இன்டெக்ஸ் டெக்னாலஜிஸ் நிறுவனம், தன்னுடைய 4ஜி நெட்வொர்க் ஸ்மார்ட் போனை விற்பனைக்கு அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் விலை ரூ.9,499. இதில் 5 அங்குல எச்.டி. டிஸ்பிளே கொண்ட திரை தரப்பட்டுள்ளது. ஸ்கிராட்ச் ஏற்படாத வகையில், இதில் ட்ரேகன் ட்ரெய்ல் கிளாஸ் அமைப்பு வழங்கப்பட்டுள்ளது. 1.3 கிகா ஹெர்ட்ஸ் வேகத்தில் இயங்கும் குவாட் கோர் MediaTek MT6735 64 பிட் ப்ராசசர் இயங்குகிறது. இதன் ஆப்பரேட்டிங் சிஸ்டம் ஆண்ட்ராய்ட் லாலிபாப் 5.0. இதன் பின்புறக் கேமரா 13 மெகா பிக்ஸெல் திறனுடன் எல்.இ.டி. ப்ளாஷ் கொண்டுள்ளது. முன்புறமாக 5 மெகா பிக்ஸெல் கேமரா தரப்பட்டுள்ளது. இரண்டு கேமராக்களையும் ஒரே நேரத்தில், படத்திற்குள் படம் என்ற வகையில் இயக்கலாம். ஸ்லோ மோஷன் விடியோ பதிவும் இதில் கிடைக்க வழி தரப்பட்டுள்ளது. இரண்டு சிம்களை இயக்கலாம். ஒரு சிம் இயக்கத்தில் 4ஜி நெட்வொர்க் இணைப்பும், மற்றதில் 3ஜி இணைப்பும் இயக்கலாம். 21 மாநில மொழிகளுக்கான சப்போர்ட் கிடைக்கிறது.
ஸ்மார்ட் போன் சந்தையில், தற்போது எதிர்பார்க்கப்படும் அதி நவீன வசதிகளுடன் குறைந்த விலையில், இதனை அறிமுகப்படுத்துவதாக, இந்நிறுவனத்தின் வர்த்தகப் பிரிவின் தலைவர் குறிப்பிட்டுள்ளார்.
இதன் ராம் மெமரி 2 ஜி.பி. ஸ்டோரேஜ் மெமரி 16 ஜி.பி. இதனை அதிகப்படுத்தும் வசதியும் உண்டு. எப்.எம். ரேடியோ மற்றும் 3.5 மிமீ ஆடியோ ஜாக் தரப்பட்டுள்ளன. நெட்வொர்க் இணைப்பிற்கு, 4ஜி, 3ஜி, வை பி, புளுடூத் 4.0., ஜி.பி.எஸ். ஆகிய தொழில் நுட்பங்கள் இயங்குகின்றன. இதன் பேட்டரி 2,300 mAh திறனுடன் உள்ளது. இந்தியா முழுவதும் உள்ள மொபைல் போன் விற்பனை மையங்களில் இது கிடைக்கிறது.