பொதுத்துறை வங்கிகளில் 85 ஆயிரம் புதிய பணி வாய்ப்புகள்
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

08 நவ
2010
00:00

இன்ஸ்ட்யூட் ஆப் பேங்கிங்
பெர்சானல் செலக்சன் என்ற ஐ.பீ.பி.எஸ்., அமைப்பு 1984 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டு மத்திய நிதி அமைச்சகத்தின் கட்டுப்பாட்டில் இயங்கி வருகிறது. வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களுக்கான ஊழியர்களை நியமிப்பதில் இந்த நிறுவனம் முழுப் பொறுப்புடன் இயங்குகிறது. இந்த அமைப்பின் பணி நியமன முயற்சிகள் அனைத்துமே வெளிப்படையாக இருப்பதோடு கடந்த நிதியாண்டில் மட்டும் 125 மையங்களின் மூலமாக கிட்டத்தட்ட 60 லட்சம் பேருக்கு பணி நியமனத் தேர்வுகளையும் இந்த அமைப்பு நடத்தியது குறிப்பிடத்தக்கது. இந்த அமைப்பின் மூலமாக இந்தியாவிலுள்ள வங்கிகளுக்குப் பணியாளர்களைத் தேர்ந்தெடுக்க வேண்டும் என்று இந்திய வங்கிகளின் சம்மேளனம் (ஐ.பீ.ஏ.,) மத்திய அரசுக்குப் பரிந்துரை செய்துள்ளது.  இந்தியாவில் இயங்கும் பொதுத்துறை வங்கிகளின் எச்.ஆர்., தொடர்புடைய முயற்சிகளில் முழுமையான மாற்றங்களைக் கொண்டு வரவும், மாறி வரும் சமூக, பொருளாதார மற்றும் தொழில் நுட்பத் தேவை களுக்கேற்ப வங்கிகளின் பணியாளர்களை உருவாக்கும் நோக்கத்திலும் மத்திய அரசு இந்த அமைப்பின் கீழ் முன்னாள் பாங்க் ஆப் பரோடா தலைவர் திரு. கண்டேல்வால் தலைமையில் ஒரு கமிட்டியை நிறுவி அதன் பரிந்துரையை வழங்குமாறு பணித்தது. இந்தக் கமிட்டியும் தனது அறிக்கையை நிதித் துறை அமைச்சகம் நடத்திய 'எகனாமிக் எடிட்டர்ஸ் கான்பரன்ஸ்' கூட்டத்தில் வழங்கியது.  இந்தக் கமிட்டியின் அறிவிப்பின்படி இந்தியாவில் இயங்கும் பொதுத் துறை வங்கிகளில் அடுத்த மூன்று ஆண்டுகளுக்குள் புதிதாக 85 ஆயிரம் பணி வாய்ப்புகள் உருவாகும் என்ற தகவல் வெளியாகியுள்ளது. வங்கித் துறையைக் கனவாகக் கொண்ட பல்வேறு இளைஞர்களுக்கு இந்த செய்தி தித்திப்பான தகவலாக உள்ளது. 2010 முதல் 2013க்குள் இந்தியாவில் 34 ஆயிரம் அதிகாரிகள் மற்றும் 51 ஆயிரம் கிளரிகல் பணியாளர்களையும் பொதுத்துறை வங்கிகளில் பணி நியமனம் செய்வதற்கான பரிந்துரைகள் இதன் மூலம் மத்திய நிதி அமைச்சகத்திற்கு வழங்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. இந்த நிலை குறித்து மத்திய அரசும் சாதகமாகப் பரிசீலிக்கும் வாய்ப்புகள் பிரகாசமாக உருவாகியுள்ளது.
 

Advertisement

 



Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X