சின்ன சின்ன செய்திகள்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

17 ஜூன்
2015
00:00

மஞ்சள் : தேவையைப் பொறுத்து களை எடுக்க வேண்டும். அடியுரமிட்ட 40 நாட்கள் கழித்து எக்டருக்கு 65 கிலோ யூரியா மேலுரமாக இட வேண்டும். எக்டருக்கு 5 டன் பசுந்தழை, களை எடுத்தவற்றைக் கொண்டு மீண்டும் பாத்திகள் மேல் பரப்பி மூடாக்கு இட வேண்டும்.
மிளகாய் : அறுவடை முடிந்தவுடன் அடுத்த பருவத்தில் மிளகாய் சாகுபடி செய்யவுள்ள நிலத்தில் பில்லிப்பசரா, தட்டைப்பயறு, சணப்பை போன்ற பசுந்தாள் பயிர்கள் விதைக்க வேண்டும். மிளகாய் அறுவடை முடிந்த பின் மிளகாய் செடிகளைப் பிடுங்கி துண்டுகளாக்கி மண்ணில் கலந்து விட வேண்டும். இதனால் மண்வளம் அதிகரிப்பதுடன் மண்ணின் நீர்ப்பிடிப்பு தன்மையும் அதிகரிக்கும்.
புதிய ஸ்பைசஸ் பார்க் : நாட்டின் மிகப்பெரிய ஸ்பைசஸ்பார்க் ஆந்திரப் பிரதேசத்திலுள்ள குண்டூரில் ஏப்ரல் 2015லிருந்து செயல்படத் துவங்கியுள்ளது. எடலப்பாடு மண்டலத்தில் குண்டூர் - சிலக்கரூரி பெட் நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது. இந்த பார்க் சுமார் 125 ஏக்கர் பரப்பில் அமைந்துள்ளது. பொது மற்றும் தனியார் பங்கேற்பு என்ற முறையில் இது அமைந்துள்ளது. இது மிளகாய் விவசாயம் அறுவடைக்கு பிறகுள்ள செய்முறைகள் பேக்கேஜிங், சேமித்து வைத்தல் மற்றும் ஏற்றுமதி செய்யும் வசதி போன்ற ஒருங்கிணைந்த பயன்பாடுகளை உள்ளடக்கிய ஸ்பைசஸ்பார்க் ஆகும்.
ஒருமணி நேரத்தில் இரண்டு டன் மிளகாயைப் பதப்படுத்தும் திறன் கொண்ட எந்திரங்களை கொண்ட பார்க் ஆகும். ஒருமணி நேரத்தில் 500 கிலோ மிளகாயை நீராவி மூலம் சுத்தப்படுத்தும் நிலையமும் அமைக்கப்பட்டு வருகிறது.
திரவநிலை சூடோமோனாஸ் புளுரசன்ஸ் : பொதுவாக தூள் முறை சூடோமோனாஸ் புளுரசன்ஸ் ஆனது பெருமளவில் பயன்படுத்தப்பட்டு வந்தது. ஆனால் இத்தகைய துகள் முறை மூன்று மாதங்கள் மட்டுமே பயன்படுத்துவது மட்டுமல்லாமல் சொட்டுநீர்ப் பாசனத்திற்கு குழாய்களில் அடைபட்டு பாசனத்திற்கு தடையாய் அமைகிறது. இத்தகைய பிரச்னைகளுக்கு மாற்றாக திரவநிலை சூடோமோனாஸ் புளுரசன்ஸ் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இத்தகைய திரவநிலையை நீண்டநாள் வைத்து பயன்படுத்தலாம்.
மேலும் அதிக எண்ணிக்கை அளவில் இத்தகைய முறை உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. சொட்டுநீர்ப்பாசனத்தில் எளிய முறையில் பயன்படுத்துவதற்கு ஏதுவாகவும் மற்ற முறைகளைக் காட்டிலும் இத்தகைய திரவ நிலை சிறப்பாக செயல்படுகிறது.
விதை நேர்த்தி : 10மிலி திரவ நிலை சூடோமோனாஸை ஒரு லிட்டர் தண்ணீரில் கலந்து அதனை ஒரு கிலோ விதையுடன் 10 நிமிடங்களுக்கு நேர்த்தி செய்ய வேண்டும். நாற்று களைத்தல், மண் மூலம் நேர்த்தி செய்தல், சொட்டுநீர்ப்பாசன மூலம் பயன்படுத்துதல் போன்ற முறைகளை கையாண்டு, தானியப் பயிர்களில் வேர்களைத் தாக்கும் நோய்கள், எண்ணெய்வித்து, பயறு வகைப் பயிர்களில் வேரழுகல், வாடல்நோய்கள், தோட்டக்கலைப் பயிர்களின் நாற்றமுக, வாடல்நோய், வாழையில் வாடல்நோய் போன்ற எல்லா மண்வழிக் காரணிகளையும் கட்டுப்படுத்தும்.
- டாக்டர் கு.சௌந்தரபாண்டியன்.

Advertisement

 



வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X