கேள்வி - பதில்
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

25 மே
2015
00:00

கேள்வி: விண்டோஸ் 8.1 சிஸ்டம் என் கம்ப்யூட்டரில் உள்ளது. விண்டோஸ் 10 வழங்கப்படும்போது, அது தானாகவே அப்டேட் ஆகும் என அறிவித்துள்ளதாகப் படித்தேன். விண்டோஸ் 10 அனைத்து நிலைகளிலும் பிரச்னை இல்லாதது என உறுதி செய்யப்பட்ட பின்னரே, நான் என் கம்ப்யூட்டரில் பதிய விரும்புகிறேன். எனவே, தானாக அப்டேட் செய்வதனை எப்படித் தடுக்க முடியும் என அறிவுரை கூறவும்.
என். மங்கையர்க்கரசி, மயிலாடுதுறை.
பதில்:
விண்டோஸ் 10, விண்டோஸ் அப்டேட் செயல்முறை வழியாகத்தான் தரப்படவுள்ளதாக இதுவரை தெரிய வந்துள்ளது. இதன் மூலம், தொடக்க காலத்திலேயே, அதிக எண்ணிக்கையிலான கம்ப்யூட்டர்களில் இதனைப் பதிவு செய்திடலாம் என மைக்ரோசாப்ட் திட்டமிட்டுள்ளது. இருப்பினும், அப்டேட் செய்வதற்கு நம் அனுமதியை மைக்ரோசாப்ட் கேட்டுப் பெறும் என்றே எதிர்பார்க்கிறேன். அதேபோல, எங்கு சென்று அப்டேட் செய்து கொள்ளலாம் என்றும் தகவல்கள் தரப்படும். இவற்றைப் பார்த்து, உங்கள் விருப்பப்படி விண்டோஸ் 10 தரவிறக்கம் செய்து கொள்ளலாம்.
ஆனால், விண்டோஸ் 10 தரவிறக்கம் செய்வதனை அதிக காலத்திற்கு ஒத்திவைக்க வேண்டாம் என்றுதான் நான் பரிந்துரைப்பேன். இந்த சிஸ்டம், நிச்சயமாக விண்டோஸ் 7 மற்றும் விண்டோஸ் 8 பயன்படுத்துபவர்களுக்கு பழக்கமான ஒன்றாகவே இருக்கும். சிரமங்களோ, சிக்கல்களோ இருக்காது.

கேள்வி: என் கம்ப்யூட்டரில் விண்டோஸ் 7 மற்றும் ஆபீஸ் 2007 இயக்கப்படுகின்றன. இதில் எக்ஸெல் ஒர்க் ஷீட்டில், செல் ஒன்றில், டேட்டா அமைத்து என்டர் தட்டினால், வழக்கம் போல கர்சர் கீழாக இருக்கும் செல்லுக்குச் செல்கிறது. ஆனால், என் அலுவலகத்தில் உள்ள கம்ப்யூட்டரில் அது வலதுபுறம் உள்ள செல்லுக்குச் செல்கிறது. அங்கும் இதே சிஸ்டம் மற்றும் எக்ஸெல் செட் அப் தான். ஏன் இந்த வேறுபாடு? எனக்கு அலுவலகத்தில் உள்ளது போல வீட்டில் உள்ள கம்ப்யூட்டரிலும் வேண்டும்.
ஆர். நிர்மலா சந்திரன், திருப்பூர்.
பதில்
: நீங்கள் சொல்வது சரியே. மாறா நிலையில், எக்ஸெல் ஒர்க் ஷீட்டில், செல் ஒன்றில், டேட்டா அமைத்து என்டர் தட்டினால், அது கீழாக உள்ள செல்லுக்குத்தான் செல்லும், இதனை, மற்ற செல்களுக்குச் செல்லும்படி அமைக்க, சில செட்டிங்ஸ் அமைப்புகளை மேற்கொள்ள வேண்டியதிருக்கும்.
1. எக்ஸெல் ஆப்ஷன்ஸ் (Excel Options) டயலாக் பாக்ஸைத் திறக்கவும். உங்கள் கம்ப்யூட்டரில், எக்ஸெல் ஒர்க் ஷீட்டில், ஆபீஸ் பட்டனை அழுத்தி, பின்னர் கீழாக உள்ள Excel Options என்னும் பட்டனில் கிளிக் செய்திடவும்.
2. இதன் இடது பக்கம் உள்ள Advanced என்னும் பட்டனில் கிளிக் செய்திடவும்.
3. இங்கு உள்ள After Pressing Enter Move Selection என்னும் செக் பாக்ஸைத் தேர்ந்தெடுக்கவும்.
4. இங்கு எந்தப் பக்கம் எனக் காட்டும் கீழ்விரி மெனுவில், எக்ஸெல் கர்சர் எந்தப் பக்கம் நகர்ந்து செல்ல வேண்டும் என்பதனைத் தேர்ந்தெடுக்கவும்.
5. பின்னர் ஓகே கிளிக் செய்து மூடவும்.
இனி செல் ஒன்றில் டேட்டா அமைத்துவிட்டு என்டர் தட்டினால், நீங்கள் அமைத்த வழியிலேயே கர்சர் பயணிக்கும்.

கேள்வி: 'விண்டோஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டம்' என எழுதுகிறீர்கள். அப்படியானால், வேறு ஆப்பரேட்டிங் சிஸ்டம் ஏதேனும் உள்ளதா? அவை எளிதானவையா? அல்லது ஆராய்ச்சிக்கு மட்டும் பயன்படுத்தப்படுபவையா? எனக்கு கம்ப்யூட்டர் சயின்ஸ் குறித்து எதுவும் தெரியாததால், இந்த கேள்விக்குப் பதில் அளிக்கவும்.
கரு. சீனிச்சாமி, தென்காசி.
பதில்:
உங்களுடைய கேள்வி நியாயமானதே. கம்ப்யூட்டர் பயன்படுத்தும் அனைவரும் கம்ப்யூட்டர் அறிவியல் குறித்து அனைத்தும் தெரிந்திருக்க வேண்டியதில்லை. இனி உங்கள் கேள்விக்கு வருவோம். விண்டோஸ் போலவே கம்ப்யூட்டரில் பயன்படுத்தப்படும் பிற ஆப்பரேட்டிங் சிஸ்டங்களும் பயன்பாட்டில் உள்ளன. அவை ஆப்பிள் ஆப்பரேட்டிங் சிஸ்டம். இது மேக் கம்ப்யூட்டர் என்னும் வகையை இயக்கும். மற்றவற்றை இயக்காது. விண்டோஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தின் பல வகைகள், பல்வேறு நிறுவனங்களின் கம்ப்யூட்டர்களில் இயங்குவதைப் பார்க்கலாம். மேக் ஓ.எஸ் எனப்படும் ஆப்பிள் ஆப்பரேட்டிங் சிஸ்டம், ஆப்பிள் மேக் கம்ப்யூட்டர்களில் மட்டுமே இயங்கும். பொதுவாக, விண்டோஸ் இயங்கும் கம்ப்யூட்டர்களில், மேக் ஓ.எஸ். இயக்கத்தை மேற்கொள்ள முடியாது.
இன்னொரு பிரபலமான கம்ப்யூட்டர் ஆப்பரேட்டிங் சிஸ்டம் லினக்ஸ். இதனை திறவூற்று இயக்கம் (Open Source) என அழைப்பார்கள். அதாவது இது அனைவரும் இலவசமாகப் பயன்படுத்திக் கொள்ளலாம். லினக்ஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தில் 100க்கும் மேற்பட்ட வகைகள் உள்ளன. இதனால், பலருக்கு இது குறித்து குழப்பங்கள் ஏற்படுவது உண்டு. கம்ப்யூட்டர்களைத் தங்கள் வசப்படுத்தி இயக்க எண்ணுபவர்களுக்கு இது ஏற்ற ஆப்பரேட்டிங் சிஸ்டமாகும்.
இந்த ஆப்பரேட்டிங் சிஸ்டத்தினை கம்ப்யூட்டரில் இயக்க, இந்த சிஸ்டம் குறித்து நீங்கள் தெரிந்திருக்க வேண்டியதில்லை. ஆனால், இந்த சிஸ்டத்தில் இயங்கும் புரோகிராம்கள் மற்றும் அவற்றின் பயன்கள் குறித்து அறிந்திருக்க வேண்டும். எனவே, ஏதேனும் புரோகிராம் ஒன்றை நீங்கள் வாங்கிப் பயன்படுத்துவதாக இருந்தால், உங்கள் கம்ப்யூட்டர் வகை, ஆப்பரேட்டிங் சிஸ்டம் வகை ஆகியவற்றைக் கூறி, அதில் அந்த புரோகிராம் இயங்குவதை உறுதி செய்த பின்னரே வாங்க வேண்டும்.
ஆப்பரேட்டிங் சிஸ்டம் என்பது கம்ப்யூட்டர்களுக்கு மட்டும் அல்ல. டேப்ளட் பி.சி., ஸ்மார்ட் போன் ஆகியவையும் ஆப்பரேட்டிங் சிஸ்டம் மூலமே இயங்குகின்றன. ஆண்ட்ராய்ட் என்பது, ஸ்மார்ட் போனுக்கான மிகப் பிரபலமான ஆப்பரேட்டிங் சிஸ்டமாகும்.

கேள்வி: வேர்ட் டாகுமெண்டில் உள்ள போர்ட்ரெய்ட் மற்றும் லேண்ட்ஸ்கேப் நிலைகளை மாற்றி அமைக்க விரும்புகிறேன். இதற்கான கட்டளை என்ன?
என். சபேசன், காரைக்குடி.
பதில்:
டாகுமெண்ட்களில் அகலமான அளவில் வரிகள் அமைக்கப்பட வேண்டுமானால், பக்கங்களை லேண்ட்ஸ்கேப் நிலையில் அமைக்க வேண்டும். அப்படிப்பட்ட தேவை இல்லை என்றால், போர்ட்ரெயிட் நிலையிலேயே, அதுவே மாறா நிலை, அமைக்கலாம். இந்த இரண்டிற்கும் இடையே மாறிக் கொள்வது எளிதான ஒன்று. வேர்டில், மேலாக உள்ள ரிப்பனில் பேஜ் லே அவுட் (Page Layout ) டேப்பில் கிளிக் செய்திடவும். அடுத்து, "Orientation" என்னும் ஐகானில் கிளிக் செய்திடவும். தொடர்ந்து இங்கு கிடைக்கும் பாப் அப் விண்டோவில், நீங்கள் விரும்பும் வகையைத் தேர்ந்தெடுக்கவும். அவ்வளவுதான், மிக எளிது.

கேள்வி: விண்டோஸ் 7 ஆப்பரேட்டிங் சிஸடம் பயன்படுத்துகிறேன். சில வேளைகளில், சிஸ்டம் இயங்குவதில் பிரச்னை ஏற்படுகிறது. பின்னர் சிறிது நேரத்தில் சரியாகிறது. எந்தப் பிரிவில், எதனால், பிரச்னை ஏற்படுகிறது என்பதனை எப்படி அறியலாம்?
கே. உதயகுமார், திருச்சி.
பதில்
: முதலில் உங்கள் ஆண்ட்டி வைரஸ் கொண்டு, கம்ப்யூட்டர் முழுமையும் சோதனை செய்திடவும். அதற்கு முன்னர், அதனை அப்டேட் செய்திட வேண்டும். சோதனையில் மால்வேர், வைரஸ் இருப்பின், அறவே நீக்கப்பட வேண்டும். உங்கள் சிஸ்டம் சாப்ட்வேர், அவ்வப்போது மைக்ரோசாப்ட் தரும் பேட்ச் பைல்களுடன் அப்டேட் செய்யப்பட்டுள்ளதா? இல்லை எனில் அதனையும் அப்டேட் செய்திடவும். இனி உங்களுக்கான பதில்.
சிஸ்டத்தின் சில செயல்பாடுகள் மட்டும் முடங்கிப் போகும் சில வேளைகளில், எதனால் பிரச்னை ஏற்படுகிறது என நமக்குத் தெரியாது. இதனைக் கண்டறிந்து கொள்ள, விண்டோஸ் 7 வழி ஒன்றைத் தருகிறது. அது போன்ற சூழ்நிலையில், கண்ட்ரோல் பேனல் செல்லவும். அங்கு System and Security என்பதன் கீழ் Find and Fix என்ற பிரிவைப் பார்க்கவும். அல்லது சர்ச் பாக்ஸில் Troubleshooting என்று டைப் செய்து என்டர் தட்டவும். பொதுவான பிரச்னைகள், நீங்கள் அமைத்துள்ள செட்டிங்ஸ், சிஸ்டம் கிளீனிங் போன்ற வழிகளில், பிரச்னைக்குத் தீர்வு கிடைக்கலாம். இதற்கு முன் இதே போல ஏற்பட்டிருந்தால், சர்ச் பாக்ஸில் Troubleshooting history என்று டைப் செய்து பார்க்கவும். இந்த விண்டோவின் இடது மேல் பக்க மூலையில் View All என்ற லிங்க்கில் கிளிக் செய்தால், இதற்கு முன் இது போல ஏற்பட்ட சிக்கல்கள், அவற்றின் தன்மை மற்றும் தீர்வுகள் காட்டப்படும்.

கேள்வி: ஸ்மார்ட் மொபைல் போன்களில், ஏரோபிளேன் மோட் என்னும் ஒரு நிலை காணப்படுகிறது. சில வேளைகளில், என்னை அறியாமல் அதனை இயக்கிவிட்டு, அதனால், பல செயல்பாடுகள் நின்றுவிடுகின்றன. எல்லாருமா, விமானத்தில் செல்கின்றனர். இதனை நீக்கிவிட்டு ஸ்மார்ட் போன் ஆப்பரேட்டிங் சிஸ்டம் இருக்கலாமே? நான் எண்ணுவது சரியா? பிளேனில் போகாமலும், இந்த வசதி நமக்குப் பயன்படுமா?
என். சுந்தரேசன், கும்பகோணம்.
பதில்:
ஸ்மார்ட் போன்கள் அனைத்திலும், ஏரோ பிளேன் மோட் என்று ஒரு ஆப்ஷன் தரப்படுகிறது. பலர் இதனைப் பயன்படுத்துவது இல்லை. எனவே இது குறித்து கவலைப் படுவதில்லை. ஆனால், சில வேளைகளில், இந்த ஆப்ஷனை உங்களைப் போல சிலர் இயக்கிவிட்டு, பேச முடியாத நிலை உருவாகும்போது, மற்றவர் சொல்லி, இதனை இயங்கா நிலையில் வைக்கின்றனர். இந்த நிலை இயக்கப்படுகையில் என்ன நடக்கிறது என்று இங்கு பார்க்கலாம்.
ஸ்மார்ட் போனை ஏரோ பிளேன் மோடில் வைக்கையில், அதன் செல்லுலர் ரேடியோ, வை பி, புளுடூத் ஆகியவை செயல்படுவதில்லை. செல் டவர்களுடன் போனால் தொடர்பு கொள்ள முடியாது. பேச அழைப்பு விடுக்க முடியாது. எஸ்.எம்.எஸ். அனுப்ப முடியாது. அதாவது செல் டவர்கள் மூலம் மேற்கொள்ளப்படும் எந்த பணியையும் மேற்கொள்ள முடியாது.
போன் வை பி நெட்வொர்க்கில் இணைய முடியாது. இதனால், அந்த நெட்வொர்க் வழியே எந்த சாதனத்தையும் தொடர்பு கொள்ள இயலாது. ஏற்கனவே, வை பி செயல்பாட்டை இயக்க நிலையில் வைத்திருந்தால், ஏரோ பிளேன் மோடில், அது தானாகவே செயல் இழக்கும்.
ஏரோபிளேன் மோடில், புளுடூத் இயங்காது. பெரும்பாலானவர்கள், புளுடூத் இயக்கி தங்களுடைய ஹெட் செட்டினை இயக்குவார்கள். இது செயல்படாது. ஆனால், மவுஸ் மற்றும் கீ போர்ட் ஆகியவற்றை இயக்க முடியும்.
இந்நிலையில் ஜி.பி.எஸ். எனப்படும் நம் போன் இயங்கும் இடத்தை அறியும் தொழில் நுட்பம் இயங்காது. பொதுவாக விமான நிறுவனங்கள் இதனை இயக்குவதைத் தடை செய்துள்ளன. இந்த நிலை இயக்கப்படுகையில், ஸ்மார்ட் போனில், உள்ள ஏரோபிளேன் மோட் ஐகான் இயக்கப்பட்டிருக்கும் நிலையில் ஒளி விட்டபடி இருக்கும். ஐபோன், ஐபேட் மற்றும் ஸ்மார்ட் போன்களில் இது மேலாகக் காட்டப்படும்.
பொதுவாக மொபைல் போன்கள் செல் டவர்களை தங்கள் சிக்னல்களுக்காக சிரமத்துடன் தேடுவதால், விமானப் பயணங்களில், அதன் சாதனங்கள் இயக்கம் பாதிக்கப்படும். எனவே, ஏரோ பிளேன் மோடில், போன்களை அமைக்க வேண்டியதிருக்கும். பொதுவாகவே, செல் டவர்களிலிருந்து சிக்னல்கள் கிடைக்காததால், நாம் போனைப் பயன்படுத்துவது இல்லை. மேலே செல்லாமல், விமான நிலையத்தினுள் உள்ள விமானங்களில் அமர்ந்திருக்கையில், போன்கள் செல் டவர்களைத் தொடர்பு கொள்ள முடியும். இது போன்ற சூழ்நிலைகளில், நாம் நம் செல் போன்களை இயக்கக் கூடாது என விமான ஊழியர்கள் தடுத்துவிடுவார்கள்.
நீங்கள் விமானத்தில் இல்லாத போதும், இந்த நிலை உங்களுக்கு உதவிடும். உங்கள் போனில் உள்ள பேட்டரி சக்தியைக் காப்பாற்ற இதனை இயக்கலாம். ஏரோ பிளேன் மோட் இயக்கப்படுவதால், பல வயர்லெஸ் நெட்வொர்க் பணிகள் மேற்கொள்ளப்படாது. எனவே, பேட்டரியின் மின் சக்தி மிச்சமாகிறது. ஆனால், இதனை இயக்கினால், நமக்கு அழைப்புகளும் கிடைக்காது என்பதனை நினைவில் கொள்ள வேண்டும்.
சில பயணியர் விமான நிறுவனங்கள், தங்கள் விமானங்களில் பயணம் செய்வோரிடம், கட்டணம் பெற்றுக் கொண்டு, வை பி இயக்க அனுமதிக்கின்றனர். அப்போது அழைப்புகளை இயக்க முடியாது. ஆனால், வை பி இயக்க முடியும். அதன் மூலம் சில சாதனங்களைத் தொடர்பு கொள்ள முடியும். குறிப்பாக இன்டர்நெட் சேவையினைப் பயன்படுத்த முடியும்.
விரைவில், பயணிகள் கட்டணம் செலுத்தி, மொபைல் போன்களுக்கான அழைப்புகளையும் மேற்கொள்ளக் கூடிய வசதியினை விமான நிறுவனங்கள் தரும் காலம் வரும் என அனைவரும் எதிர்பார்க்கின்றனர்.

Advertisement

 வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X