எல்.ஐ.சி.,யில் வளர்ச்சி அதிகாரி ஆகலாம் | வேலை வாய்ப்பு மலர் | Jobmalar | tamil weekly supplements
எல்.ஐ.சி.,யில் வளர்ச்சி அதிகாரி ஆகலாம்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 

பதிவு செய்த நாள்

15 ஜூன்
2015
00:00

எல்.ஐ.சி., என்ற லைப் இன்சூரன்ஸ் கார்ப்பரேஷன் ஆப் இந்தியா நிறுவனத்தைப் பற்றிய அறிமுகம் என்பது தேவையே இல்லை. ஏனென்றால் கடந்த 1956ல் நிறுவப்பட்டு 50 ஆண்டுகளைக் கடந்து பொதுத் துறை நிறுவனங்களுள் தனக்கென்று தனி முத்திரை பதித்து, தனியார் போட்டியையும் சமாளித்து இத்துறையின் நம்பர் ஒன் நிறுவனமாக திகழ்வது அனைவரும் அறிந்ததே.
இவ்வளவு பிரசித்தி பெற்ற நிறுவனத்தில் மார்க்கெட்டிங் பிரிவைச் சார்ந்த அப்ரென்டிஸ் டெவலப்மென்ட் ஆபிசர் பணியிடங்களை நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. கோட்ட அளவில் நிரப்பப்பட இருக்கும் இந்த பணியிடங்களில் சென்னையைத் தலைமையகமாகக் கொண்ட தென் மண்டலத்தில் மட்டும் 679 பணியிடங்கள் காலியாக உள்ளன.
வயது: விண்ணப்பதாரர்கள் 01.06.2015 அடிப்படையில் 21 வயது நிரம்பியவராகவும், 30 வயதுக்கு உட்பட்டவராகவும் இருக்க வேண்டும். உச்ச வயதில் உள்ள சலுகைகள் பற்றி அறிய இந்த நிறுவனத்தின் இணைய தளத்தைப் பார்க்கவும்.
கல்வித் தகுதி: ஏதாவது ஒரு பிரிவில் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தின் மூலமாக பட்டப் படிப்பை முடித்திருக்க வேண்டும்.
எம்.பி.ஏ., படிப்பில் மார்கெடிங் சிறப்புத் தகுதி பெற்றவர்களுக்கும், பி.ஜி., டிப்ளமோ இன் மார்கெட்டிங் முடித்தவர்களுக்கும் முன்னுரிமை உள்ளது.
தேர்ச்சி முறை: ஆன்-லைன் முறையில் நடத்தப்படும் அப்ஜெக்டிவ் வகை எழுத்துத் தேர்வை எழுதி தேர்ச்சி பெற வேண்டும். இதில் வெற்றி பெறுபவர்கள் நேர்காணல் மற்றும் மருத்துவப் பரிசோதனைத் தேர்வுகளை எதிர்கொண்டு வெற்றி பெற வேண்டியிருக்கும்.
அப்ஜெக்டிவ் வகை தேர்வில் மூன்று தாள்கள் இருக்கும். டெஸ்ட் ஆப் ரீசனிங் அண்டு நியூமரிக்கல் எபிலிடி, ஜெனரல் நாலெட்ஜ் அண்டு கரண்ட் அபெயர்ஸ் மற்றும் இங்கிலீஷ் லாங்குவேஜ், இன்சூரன்ஸ் அண்டு பினான்சியல் மார்கெடிங் அவேர்னஸ் என்ற மூன்று தாள்கள் இருக்கும்.
எழுத்துத் தேர்வு மையங்கள்: எல்.ஐ.சி.,யின் வளர்ச்சி அதிகாரிகள் பதவிக்கான எழுத்துத் தேர்வு தமிழ் நாட்டில் சென்னை, கோவை, மதுரை, சேலம், தஞ்சாவூர், திருநெல்வேலி, வேலூர் ஆகிய மையங்களில் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பிக்கும் முறை: ஆன்-லைன் முறையில் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பக் கட்டணம் மற்றும் அதனை செலுத்தும் முறை, ஆன்-லைனில் விண்ணப்பிக்கத் தேவைப்படுபவை பற்றிய முழுமையான தகவல்களை பின்வரும் இணையதளத்திற்கு சென்று அறிந்து அதன் பின்னர் விண்ணப்பிக்கவும்.
விண்ணப்பிக்க இறுதி நாள்: 30.06.2015
இணையதள முகவரி: www.licindia.in

Advertisement

 We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X