கேள்வி - பதில்
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

01 ஜூன்
2015
00:00

கேள்வி: இணைய இணைப்பு திட்டங்கள் குறித்து படிக்கையில், “ஸீரோ ரேட்டிங்” (Zero Rating) என்று ஒரு கருத்து கூறப்படுகிறது. இதன் முழுப் பொருள் தெரியவில்லை. இதனை விளக்கமாகத் தெளிவு படுத்தவும்.
ஆர். பிரகாஷ், சென்னை.
பதில்:
“அனைவருக்கும் சமமான இணைய இணைப்பு” என்று கூறப்படும் நெட் நியூட்ராலிட்டி குறித்த சர்ச்சைகள் பற்றிய கட்டுரைகளைப் படிக்கையில், ஸீரோ ரேட்டிங் என்பது குறித்தும் படித்திருக்கலாம். அண்மையில், ஏர்டெல் போன்ற மொபைல் சேவை நிறுவனங்கள் கொண்டு வந்த திட்டம் இது. இணையப் பயனாளர்களை, சில இணைய தளங்கள், எந்தவிதமான டேட்டா கட்டணம் இல்லாமல் இலவசமாகத் தங்கள் இணைய தளத்தைப் பார்வையிடவும், தேவையானவற்றைத் தரவிறக்கம் செய்திடவும் அனுமதி வழங்கும். எடுத்துக் காட்டாக, பேஸ்புக் போன்ற தளங்களைப் பயன்படுத்துகையில், இணைய இணைப்பு தரும் மொபைல் சேவை நிறுவனங்கள், அந்த தளத்தினைப் பார்வையிடும் நேரம், இறக்கப்படும் தகவல்களை, பயனாளர்களின் சேவைக் கட்டணக் கணக்கில் எடுத்துக் கொள்ளாது. நீங்கள் மொபைல் சேவை நிறுவனத்திடம், அதிக பட்சம் 10 ஜி.பி., விநாடிக்கு 512 கே.பி. டேட்டா பரிமாற்ற வேகம், மாதம் ரூ.1050 கட்டணம் என்ற திட்டத்தினை மேற்கொண்டிருந்தால், பேஸ்புக் தளத்தினை அணுகுவதற்கும், அதிலிருந்து தரவிறக்கம் செய்வதற்கும் பணம் கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட மாட்டாது. இந்த இணைய தளங்கள், இதற்கான பணத்தினை, மொபைல் சேவை நிறுவனத்திற்கு, ஒப்பந்த அடிப்படையில் தந்துவிடும். அல்லது, மொபைல் சேவை நிறுவனங்கள், இது போன்ற தளங்களை நாடிச் சென்று, ஒப்பந்தம் ஏற்படுத்திக் கொண்டு, பணத்தை வாங்கிக் கொண்டு, பயனாளர்களிடம், இந்த தளத்தைப் பார்வையிடுவது இலவசம் என்று அறிவிக்கும். இதுதான் ஸீரோ ரேட்டிங் என்பது. ஆனால், இந்த திட்டம் மற்ற இணைய தளங்களுக்கும், கட்டணம் செலுத்தும் இணைய தளத்திற்கும் பாரபட்சமான, வேறுபாடான அணுகுமுறையினை, மொபைல் சேவை நிறுவனங்கள் மேற்கொள்கின்றன என்று பலரும் எதிர்ப்பு தெரிவித்தனர். அனைவருக்கும் சமமான இணைய சேவை என்ற நெட் நியூட்ராலிட்டி கொள்கைக்கு இது எதிரானது என்று எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால், இந்த திட்டத்திலிருந்து விலகுவதாக, பல இணைய தளங்கள் அறிவித்தன. “அப்படி எல்லாம் வேறுபாடான தன்மையுடன் இணைய இணைப்பு இருக்காது” என ஏர்டெல் நிறுவனத் தலைவர் வாக்குறுதி கொடுத்தாலும், மக்கள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

கேள்வி: என்னுடைய டெஸ்க் டாப் மற்றும் லேப்டாப் கம்ப்யூட்டரின் டிஸ்பிளே ரெசல்யூசனை 1280×768 என அமைத்துள்ளேன். ஆனால், ஆப்பரேட்டிங் சிஸ்டம் பரிந்துரைப்பது 1600×900 ஆக உள்ளது. இதனால், ஒவ்வொரு முறையும், பரிந்துரைக்கப்பட்ட டிஸ்பிளேயாக இது இல்லை என அறிவிப்பு வருகிறது. இவ்வாறு மாற்றி அமைத்திருப்பது என் கம்ப்யூட்டரை கெடுக்குமா? கட்டாயம் மாற்ற வேண்டுமா? தொடர்ந்து இந்த ரெசல்யூசனிலேயே இயக்கலாமா?
என். மாதவி திருமாறன், திருப்பூர்.
பதில்
: நல்ல கேள்வி. பலரின் மனதில் இந்த சந்தேகம் இருக்கும். நீங்கள் அமைத்துள்ள டிஸ்பிளே அமைப்பினால், கம்ப்யூட்டருக்கு, குறிப்பாக அதன் திரைக்கு எந்த பிரச்னையும் நேராது. ஆனால், உங்கள் காட்சிப் பார்வையில் சிக்கல் இருக்கும். பரிந்துரைக்கப்பட்ட டிஸ்பிளே செட் செய்யப்படவில்லை என்றால், எழுத்துகளும், படங்களும் துல்லியமாகக் காட்டப்பட மாட்டாது. படிப்பதற்கு டெக்ஸ்ட் சில சங்கடங்களைத் தரும். நீங்கள் சரியான டிஸ்பிளேயைப் பார்க்காததால், நீங்கள் அமைத்துள்ள டிஸ்பிளே அடிப்படையில் காட்டப்படும் காட்சி தான் இந்த திரையில் கிடைக்கும் என்ற எண்ணத்திலேயே தொடர்ந்து கம்ப்யூட்டரைப் பயன்படுத்திக் கொண்டிருப்பீர்கள். எனவே, பரிந்துரைக்கப்படும் ரெசல்யூசனில் அமைத்து இயக்குவதே நல்லது. கீழ்க்குறித்துள்ளபடி இதனை மாற்றலாம். விண்டோஸ் 7 சிஸ்டத்தில், தேடல் கட்டத்தில் Display என டைப் செய்திடவும். கிடைக்கும் பதிலில், முதலில் இருப்பதில் கிளிக் செய்திடவும். இப்போது விண்டோ ஒன்று காட்டப்படும். இதில் உங்கள் காட்சித் தோற்றத்தினை 150% அதிகரிக்க வழி காட்டப்படும். அதனைத் தேர்ந்தெடுத்து, apply என்பதில் கிளிக் செய்திடவும். விண்டோஸ் 8 சிஸ்டத்தில், Search Charm பகுதியில், Display Settings என டைப் செய்து, கிடைக்கும் பதிலில் முதலில் காட்டப்படுவதில் கிளிக் செய்திடவும். இங்கு நகர்த்தி செல்லக் கூடிய ஸ்லைடர் பார் ஒன்று இருக்கும். இதனை முன், பின்னாக நகர்த்தி, அங்கு தரப்பட்டுள்ள அனைத்து அளவுகளையும் அதிகப்படுத்தவும், குறைக்கவும் செய்திடலாம். டெக்ஸ்ட் எப்படிக் காட்சி அளிக்க வேண்டும் என்பதனைப் பல வழிகளில் அமைக்க இங்கு வசதிகள் கிடைக்கும். உங்களுக்கேற்றபடி அமைத்துக் கொள்ளலாம்.

கேள்வி: நான் என்னுடைய டெல் நிறுவன லேப்டாப் கம்ப்யூட்டரில், விண்டோஸ் 8.1 வைத்துள்ளேன். வர இருக்கும் விண்டோஸ் 10 சிஸ்டத்திற்கு அப்டேட் செய்திட விரும்புகிறேன். ஆனால், விண்டோஸ் 8.1.1.க்கு என்னால் இதனை அப்டேட் செய்திட முடியவில்லை. எப்படி அப்டேட் செய்திட வேண்டும்? அப்படி செய்திடாவிட்டால், விண்டோஸ் 10 சிஸ்டத்திற்கு லேப்டாப் அப்டேட் ஆகுமா?
என். ஆர். கார்த்திகேயன், சென்னை.
பதில்:
விண்டோஸ் 8 சிஸ்டத்தின் அண்மைக் காலத்திய அப்டேட் பதிப்பிற்கு மாறி இருந்தால் மட்டுமே, விண்டோஸ் 10 தானாக, அப்டேட் செய்யப்படும். இல்லை எனில், நீங்கள் விண்டோஸ் 10க்கு அப்டேட் செய்திடுகையில், அதுவே, விண்டோஸ் 8.1.1க்கு அப்டேட் செய்து, பின்னர் விண்டோஸ் 10க்கு செல்லும். இன்றைய உங்கள் சந்தேகத்தைப் போக்கிக் கொள்ள, கீழே காட்டியுள்ளபடி செயல்படவும்.
கம்ப்யூட்டரை இயக்கி, அதன் மெட்ரோ ஸ்கிரீன் திரையில் “check updates” என்று டைப் செய்திடவும். அல்லது, டெஸ்க்டாப் நிலையில், Search Charm என்பதனைத் திறக்கவும். “check updates” என்று டைப் செய்திடவும். ஐகான் மீது தட்டவும். Update மற்றும் recovery திறக்கப்படும். check now என்பதில் தட்டவும். இப்போது விண்டோஸ் ஏதேனும் அப்டேட் செய்திட வேண்டுமா என்று உங்கள் கம்ப்யூட்டரை சோதனை செய்திடும். நீங்கள் உங்கள் சிஸ்டத்தில் Automatic Update இயங்கிய நிலையில் அமைத்திருந்தால், அனைத்து அப்டேட் பைல்களும் இயக்கப்பட்டு, அனைத்தும் அப்டேட் ஆகி இருக்கும். Update history என்பதில் கிளிக் செய்தால், எந்த அப்டேட் பைல்கள் ஏற்கனவே இன்ஸ்டால் செய்யப்பட்டுள்ளன என்ற பட்டியல் கிடைக்கும். இதில் உங்கள் சந்தேகம் தீர்ந்துவிடும்.

கேள்வி: வேர்ட் டாகுமெண்ட்களில், நான் அமைத்துள்ள படம் ஒன்றை என் வாட்டர்மார்க் ஆகப் பயன்படுத்த விரும்புகிறேன். என் சிறிய நிறுவனத்தின் நோக்கத்தினைக் காட்டும் வகையில் இந்த படம் அமைக்கப்பட்டுள்ளது. அதனால் தான் இந்த ஆசை. இதனை எப்படி நிறைவேற்றிக் கொள்ளலாம் என்று வழி காட்டவும்.
ஆர். முத்துக்குமார், விழுப்புரம்.
பதில்
: பொதுவாக, இந்த வாட்டர் மார்க் அமைத்திடும் வசதியை யாரும் பயன்படுத்துவதில்லை. எம்.எஸ். ஆபீஸ் தரும் அருமையான வசதி இது. பொதுவாக, வாட்டர் மார்க் அமைத்திட, மாறா நிலையில் வழிகள் தரப்பட்டுள்ளன. கூடுதலாக, நாமும் சில செட்டிங்ஸ் அமைத்து, நாம் விரும்பும் வகையில் வாட்டர்மார்க் அடையாளத்தை, நம் டாகுமெண்ட்களில் ஏற்படுத்தலாம்.
1. ரிப்பனில், “Page Layout” என்ற டேப்பில் கிளிக் செய்திடவும்.
2. “Page Background” குரூப்பில் “Watermark” என்ற கட்டளையில் கிளிக் செய்திடவும். இங்கு மாறா நிலையில் “CONFIDENTIAL 1”, “DO NOT COPY”, or “URGENT 1” ஆகிய வாட்டர்மார்க் அடையாளங்கள் கிடைக்கும். இதில் ஒன்றை நீங்கள் விரும்பினால் தேர்ந்தெடுக்கலாம். அல்லது, “Custom Watermark” என்ற பட்டனில் கிளிக் செய்திடவும். இப்போது “Printed Watermark” என்ற டயலாக் பாக்ஸ் கிடைக்கும்.
இங்கு பலவித ஆப்ஷன்கள் கிடைக்கும். இவற்றில் நீங்கள் விரும்பும் வகையில் உள்ளதைத் தேர்ந்தெடுக்கலாம். “No watermark” தேர்ந்தெடுத்தால், அப்போதைய வாட்டர்மார்க் நீக்கப்படும். இதே செயல்பாட்டினை, ரிப்பனில் உள்ள “Remove Watermark” என்ற ஆப்ஷனைத் தேர்ந்தெடுப்பதன் மூலமும் மேற்கொள்ளலாம்.
நீங்கள் உருவாக்கிய படம் ஒன்றை வாட்டர்மார்க்காக அமைக்க விரும்பினால், “Select Picture” என்ற பட்டனைத் தேர்ந்தெடுக்கவும். படத்தின் அளவை, விருப்பப்படி மாற்றி அமைக்க, “Scale” என்பதில் கிளிக் செய்திடவும். தேர்ந்தெடுத்தால், டெக்ஸ்ட்டை வாட்டர்மார்க்காக அமைக்கலாம். “Text” என்பதை அடுத்து நீங்கள் விரும்பும் டெக்ஸ்ட்டை அமைக்க வேண்டும். இதன் பின், டெக்ஸ்ட் வண்ணம் மற்றும் அது எப்படி அமைய வேண்டும் என்பதனை அமைக்க ஆப்ஷன்கள் கிடைக்கும். இவற்றை அமைத்த பின்னர், ஓகே அழுத்தி டயலாக் பாக்ஸை மூடவும். இனி டாகுமெண்ட்டில் நீங்கள் அமைத்த டெக்ஸ்ட் அல்லது படம், நீங்கள் அமைத்த விருப்பப்படி வாட்டர்மார்க்காக அமைக்கப்படும்.

கேள்வி: விண்டோஸ் 7 கொண்ட லேப்டாப் வைத்துள்ளேன். இதில் System Reserved Partition என்ற ஒரு பிரிவு இருப்பதாகப் படித்தேன். ஆனால், என் கம்ப்யூட்டரில் இல்லை. அப்படி ஒரு ட்ரைவோ, போல்டரோ இருப்பதாகத் தெரியவில்லை. இது எந்த ட்ரைவில் இருக்கும்? அல்லது, என் கம்ப்யூட்டரில் அது பதியப்படவில்லையா? அதனால், எதுவும் பிரச்னை இல்லாமல் இருக்குமா?
எஸ். மஹாதேவன், திண்டுக்கல்.
பதில்:
விண்டோஸ் 7 மற்றும் விண்டோஸ் 8 ஆப்பரேட்டிங் சிஸ்டங்களை நம் கம்ப்யூட்டரில் அமைக்கும் போது, இவை கம்ப்யூட்டரின் ஹார்ட் டிஸ்க்கில் “System Reserved” என்று ஒரு பிரிவை உருவாக்குகின்றன. விண்டோஸ் இந்த பிரிவிற்கு எந்த ஒரு தனி ட்ரைவின் பெயரை அமைப்பதில்லை. எனவே, இதனை Disk Management போன்ற ஒரு பயன்பாட்டு கருவியைப் பயன்படுத்தினால் தான் நாம் பார்க்க முடியும்.
இந்த System Reserved Partition என்ற பிரிவு, விண்டோஸ் 7 ஆப்பரேட்டிங் சிஸ்டம் முதல் நடைமுறைக்கு வந்தது. எனவே, இதற்கு முந்தைய விண்டோஸ் சிஸ்டங்களில் இதனைக் காண முடியாது. இந்தப் பிரிவு, விண்டோஸ் 7 சிஸ்ட த்
தில் 100 எம்.பி. இட த்தையும், விண்டோஸ் 8 சிஸ்ட த்தில் 350 எம்.பி. இட த்தையும் எடுத்துக் கொள்கிறது. விண்டோஸ் இன்ஸ்டால் செய்யப்படும் செயல்பாடுகளின் போது, கம்ப்யூட்டரின் ட்ரைவ் பிரிக்கப்படும் பொழுதே, இந்தப் பிரிவு உருவாக்கப்படுகிறது.
உங்கள் ட்ரைவில், பிரித்து ஒதுக்கப்படாத இடத்தில் விண்டோஸ் சிஸ்டத்திற்கான பிரிவினை, கிராபிகல் பார்ட்டிஷன் மேனேஜர் கொண்டு அமைக்கும்போது, நமக்கு “To ensure that all Windows features work correctly, Windows might create additional partitions for system files.” என ஒரு செய்தி தரப்படும். இதனை அடுத்து, விண்டோஸ், வழக்கமாக, சிஸ்டத்திற்கான முதன்மை இடத்தினைப் பிரிக்கும் முன்னரே, System Reserved partition ஐ உருவாக்கிக் கொள்ளும்.
இதனால் என்ன பயன்? இதன் செயல்பாடு என்ன என்ற கேள்வி உங்கள் மனதில் எழலாம்.
இந்தப் பிரிவில் இரண்டு முக்கிய விஷயங்கள் உள்ளன. அவை:
1. Boot Manager and Boot Configuration Data : நம் கம்ப்யூட்டர் ஆப்பரேட்டிங் சிஸ்டம் இயங்கத் தொடங்கியவுடன், விண்டோஸ் பூட் மேனேஜர் (Boot Manager) தொடக்கம் இயங்கி, தொடக்க இயக்கத்திற்கான டேட்டாவினை Boot Configuration Data (BCD) Store இருந்து படிக்கிறது. நம் கம்ப்யூட்டர் சிஸ்ட த்திற்கான பிரிவிலிருந்து பூட் லோடரை இயக்குகிறது. அது, பின்னர், சிஸ்டம் ட்ரைவில் இருந்து விண்டோஸ் சிஸ்டத்தினை இயக்கத் தொடங்குகிறது.
நீங்கள் BitLocker drive encryption பயன்படுத்த விரும்பினால், இந்த சிஸ்டம் ரிசர்வ்ட் பார்ட்டிஷன் கட்டாயம் தேவைப்படும். வேறு வழியில் இது செயல்படவே முடியாது. மாறா நிலையில், முக்கியமான பூட் பைல்கள் இங்கு ஸ்டோர் செய்யப்படுகின்றன. நம்மால், விண்டோஸ் இயக்க பிரிவில் இவற்றை ஸ்டோர் செய்திட முடியும் என்றாலும், அவை இங்கும் ஸ்டோர் செய்யப்பட்டு இயக்கப்படுகின்றன. இந்த பிரிவில் உள்ள பைல்கள் மீது கை வைக்காமல் இருப்பதே நல்லது. மாறா நிலையில், உங்களுக்கு இதனைக் காட்டாமல், விண்டோஸ் உருவாக்கி வைத்துக் கொள்கிறது. அதனால் தான், அதற்கெனத் தனியே ஒரு ட்ரைவ் எழுத்தினைத் தருவதில்லை. பெரும்பாலான பயனாளர்களுக்கு, System Reserved partition என ஒரு பிரிவு இருப்பதே தெரியாது.

Advertisement

 Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (1)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
MURALEE DHARAN.M - chennai,இந்தியா
03-ஜூன்-201518:44:38 IST Report Abuse
MURALEE DHARAN.M சார், என் கம்ப்யூட்டர் கூகுல் part சரிவர வேலை செய்யவில்லை. BUT இன்டர்நெட் EXPXLOVE சரிவர வேலை செய்கிறது. MY கம்ப்யூட்டர் விண்டோ 7 OPTIMA
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X