.
எனவே, கீழே தந்துள்ளபடி, மைக்ரோசாப்ட் தனது சப்போர்ட் பைல்களை வழங்கும்.
1. விண்டோஸ் விஸ்டா ~ ஏப்ரல் 11, 2017 வரை.
2. விண்டோஸ் 7 ~ ஜனவரி 14, 2020 வரை.
3. விண்டோஸ் 8 ~ ஜனவரி 10, 2023 வரை.

கேள்வி: கம்ப்யூட்டர் தயாரிப்பில், ஓ.இ.எம். (OEM) நிறுவனங்கள் என எவற்றை அழைக்கிறோம். அடிக்கடி, தயாரிப்பு குறித்த தகவல்களைப் படிக்கையில், இந்த சுருக்குச் சொல்லைக் காண்கிறேன். விளக்கம் அளிக்கவும்.
என். ஜெயராமன், லால்குடி.
பதில்:
OEM என்பது Original Equipment Manufacturer என்பதன் சுருக்கமாகும்.
கம்ப்யூட்டர் தயாரிப்பில் இருக்கும் நிறுவனங்கள், அதற்கு வேண்டிய அனைத்து பொருட்களையும், அவர்களே தயாரிப்பதில்லை. மவுஸ் மற்றும் கீ போர்டினை லாஜிடெக் தரலாம். ஹார்ட் டிஸ்க்கினை ஸீ கேட் நிறுவனம் வழங்கலாம்; இதே போல சிப் செட் ஒரு நிறுவனத்தாலும், அதில் அமையும் சிறிய மின் விசிறி இன்னொரு நிறுவனத்தாலும், எஸ்.எம்.பி.எஸ். என்னும் மின் சக்தியைக் கையாளும் சாதனம் பிறிதொரு நிறுவனத்தாலும் வழங்கப்படலாம். இவற்றை அந்த நிறுவனங்களிடமிருந்து, தங்கள் தேவைக்கேற்ப மொத்தமாக வாங்கி, தங்கள் தொழிற்சாலையில் வைத்து, முறையாக இணைத்து, தங்கள் நிறுவனப் பெயரில் விற்பனை செய்திடும் நிறுவனங்களே ஓ.இ.எம். நிறுவனங்கள் என அழைக்கப்படுகின்றன. சில நிறுவனங்கள், இவை பொருட்களை அதிகமாக வாங்குவதால், வாங்கும் நிறுவனத்தின் பெயரில் இவற்றை வழங்கும். பொருட்களில், கம்ப்யூட்டரைத் தயாரிக்கும் நிறுவனத்தின் பெயர் பொறிக்கப்பட்டிருக்கும். சில நிறுவனங்கள், இது போன்ற ஏற்பாட்டிற்கு ஒத்துக் கொள்ளாமல், தங்கள் நிறுவனப் பெயரினையே பொறித்து வழங்கும். கார்களும் இதே போல் தான் தயாரிக்கப்படுகின்றன.

கேள்வி: விண்டோஸ் 7 சிஸ்டம் பயன்படுத்துகிறேன். இதில் ஹெல்ப் எனப்படும் உதவிக் குறிப்புகள் மிகச் சிறிய அளவில் காட்டப்படுகின்றன. இதன் அளவைப் பெரிதாக்க முடியுமா? முடியும் என்றால் அதற்கான விளக்கக் குறிப்பினைத் தருமாறு கேட்டுக் கொள்கிறேன்.
என். குமாரவேல், அய்யம்பாளையம்.
பதில்:
”ஹெல்ப்” எனப்படும் உதவிக் குறிப்புகள் மாறா நிலையில் மிகச் சிறியதாக இருப்பது, பலருக்கு சிரமத்தினை அளிப்பதாக உள்ளது. இதனை மாற்றலாம். டெஸ்க் டாப் சென்று, எப்1 கீ அழுத்தவும். (வேறு அப்ளிகேஷனில், எடுத்துக் காட்டாக, வேர்ட் திறந்திருக்கையில் அழுத்தினால், அந்த அப்ளிகேஷனுக்குண்டான ஹெல்ப் விண்டோ கிடைக்கும்). இப்போது Windows Help and Support என்று ஒரு சிறிய விண்டோ கிடைக்கும். இந்த விண்டோவில் வலது ஓரத்தில் "Options" என்னும் பட்டன் காட்டப்படும். இதில் கிளிக் செய்தால், கிடைக்கும் மெனுவில் "Text Size" என்னும் ஒரு பிரிவு இருப்பதைக் காணலாம். இதில் கிளிக் செய்தால், Largest, Larger Medium, Smaller மற்றும் Smallest என ஐந்து வகைகள் காட்டப்படும். இதில் மாறா நிலையில் இருப்பது Medium. இனி, நீங்கள் விரும்பும் வகையினைத் தேர்ந்தெடுத்து, கிளிக் செய்துவிட்டு வெளியேறவும். நீங்கள் விரும்பிய அளவில் எழுத்துகள் இனி அமைந்திருக்கும்.

கேள்வி: நான் அதிகம் மேக் கம்ப்யூட்டர் பயன்படுத்தி வந்தேன். இப்போது விண்டோஸ் 7 சிஸ்டம் கொண்ட லேப்டாப் கம்ப்யூட்டர் பயன்படுத்துகிறேன். மேக் கம்ப்யூட்டரில் உள்ளது போல, விண்டோஸ் தரும் டாஸ்க் பாரினை, என் விருப்பப்படி, இடது, மேல், வலது என அமைக்க முடியுமா? அதற்கான டிப்ஸ் தரவும்.
எஸ். ஜகன்லால், திருப்பூர்.
பதில்:
விண்டோஸ் 7 சிஸ்டத்தில், அதன் டாஸ்க் பார், மாறா நிலையில், திரையின் கீழாகக் காட்டப்படுகிறது. இதுதான் மிகவும் வசதியான இடம் என்று, பலரும் இந்த நிலையிலேயே பயன்படுத்துகின்றனர். ஒரு சிலர், ஸ்டைலாக பக்கவாட்டில் வைத்துக் கொள்வார்கள். நீங்கள் மேக் கம்ப்யூட்டரிலேயே அதிகம் பழக்கப்பட்டதால், டாஸ்க் பாரை நகர்த்தி வைக்க வழி தேடுகிறீர்கள். அதற்கான வழிகள் தரப்பட்டுள்ளன. கீழே விவரிக்கிறேன்.
1. டாஸ்க் பாரில், காலியாக உள்ள இடத்தில், ரைட் கிளிக் செய்திடவும். கிடைக்கும் மெனுவில், "Lock the taskbar" என்று இருப்பதில் உள்ள டிக் அடையாளத்தை எடுத்துவிடவும்.
2. பின்னர், டாஸ்க் பாரில் காலி இடத்தில், மவுஸ் இடது பட்டனை கிளிக் செய்து அப்படியே பிடித்தவாறு, திரையின் அடுத்த மூன்று பக்கங்களில், டாஸ்க் பார் எங்கு இருக்க வேண்டும் என விரும்புகிறீர்களோ, அங்கு இழுத்து சென்றுவிடவும். பின் மீண்டும் காலி இடத்தில், ரைட் கிளிக் செய்து, "Lock the taskbar" என்று இருப்பதில் டிக் அடையாளத்தை மீண்டும் அமைக்கவும். இது டாஸ்க் பாரை நீங்கள் வைத்துள்ள புதிய இடத்தில் மீண்டும் மாற்றாதவாறு அமைத்துவிடும்.
லாக் எடுத்துவிட்டு, டாஸ்க் பாரினை மவுஸ் கர்சர் அழுத்தி, இழுத்துச் செல்வதற்குப் பதிலாக இன்னொரு வழியும் உள்ளது. டாஸ்க் பாரில் காலியாக உள்ள இடத்தில் ரைட் கிளிக் செய்திடவும். கிடைக்கும் மெனுவில் "Properties" என்பதைத் தேர்ந்தெடுக்கவும். இப்போது "Taskbar and Start Menu Properties" என்ற டயலாக் பாக்ஸ் காட்டப்படும். இதில் "Taskbar location on screen" என்றிருக்கும் கீழ் விரி மெனுவில் கிளிக் செய்து இழுக்கவும். இங்கு "Bottom", "Left", "Right", or "Top". ஆகிய விருப்பத் தேர்வுகள் கிடைக்கும். நீங்கள் விரும்பும் இடத்தைத் தேர்வு செய்து, ஓகே கிளிக் செய்தால், நீங்கள் விரும்பியபடி, டாஸ்க் பார் சென்று அமரும்.

கேள்வி: விண்டோஸ் 7 சிஸ்டத்தில், எம். எஸ். ஆபீஸ் 2007 பயன்படுத்தி வருகிறேன். இதில் வேர்டில், கேப்ஸ் லாக் கீ அழுத்துகையில், இரு வேறு விதமான ஒலிகள் தோன்றுகின்றன. கேப்ஸ் லாக் இயக்கப்படுகிறதா இல்லையா என்பதில் குழப்பம் ஏற்படுகிறது. கேப்ஸ் லாக் அழுத்தப்பட்டிருந்தால், அது திரையில் தெரியும்படி அமைக்க முடியுமா?
என். பார்த்தசாரதி, திருச்சி.
பதில்:
தாராளமாக அமைக்கலாம். நீங்கள் டாகிள் கீ ஒலியினை இயக்கி வைத்திருப்பதால், கேப்ஸ் லாக் கீ அழுத்துகையில், இரு வேளைகளிலும், வித்தியாசமான ஒலி வெளிப்படுகிறது. ஆனால், எந்த ஒலி, இயக்குவதற்கு, எந்த ஒலி அதன் இயக்கத்தை நிறுத்துவதற்கு என்பதை நாம் நினைவில் கொள்ள இயலாது. இது கேப்ஸ் லாக் கீ மட்டுமின்றி, ஸ்குரோல் லாக் போன்ற டாகிள் கீகள் அனைத்திற்கும் ஒலியினை ஏற்படுத்தும். ஆனால், நமக்கு கேப்ஸ் லாக் இயக்கப்பட்டிருப்பது திரையில் காட்டப்பட்டால், எளிதாக இருக்கும் அல்லவா? அதற்கு, செட்டிங்ஸ் ஒன்றை மேற்கொள்ள வேண்டும். வேர்ட் புரோகிராமினை இயக்கி, ஏதேனும் ஒரு டாகுமெண்ட்டினைத் திறந்து கொள்ளுங்கள். இப்போது கீழாக இருக்கும் டாஸ்க் பாரில் ரைட் கிளிக் செய்திடவும். இப்போது Customize Task Bar என்ற ஒரு பாப் அப் கட்டம் எழுந்து வரும். இதில், டாஸ்க் பாரில் அமையும் அனைத்து வசதிகளும் இருக்கும். தேவையானதன் இடத்தில் ON என்பதை அமைத்துவிட்டால், அது காட்டப்படும். உங்கள் தேவைக்கேற்ப Caps Lock என்பதை இயக்கி வைக்கவும். இனி, கேப்ஸ் லாக் அழுத்தப்படும் போதேல்லாம், அது டாஸ்க் பாரில் காட்டப்படும். நீங்கள் டெக்ஸ்ட் டைப் செய்திடுகையில், டாஸ்க் பாரில் தெரிகின்ற நிலையைப் பார்த்து, தேவைக்கேற்றபடி மாற்றலாம். இவ்வாறு மாற்றுகையில், இப்போது ஒலியும் கேட்கும்.

கேள்வி: விண்டோஸ் 8 சிஸ்டம் கொண்ட லேப்டாப் கம்ப்யூட்டரைப் பயன்படுத்துகிறேன். இது கடந்த ஒரு மாதமாக என்னிடம் இருந்து வருகிறது. இதில் சிஸ்டம் ஸ்டார்ட் ஆகும்போதே, பல புரோகிராம்கள் இயக்கப்பட்டு, பின்னணியில் ஓடிக் கொண்டே இருக்கின்றன. இவற்றினால் பயன் ஏதும் இல்லை. இவற்றை ஸ்டார்ட் அப் விண்டோ திறந்து நீக்கிவிட எண்ணினால், ஸ்டார்ட் அட் அப் விண்டோவினைத் தரும் எம்.எஸ். கான்பிக் விண்டோவினை எப்படிப் பெறுவது என்று தெரியவில்லை. வழி காட்டவும்.
என். மகரிஷி, சென்னை.
பதில்:
விண்டோஸ் 8 பயன்படுத்துவோருக்கு எழும் எரிச்சல் மிக்க இடங்களில் இதுவும் ஒன்று. ஏற்கனவே அனைத்து ஆப்பரேட்டிங் சிஸ்டங்களிலும், எளிய வழியில் கிடைத்து வந்த Msconfig புரோகிராம் இருக்கும் இடம் மாற்றப்பட்ட வழியிலேயே கிடைக்கிறது. இதுதான், உங்கள் பிரச்னையின் மூல காரணமாக உள்ளது. ஆனால், Msconfig எப்படியும் இருந்தே ஆக வேண்டும் அல்லவா! அது எங்கு கிடைக்கிறது என்பதனைப் பார்க்கலாம். முதலில் Charms menu மெனுவினைத் திறக்கவும். இதற்கு உங்கள் திரையில் மேல் அல்லது கீழாக மவுஸைச் சுழற்றவும். பின்னர், டாஸ்க் மேனேஜரைக் (Task Manager) கண்டறிந்து திறக்கவும். இந்த இடத்தில் Startup டேப்பினை நீங்கள் காணலாம். இதனைக் கிளிக் செய்து ஸ்டார்ட் அப் மெனுவில், நீங்கள் நீக்க விரும்பும் புரோகிராம்கள் அனைத்தையும் நீக்கலாம். இதற்கு அந்த புரோகிராம்கள் மீது ரைட் கிளிக் ஏற்படுத்தி, கிடைக்கும் மெனுவில் Disable என்பதனை இயக்கவும். இனி, கம்ப்யூட்டர் தொடங்குகையில், இந்த புரோகிராம்கள் தொடங்காது.

கேள்வி: கூகுள் ட்ரைவில் ஷார்ட் கட் கீகள் பயன்படுத்தலாம் என்று படித்தேன். ஆனால், அவை என்ன செயல்பாட்டிற்கு என்றும் எவை என்றும் தெரியவில்லை. உங்களால் கூற முடியுமா?
எஸ். கதிர்காமன், மதுரை.
பதில்:
கூகுள் ட்ரைவ் மற்றும் கூகுள் கூட்டுத் தொகுப்பான ஆபீஸ் அப்ளிகேஷன்கள், ஷீட்ஸ் மற்றும் ஸ்லைட்கள் பயன்படுத்தும்போது, கீழ்க்காணும் ஷார்ட் கட் கீகளைப் பயன்படுத்தலாம்.
Shift + f : புதிய போல்டர் உருவாக்கப்படும்.
Shift + t புதிய டாகுமெண்ட் ஒன்று உருவாக்கப்படும்
Shift + p: புதிய ப்ரசன்டேஷன் அமைக்கப்படும்.
Shift + s: புதிய ஸ்ப்ரெட்ஷீட் உருவாகும்.
Shift + o: புதிய படிவம் உருவாகும்.
Shift + d : புதிய ட்ராயிங் கிடைக்கும்.

கேள்வி: God Mode என்று எதனைக் கூறுகிறோம். இது விண்டோஸ் இயக்கத்தில் ஒரு கட்டளையா? அல்லது எம்.எஸ். ஆபீஸ் தொகுப்பில் பயன்படுத்தப்படுகிறதா? விளக்கமாகத் தரவும்.
என்.பரஞ்சோதி, காரைக்குடி.
பதில்:
God Mode என்பது விண்டோஸ் சிஸ்டம் தரும் ஒரு வசதி. விண்டோஸ் மாஸ்டர் கண்ட்ரோல் பேனலுக்கான ஷார்ட் கட். இது விண்டோஸ் 7 சிஸ்டத்தில் தரப்பட்டது. ஆனால், மறைக்கப்பட்ட வசதியாக இது உள்ளது. இதன் மூலம் கண்ட்ரோல் பேனலில் உள்ள அனைத்து வசதிகளையும் அணுகிப் பெறலாம். அனைத்தும் ஒரு போல்டரில் கிடைக்கும். God Mode இயக்க, உங்கள் டெஸ்க்டாப்பில் புதிய போல்டர் ஒன்றை உருவாக்கவும். அதன் பெயரை GodMode.{ED7BA4708E54465E825C99712043E01C} என அமைக்கவும். இவ்வாறு கொடுத்த பின்னர், கிடைக்கும் போல்டரில், 270 டூல்கள் தரப்படும். விண்டோஸ் 7 சிஸ்டத்தினை அமைக்கும் அனைத்து விஷயங்களும் இதில் கிடைக்கும். இது விண்டோஸ் 8 சிஸ்டத்திலும் செயல்படும். விண்டோஸ் சிஸ்டத்தை மாற்றி அமைக்கும் அனைத்து டூல்களும், ஒரே போல்டரில் கிடைப்பது ஓர் அரிய வசதியாகும்.

Advertisement

 Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X