ஸ்மார்ட் போன் மற்றும் டேப்ளட் பாதுகாப்பு | மொபைல் மலர் | Mobilemalar | tamil weekly supplements
ஸ்மார்ட் போன் மற்றும் டேப்ளட் பாதுகாப்பு
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 

பதிவு செய்த நாள்

22 ஜூன்
2015
00:00

சென்ற மாதம், ஒருவர் தன்னுடைய லேப் டாப் கம்ப்யூட்டரை மின்சாரம் வழங்கும் ப்ளக் சாக்கெட்டில் இணைக்கையில், மின்சாரம் பாய்ந்து உயிர் இழக்க நேரிட்டதாகத் தகவல் வெளியானது. அவர் மின் இணைப்பு கொடுக்கையில், குளிர்பானம் ஒன்று அருந்திக் கொண்டிருந்ததாகவும், அப்போது விரல் ஒன்று ப்ளக்கில் இருந்த பின்களுக்கு இடையே சென்று, மின்சாரத்துடன் தொடர்பினை ஏற்படுத்தியதால், இந்த விபத்து நேர்ந்ததாகத் தெரிய வந்தது. சில அடிப்படை பாதுகாப்பு செயல்பாடுகளை மேற்கொண்டால், நாம் இது போன்ற விபத்துகளிலிருந்து தப்பிக்கலாம். நாம் அன்றாடம் பயன்படுத்தும் சாதனங்கள் குறித்து இங்கு பார்க்கலாம்.
ஸ்மார்ட்போன் மற்றும் டேப்ளட் சாதனங்களின் சார்ஜர்களைப் பிரித்தே கையாளவும். ஒன்றின் இடத்தில் இன்னொன்றைப் பயன்படுத்தக் கூடாது. இவை வெவ்வேறு மின்சக்தி திறனைக் கொள்ள வேண்டியவையாக இருக்கும். எனவே, ஒன்றின் இடத்தில் இன்னொரு சார்ஜரைப் பயன்படுத்துகையில், அதிக மின்னோட்டத்தினால், சாதனம் கெட்டுப் போக வாய்ப்புண்டு.
ஸ்மார்ட் போனை இரவு முழுவதும் சார்ஜில் வைத்திருக்க வேண்டாம். இதனால் வெப்பம் அதிகமாகி, பேட்டரி கெட்டுவிடும் வாய்ப்பு ஏற்படலாம். எனவே இரவு முழுவதும் இணைப்பில் வைத்திருக்காமல், நாம் உறங்கி எழுந்த பின்னர் கூட சார்ஜ் செய்திடலாமே.
உங்களுடைய சாதனத்தின் பேட்டரி தன் வாழ்நாள் பயனை இழந்துவிட்டதா? அதனை மாற்றியாக வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டு விட்டீர்களா? மாற்று பேட்டரி வாங்குகையில், தரமான அதே நிறுவனத்தின் பேட்டரியினை வாங்கவும். விலை மலிவு என்று எண்ணி, தரமற்ற தர்ட் பார்ட்டி தயாரிப்புகளை வாங்க வேண்டாம். போனை சார்ஜ் செய்திடுகையில், அழைப்புகளை ஏற்படுத்த வேண்டாம். இந்த இரண்டு செயல்பாடுகளுமே வெப்பத்தை உருவாக்கக் கூடியவை. வயர்லெஸ் ஹெட்செட் ஒன்றைப் பயன்படுத்தவும். அல்லது போன் சார்ஜ் ஆகும்வரை பொறுத்திருக்கவும்.
சார்ஜ் செய்திடும் வயரில் உங்கள் போனைத் தொங்கவிட வேண்டாம். இது உங்கள் போனில் உள்ள கனெக்டரைக் கெடுத்துவிடும்.
உங்களுடைய மொபைல் போனுக்கு மதிப்பு கொடுக்கவும். அப்போதுதான் அது நீண்ட நாள் உங்கள் நண்பனாக இருக்கும்.

Advertisement

 



We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X