யூகோ வங்கியில் புரொபேஷனரி அதிகாரிப் பணி வாய்ப்பு
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

08 நவ
2010
00:00

இந்தியாவில் பொதுத்துறையில் இயங்கும் வங்கிகளில் யூகோ வங்கிக்கு ஒரு தனி இடம் உண்டு. இந்த வங்கியில் 1050 புரொபேஷனரி அதிகாரிகளை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்தப் பதவிக்கு எஸ்.சி., எஸ்.டி., ஓ.பி.சி., பிரிவினருக்கு இட ஒதுக்கீடும் உள்ளது. முழு விபரங்கள் இணைய தளத்தில் கொடுக்கப்பட்டுள்ளன.
வயது வரம்பு
யூகோ வங்கியின் புரொபேஷனரி அதிகாரிப் பதவிக்கு விண்ணப்பிக்க 30.112010 அன்று குறைந்த பட்சம் 21 வயது நிரம்பியவராகவும், 30 வயதுக்கு உட்பட்டவராகவும் இருக்க வேண்டும். எஸ்.சி., எஸ்.டி., பிரிவினருக்கு 5 ஆண்டுகளும், ஓ.பி.சி., பிரிவினருக்கு 3 ஆண்டுகளும், முன்னாள் ராணுவத்தினருக்கு 5 ஆண்டுகளும், உடல் ஊனமுற்றோருக்கு 10 ஆண்டுகள் வ்ரையிலும் உச்ச பட்ச வயதில் சலுகைகள் உள்ளது. முழு விபரங்கள் அறிய இணைய தளத்தைப் பார்க்கவும்.
கல்வித் தகுதி
யூகோ வங்கியின் புரொபேஷனரி அதிகாரிப் பதவிக்கு விண்ணப்பிக்க அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக் கழகத்தின் மூலமாக ஏதாவது ஒரு பிரிவில் குறைந்த பட்சம் 55 சதவிகித மதிப்பெண்களுடன் பட்டப்படிப்பை முடித்திருக்க வேண்டும். எஸ்.சி., எஸ்.டி., பிரிவினர் குறைந்த பட்சம் 50 சதவிகித மதிப்பெண்களைப் பெற்றிருந்தால் போதுமானது.
தேர்ச்சி முறை
யூகோ வங்கியின் புரொபேஷனரி அதிகாரிப் பதவிக்கு எழுத்துத் தேர்வு, நேர்காணல் என்ற முறைகளில் தேர்ச்சி செய்யப்படுவார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
அப்ஜெக்டிவ் வகையிலான எழுத்துத் தேர்வில் டெஸ்ட் ஆப் ஜெனரல் அவேர்னஸ் அண்டு கம்ப்யூட்டர்ஸ், டெஸ்ட் ஆப் இங்கிலீஷ் லாங்குவேஜ், டெஸ்ட் ஆப் குவான்டிடேடிவ் ஆப்டியூட், டெஸ்ட் ஆப் ரீசனிங் ஆகிய பகுதிகளிலிருந்து கேள்விகளும், இதன் தொடர்ச்சியாக நடத்தப்படும் டெஸ்கிரிப்டிவ் வகையிலான தேர்வில் சமீபத்திய பொருளாதார அம்சங்களிலிருந்து கேள்விகளும் இடம் பெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் வெற்றி பெறுபவர்களுக்கு நேர்காணலுக்கான அழைப்பு அனுப்பப்படும். எழுத்துத் தேர்வு தமிழ் நாட்டில் சென்னையில் மட்டும் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பக் கட்டணம்
யூகோ வங்கியின் புரொபேஷனரி அதிகாரி பதவிக்கு விண்ணப்பிக்க ரூ.400/-ஐக் கட்டணமாகச் செலுத்த வேண்டும். எஸ்.சி., எஸ்.டி., பிரிவினர் ரூ.50/- மட்டும் கட்டணமாகச் செலுத்தினால் போதுமானது. இந்தக் கட்டணத்தை யூகோ வங்கியின் இணைய தளத்தில் கொடுக்கப்பட்டுள்ள சலானை டவுண்லோடு செய்து, பிரின்ட் அவுட் எடுத்து ஏதாவது ஒரு யூகோ வங்கிக் கிளையில் சலானில் குறிப்பிடப்பட்டுள்ள அக்கவுன்ட் எண்ணில் மட்டுமே கட்ட வேண்டும். இதன் பின்னரே விண்ணப்பிக்கும் நிலைக்கு செல்ல வேண்டும். ஒரிஜினல் சலானின் உங்களது பகுதியைப் பத்திரமாக வைத்திருந்து எழுத்துத் தேர்வுக்கு செல்லும் போது எடுத்துச் செல்ல வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை
யூகோ வங்கியின் புரொபேஷனரி அதிகாரி பதவிக்கு ஆன்-லைன் முறையில் மட்டுமே விண்ணப்பிக்க முடியும். வேறு எந்த முறையிலும் விண்ணப்பிக்க முடியாது. எனவே உங்களுக்கான பிரத்யேகமான ஒரு இ-மெயில் முகவரி இருப்பதனை உறுதி செய்யவும். இந்த முகவரி மூலமே உங்களுக்கு நேர்காணல் உள்ளிட்ட தகவல்கள் வழங்கப்படும் என்பதால் இ-மெயில் முகவரி நடப்பில் இருப்பதும் அவசியத் தேவையாகும். பணம் கட்டிய சலானின் விபரங்களுடன் ஆன்-லைனில் விண்ணப்பித்த பின் கிடைக்கும் பிரின்ட் அவுட்டையும் பத்திரப்படுத்தவும். இந்த விண்ணப்பத்தில் பொருத்தமான இடத்தில் உங்கள் பாஸ்போர்ட் அளவு புகைப்படத்தை ஒட்டுவதோடு, இதே புகைப்பட நகல்கள் குறைந்த பட்சம் பத்தாவது இருப்பதனையும் உறுதி செய்யவும். இவை அனைத்தையும் எழுத்துத் தேர்வுக்கு செல்லும் போது தவறாமல் எடுத்துச் செல்ல வேண்டும். எழுத்துத் தேர்வுக்கான அழைப்புக் கடிதங்கள் 24.01.2011க்குள் அனுப்பப்பட்டு விடும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்திலிருந்து விண்ணப்பிப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி :
The Zonal Manager ,
UCO Bank
Chennai Zonal Office
UCO Bank Building,
328, Thambu Chetty Street
Chennai & 600 001.(TAMILNADU)
Tel:044 43405588/43405545
Fax : 044 43405575, 5558

சில முக்கிய தகவல்கள்
விண்ணப்பக் கட்டணம் செலுத்துதல் துவங்கும் நாள் : 09.11.2010
விண்ணப்பக் கட்டணம் செலுத்த இறுதி நாள் : 30.11.2010
ஆன்-லைனில் விண்ணப்பிக்க இறுதி நாள் : 30.11.2010
எழுத்துத் தேர்வு நடைபெறும் நாள் : 30.01.2011
இணையதள முகவரி :
"www.ucobank.com"
முழு விபரங்களுக்கான இணைய தள முகவரி :
"http://recruitment.ucobank.com/recruitment & 28 & oct &10.pdf"
 

Advertisement

 வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X