கேள்வி - பதில்
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

08 ஜூன்
2015
00:00

கேள்வி: முன்பு ஒருமுறை சுருக்குச் சொற்கள் குறித்த ஓர் இணைய தளம் பற்றி விபரம் தெரிவித்திருந்தீர்கள். இவற்றைத் தமிழில் விளக்கும் தளங்கள் உள்ளனவா? ஆங்கிலத்திலேயே தரும் தளங்களில் சிறந்த இணைய தளம் குறித்துக் கூறவும்.
என். ரவீந்திரன், சேலம்.
பதில்:
தமிழில் சுருக்குச் சொற்களுக்கென தளம் எதுவும் தனியே இருப்பதாகத் தெரியவில்லை. ஆங்கிலத்தில் விளக்கம் அளிக்கும் தளம் எனில், ஏற்கனவே இது குறித்த தளத்தினையே பரிந்துரைக்கிறேன். அப்போது தந்த விளக்கத்தினை இங்கு அளிக்கிறேன். இப்போது அந்த தளம் மிகவும் விரிவு படுத்தப்பட்டுள்ளது. முன்பு 28 லட்சத்து 84 ஆயிரம் சுருக்குச் சொற்கள் இருந்த இடத்தில் இப்போது மேலும் பல லட்சம் சொற்கள் இணைக்கப்பட்டுள்ளன. தகவல் தலைப்பு எண்ணிக்கையும் உயர்ந்துள்ளன. ஓர் இணைய தளம் எப்படி தன்னிடம் உள்ள தகவல்களை அற்றைப் படுத்த வேண்டும் என்பதற்கு இது ஓர் எடுத்துக் காட்டு.
பொதுவாகப் பயன்படுத்தப்படும் சுருக்குச் சொற்கள் நம் அனைவருக்கும் தெரிந்தவையாகவே இருக்கின்றன. ஆனால், இவற்றின் எண்ணிக்கை மிகவும் குறைவு. நாம் நூல்களைப் படிக்கையிலும், இணையத்தில் சில கட்டுரைகளைப் படிக்கையிலும் பல விஷயங்களை அவற்றின் சுருக்குச் சொற்களாலேயே தெரிந்து கொள்கிறோம். அவற்றின் விரிவாக்கம் என அந்த நூல்களில் தரப்படுவதில்லை. வாசகர்களுக்குத் தெரியும் என அவற்றை எழுதியவர்கள் விட்டுவிடுகிறார்கள். அல்லது விரிவாக்கம் தெரிந்து என்ன ஆகப் போகிறது. விஷயம் தெரிந்தால் போதும் என்றும் விட்டுவிடுகிறார்கள். அப்படி ஒன்றை நாம் சந்திக்கும்போது, அவற்றின் விரிவாக்கத்தினை அறிந்து கொள்ள உதவும் வகையில் இணைய தளம் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. இதன் பெயர் All acronyms. இது கிடைக்கும் முகவரி http://www.allacronyms.com/.
இந்த தளத்தில் சென்றவுடன் இதில் கிடைக்கும் சுருக்குச் சொற்களின் எண்ணிக்கையும் அவற்றின் விரிவாக்கமும் தான். 30 லட்சத்து 96 ஆயிரம் சுருக்குச் சொற்கள், ஏறத்தாழ 2,740 தலைப்புகளில் தரப்பட்டுள்ளன. இதனைப் பார்த்தவுடனேயே, அதனை புக்மார்க் செய்திடும் ஆவல் ஏற்படும்.
இதன் தலைப்பில் நாம் தேடிப் பெறுவதற்கான தேடல் கட்டம் தரப்படுகிறது. இடது பக்கம், Topics, Popular, Random, and Suggest என நான்கு தலைப்புகளில் நாம் இவற்றைப் பெற வழி வகுக்கப்பட்டுள்ளது. இவை போக, அன்றைய தினத்தில் அதிகம் தேடப்பட்டது என ஐந்து சுருக்குச் சொற்கள் தரப்படுகின்றன. இவை ஒவ்வொன்றின் கீழாக அகர வரிசையில் தேடி அறியும் வழிகளும் கிடைக்கின்றன. இன்னும் பல வசதிகள் நம் தேடலை எளிமையாகவும் விரைவாகவும் அமைக்கின்றன. இன்றே இந்த தளம் சென்று பார்த்து உங்கள் குழந்தைகளுக்கும் இதனைப் பயன்படுத்தக் கற்றுத் தரவும்.

கேள்வி: என் ஜிமெயில் கணக்கினை மூடிவிட முடிவு செய்துள்ளேன். இதில் உள்ளவற்றை பேக் அப் எடுத்து வைத்துவிட்டேன். ஆனால், எப்படி மூடுவது எனத் தெரியவில்லை. என்ன செய்தால், சுவடின்றி அழிக்கப்படும் எனக் காட்டவும். எனக்கு இன்னொரு பெயரில் ஜிமெயில் அக்கவுண்ட் உள்ளது. அதனை மட்டுமே வைத்துக் கொள்ள விரும்புகிறேன். இரண்டை வைத்துக் கொள்வதில் சில நேரங்களில் குழப்பம் ஏற்படுகிறது.
என். கமலா. சென்னை.
பதில்
: பலர் இது போல இரண்டு அக்கவுண்ட்கள் வைத்துக் கொண்டு சமாளிக்க முடியாமல், ஒன்றைக் கவனிக்காமல் விட்டுவிடுகிறார்கள். ஆனால், அதில் தொடர்பு கொண்டிருந்த நண்பர்கள், அதற்கே மெயில் அனுப்பினால், நாம் அதனையும் பராமரித்துத்தான் ஆக வேண்டியுள்ளது. அதற்குப் பதிலாக, அதனை மூடிவிட்டால் நல்லதுதான்.
இனி எப்படி, உங்கள் கணக்கினை நீக்குவது எனப் பார்க்கலாம். முதலில்,
1. https://www.google.com/accounts/DeleteCaribouService என்ற முகவரியில் உள்ள தளம் செல்லவும்.
2. இங்கு உங்களுடைய யூசர் நேம் மற்றும் பாஸ்வேர்ட் கேட்கப்படும். சரியாகத் தரவும்.
3. இங்கு கிடைக்கும் செக்பாக்ஸில் டிக் அடையாளம் அமைக்கவும். பின்னர், மற்ற கூகுள் சேவைகளைப் பயன்படுத்த என்ன அக்கவுண்ட் பயன்படுத்தப் போகிறீர்கள் என்ற வினாவிற்கு, மாற்றாக உள்ள கூகுள் அக்கவுண்ட் பெயரினை அமைக்கவும்.
4. பாஸ்வேர்டினைக் கொடுத்து, "Remove Gmail"என்ற பட்டனில் கிளிக் செய்திடவும். இரண்டு நாட்களில் உங்கள் ஜிமெயில் அக்கவுண்ட் நீக்கப்படும்.
5. உங்கள் ஜிமெயில் அக்கவுண்ட் நீக்கப்பட்ட பின்னர், என்ன செய்தாலும், அந்த அக்கவுண்ட்டினை மீண்டும் பெற முடியாது. அதில் உள்ள மெசேஜ்கள் கிடைக்காது.

கேள்வி: தற்போது உள்ள விண்டோஸ் சிஸ்டத்தில் உள்ள கால்குலேட்டர்களில் பல பிரிவுகள் இருப்பதாக ஒரு கட்டுரையில் படித்தேன். அது போல இல்லையே. நான் விண்டோஸ் 7 வைத்துள்ளேன். ஏன், என்னிடம் மட்டும் இல்லை. தவறாகக் கையாண்டிருப்பேனோ என்ற சந்தேகம் வருகிறது. தீர்க்கும் வழிகளைத் தரவும்.
கா. விசுவநாதன், மதுரை.
பதில்:
உங்கள் கம்ப்யூட்டரில் உள்ள கால்குலேட்டர் சாதாரண கால்குலேட்டர் இல்லை. விண்டோஸ் சிஸ்டத்தில் இப்போது தரப்படும் கால்குலேட்டர்கள், வெறும் கூட்டல், கழித்தல் கணக்குகளை மட்டும் செயல்படுத்திக் காட்டும் வகையில் தரப்படுவதில்லை. மேலாக, இன்னும் பலவகை கணக்குகளையும் இதில் மேற்கொள்ளலாம். இவற்றைக் கையாளும் வழிகள் இதோ.
இதில் நான்கு வகையான கால்குலேட்டர்களைக் காணலாம். அவை: Standard, Scientific mode, Programmer mode, மற்றும் Statistics mode. கால்குலேட்டரில் மேலாகத் தரப்படும் டேப்களில், View கிளிக் செய்தால், இந்த வகைகள் பட்டியலிடப்படும். இந்த வகைகள் மட்டுமின்றி, நீங்கள் மேற்கொண்ட Standard and Scientific கணக்குகள் அனைத்தையும் பட்டியலிட்டுக் காட்டும். வியூ டேப் சென்று, History என்பதில் கிளிக் செய்தால், இதனைப் பெறலாம். History என்பதன் கீழ் Digit grouping என்ற பிரிவு கிடைக்கும். இதனைத் தேர்ந்தெடுத்தால், ஒவ்வொரு மூன்று இலக்கங்களை அடுத்து ஒரு காற்புள்ளி சேர்க்கப்படும்.
அதே போல, இப்பிரிவில் Unit or Time மாற்றுவதற்கான பிரிவும் உள்ளது. இதன் மூலம் நீங்கள் பிறந்து எத்தனை நாள் என்பதனைக் கணக்கிடலாம். இரு வேறு நாட்களுக்கு இடையே உள்ள நாட்களைக் கணக்கிடலாம். இதில் உள்ள ஒர்க் ஷீட் பிரிவில், gas mileage, mortgage payments, or lease payments ஆகியவற்றையும் கணக்கிடலாம். இவற்றைக் கணக்கிட்ட பின்னர், மீண்டும் கால்குலேட்டர் தொடக்க நிலைக்கு வர வியூ டேப் சென்று, Standard நிலையில் கிளிக் செய்திடலாம்.

கேள்வி: என்னிடம் விண்டோஸ் 8 ஆப்பரேட்டிங் சிஸ்டம் உள்ள லேப்டாப் உள்ளது. அனைத்து அப்டேட்டுகளும் டவுண்லோட் செய்யப்பட்டாலும், அவற்றை என் அனுமதி பெற்ற பின்னரே, இன்ஸ்டால் செய்திட வேண்டும் என செட்டிங்ஸ் அமைத்துள்ளேன். விண்டோஸ் 8.1 உள்ளது, இயக்கி செட் செய்திடவா என்று சிஸ்டம் பாப் அப் கேட்கிறது. இதனை அதன் போக்கில் இயக்கி, விண் 8.1க்கு அமைத்துக் கொள்ளலாமா? அப்படி அமைத்தால் தான், விண்டோஸ் 10 சிஸ்டத்திற்கு இலவசமாக அப்டேட் செய்திட முடியும் என்பது உண்மையா?
ஆர். மகேஸ்வரி, கோவை.
பதில்:
விண்டோஸ் 8.1க்கு அப்டேட் செய்து கொள்ளுங்கள். எந்தப் பிரச்னையும் வராது. அப்டேட் செய்து முடிக்கும் வரை, உங்கள் கம்ப்யூட்டர் மின்சக்தியுடன் இருக்க வேண்டும். இடையே அது குறைந்து இல்லாமல் போய்விடக் கூடாது. விண்டோஸ் 8.1க்கு மாறிய பின்னரே, விண்டோஸ் 10க்கு மாற முடியும் என்பது உண்மையே. நீங்கள் இப்போது மாறாவிட்டாலும், விண் 10க்கு மாற முயற்சிக்கையில், அது விண் 8.1க்கு மாற்றிக் கொண்டுதான், விண் 10க்கு உங்களைக் கொண்டு செல்லும். புதிய சிஸ்டங்களைப் பயன்படுத்தி, புதிய வசதிகளை இயக்கி அனுபவித்துப் பாருங்கள். உங்கள் கம்ப்யூட்டர் தொடு உணர் திரை கொண்டதா என்ற தகவலை நீங்கள் தரவில்லையே. பரவாயில்லை.

கேள்வி: சில ஸ்மார்ட் போன்களைப் பற்றி குறிப்பிடுகையில், அதில் அக்ஸிலரோமீட்டர் இருப்பதாக எழுதுகிறீர்கள். அதனைப் பற்றிச் சிறிது விரிவாகக் கூறவும். அதன் செயல்பாடு என்ன? அது அவசியம் தேவைப்படுமா?
எஸ். கலா ராணி, புதுச்சேரி.
பதில்:
அக்ஸிலரோமீட்டர் (accelerometer) என்பது ஸ்மார்ட் போனில் இயங்கும் ஒரு தொழில் நுட்பம், போன் எந்த பக்கம் திருப்பப்படுகிறது என்பதனை உணர்ந்து, அதற்கேற்றார்போல, திரைக் காட்சியை இந்த தொழில் நுட்பம் காட்டுகிறது. எடுத்துக் காட்டாக, பக்கவாட்டில் போன் திருப்பப்படும்போது, காட்சி போர்ட்ரெய்ட் நிலையிலிருந்து லேண்ட்ஸ்கேப் நிலைக்கு மாற்றப்படுகிறது. இதே தொழில் நுட்பம், செறிந்த நிலையில், கைரோஸ்கோபிக் சென்சார் என்னும் தொழில் நுட்பமாகச் செயல்பட்டு, போனின் மாற்று நிலைகளைத் துல்லியமாகக் கணக்கிட்டு தன் செயல்பாட்டினை மேற்கொள்கிறது.

கேள்வி: பேஸ்புக் தளத்தில், என் அக்கவுண்ட்டினைப் பார்க்கையில், ஒரு சிலர் பதிந்துள்ள விடியோ இயங்கத் தொடங்கிவிடுகிறது. இது அங்கு தரப்பட்டுள்ள தகவல் டெக்ஸ்ட்டைப் படிப்பதில் கவனக் குறைவினை ஏற்படுத்துகிறது. இதனை இயங்கவிடாமல் செய்திட என்ன செய்திடலாம்? அல்லது அவை இயங்கித் தான் ஆகுமா?
என். சம்பத் குமார், விருதுநகர்.
பதில்:
உங்களுக்கு விருப்பமில்லை எனில், அது இயங்குவதை நிறுத்திவிடலாம். பேஸ்புக் திரையில், மேலாகக் காட்டப்படும் சிறிய அம்புக் குறி அல்லது முக்கோணத்தினை கிளிக் செய்திடவும். இங்கு கிடைக்கும் செட்டிங்ஸ் (Settings) என்பதில் கிளிக் செய்து செட்டிங்ஸ் மெனு பெறவும். திரையின் இடது புறம் உள்ள பிரிவில், கீழாக Videos என்று ஒரு ஆப்ஷன் கிடைக்கும். அதில் கிளிக் செய்திடவும். பின்னர், இரண்டு பிரிவுகள் காட்டப்படும். ஒன்று மாறா நிலையில் உள்ளவை; இன்னொன்று Auto-Play Videos. பேஸ்புக் திறந்தவுடன், அதில் பதியப்பட்டுள்ள வீடியோக்கள் உடனே இயங்க வேண்டாம் என முடிவெடுத்தால், இதன் அருகில் உள்ள அம்புக் குறியை கிளிக் செய்து, அதில் Off என்பதனைத் தேர்ந்தெடுக்கவும்.

கேள்வி: வேர்ட் டாகுமெண்ட் ஒன்றை என் நண்பரிடமிருந்து பெற்றேன். அதில் ஒரு ப்ளோ சார்ட், அதனுள்ளாக டெக்ஸ்ட் பாக்ஸ் உள்ளது. இதனை பிரிண்ட் செய்திடுகையில், அந்த படம் அச்சாக மறுக்கிறது. பிரிண்டரில் இதற்கான செட்டிங்ஸ் இருப்பதாகத் தெரியவில்லை. வேர்ட் டாகுமெண்ட்டிலேயே இதற்கான செட்டிங்ஸ் அமைக்கப்பட்டிருக்குமா? அப்படியானால், எப்படி இதனை நீக்கி அச்சிடலாம்?
செ.நிரஞ்சன் குமார், மதுரவாயல்.
பதில்:
வேர்ட் புரோகிராம், நம் டாகுமெண்ட்டில் டெக்ஸ்ட்டுடன் இணைக்கப்பட்டிருப்பவற்றில், எவற்றை அச்சிடலாம், எவற்றை அச்சிடக் கூடாது என வரையறை செய்து வைக்கிறது. இருப்பினும், நீங்கள் விரும்பும் கிராபிக்ஸ் படங்களை அப்படியே அச்சில் கிடைக்க வேண்டும் என விரும்பினாலும், அதனை அச்சிடும் வசதி உள்ளது. அதற்கான செட்டிங்ஸ் அமைப்பினை இங்கு தருகிறேன்.
1. முதலில் Word Options டயலாக் பாக்ஸைத் திறக்கவும்.
2. இந்த டயலாக் பாக்ஸில் இடது பக்கமாக உள்ள Advanced என்பதில் கிளிக் செய்திடவும்.
3. இதில் Print என்று இருக்கும் பகுதி வரை ஸ்குரோல் செய்து செல்லவும்.
4. இங்கு Use Draft Quality என்பதை நீக்கி வைக்கவும்.
5. பின்னர் இடது புறம் உள்ள Display என்பதில் கிளிக் செய்திடவும்.
6. அடுத்து Print Drawings Created in Word என்பதில் உள்ள செக் பாக்ஸ் தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பதனை உறுதி செய்திடவும். இதே போல Print Background Colors and Images என்பதையும் தேர்ந்தெடுக்கவும். பின் ஓகே கிளிக் செய்து வெளியேறவும். இனி உங்கள் டாகுமெண்ட்டில் உள்ள இமேஜ், கிராபிக்ஸ் இமேஜ் ஆகியவை அழகாக அச்சிடப்படுவதனைக் காணலாம்.

Advertisement

 வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X