துணுக்கு மூட்டை!
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
Advertisement
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

30 மே
2010
00:00

பாக்யராஜ் புத்திமதி!
"வேட்டிய மடிச்சுக்கட்டு' படத்தில் நடித்த பிறகு, படிப்பே ஏறவில்லையாம் சாந்தனுவுக்கு. இதை புரிந்து கொண்ட அவரது தந்தை பாக்யராஜும், மகனிடம் வேறு விஷயங்களை திணிக்காமல், அவர் விரும்பிய சினிமாத் துறைக்கு வர, பச்சைக் கொடி காட்டி விட்டார். இதை அடிப்படையாக கொண்டுதான், "சித்து பிளஸ் 2 பர்ஸ்ட் அட்டம்ட்!' கதை பண்ணியுள்ளார் பாக்யராஜ். முக்கியமாக, இப்படத்தில் பிள்ளைகளை அவர்கள் விரும்பிய துறைக்கு செல்ல தடையாக இருக்கும் பெற்றோருக்கு, புத்தி மதி சொல்லியிருக்கிறார்.
* * *
ராம்கோபால்வர்மா இயக்கும் "ரத்த சரித்திரம்!'
இந்தி, தமிழ், தெலுங்கு என மூன்று மொழிகளில் ராம்கோபால்வர்மா இயக்கிவரும், "ரத்த சரித்திரம்' படம், ஆந்திராவில் நடந்த உண்மைக் கதையின் பாதிப்பில் உருவாக்கப்பட்டுள்ளது. இதற்காக, ரவி என்பவரின் கொலை வழக்கில், அனந்தப்பூர் சிறையில் இருக்கும் சூரி என்பவரை நேரில் சந்தித்து, திரைக்கதைக்கு தேவையான விஷயங்களை சேகரித்துள்ளார்.
— சினிமா பொன்னையா.
* * *
டூ-பீஸ் கதைகள் தேடும் நிகிதா!
"சரோஜா' படத்தில், வில்லனுக்கு ஜோடியாக நடித்த நிகிதாவுக்கு தமிழில் பெரிய ஹீரோயினாக வேண்டும் என்ற ஆசை, மனசு நிறைய உள்ளது. அதனால், தற்போது தெலுங்கு படங்களில் நடித்து வரும் நிகிதா, அடிக்கடி சென்னைக்கு விசிட் அடித்து, டூ-பீஸ் ரேஞ்ச் கதைகளில் நடிக்கவும் தான் தயாராக இருப்பதாக, சில கமர்ஷியல் பட இயக்குனர்களுக்கு கல்லெறிந்து வருகிறார். கண்டதைக் கொண்டு கரை ஏற வேண்டும்!
— எலீசா.
* * *
ஓட்டம் பிடித்த நமீதா!
ஒரு நேரத்தில் தமிழக ரசிகர்களின் நாடி நரம்புகளில் பின்னிப் பிணைந்து துடித்துக் கொண்டிருந்த நமீதாவை சுத்தமாக தலைமுழுகி விட்டது கோடம்பாக்கம். ஆனால், அம்மணியின் அபிமானிகள் இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். அவர் நடித்து வந்த சில படங்கள் கிடப்பில் இருக்கின்றன. அவை தூசு தட்டப்பட்டால், மீண்டும் நமீதாவின் கொடி பறக்கத் துவங்கிவிடும் என்பதோடு, அதற்கான முயற்சிகளில் நமீதா தரப்பு இறங்கியிருப்பதாகவும் கூறுகின்றனர். கிடக்கிறது எல்லாம் கிடக்க கிழவியைத் தூக்கி, மனையில் வைத்த கதை!
.* * *
மீண்டும் வருகிறார் கங்கனா ரணாவத்!
ஜெயம் ரவியுடன், "தாம்தூம்' படத்தில் நடித்த கங்கனா ரணாவத், தொடர்ந்து தமிழில் படங்கள் கமிட்டாகாததால், பாலிவுட்டுக்கே சென்று விட்டார். சில வருட இடைவேளைக்கு பிறகு, தற்போது, மீண்டும் தமிழ் ரசிகர்களை சந்திக்க வருகிறார் கங்கனா. ஆனால், நேரடி தமிழ்படம் மூலமாக அல்ல, தமிழுக்கு டப்பாகும், "கைட்ஸ்' என்ற இந்தி படம் மூலமாக மீண்டும் வருகிறார். போன மச்சான் திரும்பி வந்தான் பூமணத்தோடே!
* * *
கைவிட்ட அஞ்சலி!
"கருங்காலி' என்றொரு படத்தை முன்னணி ஹீரோ ஒருவரை வைத்து இயக்கப் போவதாக கூறி வந்த டைரக்டர் மு.களஞ்சியம், இப்போது தானே அப்படத்தின் ஹீரோவாகி விட்டார். இதனால், முன்னணி ஹீரோ நடித்தால், தான் நடிப்பதாக சம்மதித்திருந்த, "அங்காடித் தெரு' அஞ்சலி, இப்போது அப்படத்திலிருந்து விலகி விட்டார். அவசர கதியில் மாற்று ஹீரோயின் தேடி வருகிறார் களஞ்சியம். கிட்டாதாயின் வெட்டென மற!
* * *
சானாகானின் புதிய அறிவிப்பு!
"தம்பிக்கு இந்த ஊரு' படத்தில் அதிரடி கிளாமரை வெளிப்படுத்திய சானாகானை தோலுரிக்க சிலர் கங்கணம் கட்டினர்; ஆனால், அம்மணியோ உஷாராகி விட்டார். "ஓவர் கவர்ச்சி உடம்புக்கு ஆகாது...' என்று, முற்றுகையிட்ட கமர்ஷியல் படாதிபதிகளை திருப்பி அனுப்பி விட்டார். இதைத் தொடர்ந்து, "சிங்கிள் ஹீரோயின் கதைகளில் மட்டுமே நடிப்பேன்...' என்ற புதிய அறிவிப்பையும் கோலிவுட்டில் வெளியிட்டுள்ளார். ஆய உபாயம் அறிந்தவன் அரிது அல்ல வெல்வது!
* * *
தங்கைக்கு விட்டுக் கொடுத்தார் காஜல் அகர்வால்!
ராதா மோகன் இயக்கத்தில், நாகார்ஜுனா நடிக்கும், "பயணம்' படத்தில் நடிக்க முதலில் ஓ.கே., சொல்லியிருந்த காஜல் அகர்வால் திடீரென்று பின் வாங்கி விட்டார். இருப்பினும், தனக்குப் பதிலாக தன் தங்கை நிஷா அகர்வாலை அப்படத்தில், "கமிட்' பண்ணியுள்ளார். மேலும், பெரிய ஹீரோ படம் என்பதால், தங்கைக்கு நடிப்பு யுக்திகளையும் போதித்து வருகிறார். சல்லி கட்டின மாட்டுக்கு சொல்லிக் கொடுக்க வேண்டுமா?
— எலீசா.
* * *


Advertisement

 



வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X