விற்றுத் தீர்ந்த ஸியாமியின் பவர் பேங்க் | மொபைல் மலர் | Mobilemalar | tamil weekly supplements
விற்றுத் தீர்ந்த ஸியாமியின் பவர் பேங்க்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 

பதிவு செய்த நாள்

22 ஜூன்
2015
00:00

இந்தியாவில் அனைத்து வகைகளிலும் தன் வர்த்தகத்தினை மேற்கொள்ள சீனாவினைச் சேர்ந்த ஸியோமி நிறுவனம் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இதன் மொபைல் போன்கள் அறிமுகப்படுத்திய சில நாட்களிலேயே விற்பனையாகி வருகின்றன.
இதனைத் தொடர்ந்து தன் நிறுவனம் தயாரிக்கும் பவர் பேங்க் சாதனங்களை, ஸியோமி இந்தியாவில் விற்பனைக்குக் கொண்டு வந்தது.
மொபைல் போன்களை மின்சாரத்திற்கு இணைப்பு இல்லாத இடங்களில் சார்ஜ் செய்வதற்காக, பேட்டரிகளில் மின் சக்தியைத் தேக்கி வைத்து, சார்ஜ் செய்திடும் பழக்கம் பரவி வருகிறது. இந்த சாதனத்தினை பவர் பேங்க் என அழைக்கிறோம். தற்போது சந்தையில் பல நிறுவனங்கள் இதனைத் தயாரித்து வழங்கி வருகின்றன.
முதலில் Mi 16000mAh பவர்பேங்க் அறிமுகமானது. விற்பனைக்கு வந்த முதல் நாளிலேயே அனைத்தும் விற்பனையானது. நான்கு நிமிடம் ஐந்து விநாடிகளில் அனைத்தும் விற்பனை செய்யப்பட்டன என்று ஸியோமி அறிவித்துள்ளது. அடுத்த வாரம் 5000mAh திறன் கொண்ட பவர் பேங்க் விற்பனைக்கு வருகிறது.
இந்த புதிய 5000mAh பவர் பேங்க், 9.9 மிமீ தடிமன் உடையது. இதன் எடை 156 கிராம். மற்ற ஸியோமி பவர் பேங்க் சாதனங்களைப் போன்றே, வெளியே அலுமினியப் பூச்சு கொண்டிருக்கும். இதில் 9 சர்க்யூட் பாதுகாப்பு தரப்பட்டுள்ளது. இதனால், மின்சக்தியை வாங்கிக் கொள்வதும், கொடுப்பதிலும் விரைவாகச் செயல்படுகிறது. இதன் உள்வாங்கும் சக்தி 2.0 ஆம்பியர். வெளியே தரும் சக்தி 2.1. ஆம்பியர். எனவே, இதைக் கொண்டு ஒரு ஐபேட் சாதனத்திற்கும் மின்சக்தி தரலாம். Mi India website என்ற வர்த்தக இணைய தளம் மூலம் இவை விற்பனை செய்யப்படுகின்றன. Xiaomi Mi 5000mAh பவர் பேங்க் விலை ரூ.699.

Advertisement

 



We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X