4ஜி ஸ்மார்ட் போன் ரூ. 4,999 விலையில் | மொபைல் மலர் | Mobilemalar | tamil weekly supplements
4ஜி ஸ்மார்ட் போன் ரூ. 4,999 விலையில்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 

பதிவு செய்த நாள்

22 ஜூன்
2015
00:00

இஸட்.டி.இ. நிறுவனம், அனைத்து தரப்பினரும் 4ஜி ஸ்மார்ட் போனை வாங்கிப் பயன்படுத்த வேண்டும் என்ற இலக்குடன், இந்திய சந்தையில், தன் பிளேட் லக்ஸ் 4ஜி ஸ்மார்ட் போனை ரூ.4,999 என விலையிட்டு விற்பனைக்கு அறிமுகப்படுத்தியுள்ளது. 4.5 அங்குல அளவில், 854 x 480 பிக்ஸெல்கள் திறனுடன், ஐ.பி.எஸ். டிஸ்பிளே கொண்ட FWVGA திரை, 1.3 கிகா ஹெர்ட்ஸ் வேகத்தில் இயங்கும் MediaTek MT6732M ப்ராசசர், ஆண்ட்ராய்ட் 4.4 கிட்கேட் ஆப்பரேட்டிங் சிஸ்டம், எல்.இ.டி. ப்ளாஷ் இணைந்த 8 மெகா பிக்ஸெல் திறன் கொண்ட கேமரா, முன்புறமாக 5 மெகா பிக்ஸெல் திறன் கொண்ட கேமரா, இரண்டு சிம் இயக்க வசதி, நெட்வொர்க் இணைப்பிற்கு 4ஜி அலைவரிசை, வை பி, புளுடூத், ஜி.பி.எஸ். ஆகிய தொழில் நுட்ப இயக்கங்கள் ஆகியனவற்றை இதன் சிறப்பம்சங்களாகக் கொள்ளலாம். இதன் ராம் நினைவகம் 1 ஜி.பி. ஸ்டோரேஜ் நினைவகம் 8 ஜி.பி. இதனை மைக்ரோ எஸ்.டி. கார்ட் கொண்டு 32 ஜி.பி. வரை அதிகப்படுத்தலாம். இதன் பரிமாணம் 134.5×67.4×10.3 மிமீ. எடை 154 கிராம். இதில் தரப்பட்டுள்ள பேட்டரி 2,200 mAh திறன் கொண்டது.
இந்த ஸ்மார்ட் போனை அமேஸான் டாட் இன் என்னும் இந்திய வர்த்தக இணைய தளத்தில் வாங்கிக் கொள்ளலாம். ஏர்டெல் வாடிக்கையாளர்களுக்கு இரு மடங்கு டேட்டா அனுமதியுடன் விற்பனை செய்யப்படுகிறது.
இந்தியாவில் 4ஜி அலைவரிசை பயன்பாடு தொடங்கி, மக்கள் அதனை விரும்பி மேற்கொள்ள திட்டமிடும் நேரத்தில், இது போல குறைந்த விலையில், ஸ்மார்ட் போன்கள் தருவது, நல்லதொரு மாற்றத்திற்கு துணையாக இருக்கும் என இந்நிறுவனத்தின் தெற்காசிய மண்டல விற்பனை அதிகாரி தெரிவித்தார்.

Advertisement

 



We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X