நெய்வேலி லிக்னைட் கார்ப்பரேஷனில் ஜூனியர் இன்ஜினியர் பணி வாய்ப்பு
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

08 நவ
2010
00:00

நெய்வேலியில் இயங்கி வரும் என்.எல்.சி., என்னும் நெய்வேலி லிக்னைட் கார்ப்பரேஷன் நிறுவனத்தைப் பற்றி அறியாதவர்கள் வெகு சிலரே. நிலக்கரியிலிருந்து அனல் மின்சாரம் தயாரிப்பதில் இந்த நிறுவனம் பிரசித்தி பெற்றது. அரசுத் துறை சார்ந்த இந்த நிறுவனத்தில் இள நிலை பொறியாளர் - கிரேடு 2ஐ நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்தப் பிரிவில் மொத்தம் 55 இடங்கள் நிரப்பப்பட உள்ளது. இந்தப் பதவிக்கு நிபந்தனைகளுக்கு உட்பட்டு எஸ்.சி., எஸ்.டி., ஓ.பி.சி., பிரிவினருக்கு இட ஒதுக்கீடும் உள்ளது.
வயது வரம்பு : நெய்வேலி லிக்னைட் கார்ப்பரேஷனில் ஜூனியர்  இன்ஜினியர் பதவிக்கு விண்ணப்பிக்க 01.10.2010 அன்று 31 வயதுக்கு உட்பட்டவராக இருக்க வேண்டும்.
கல்வித் தகுதி : நெய்வேலி லிக்னைட் கார்ப்பரேஷனில் ஜூனியர் இன்ஜினியர் பதவிக்கு விண்ணப்பிக்க அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தின் மூலமாக மூன்று ஆண்டு காலம் படிக்கக்கூடிய டிப்ளமோ படிப்பை மைனிங் அல்லது மைனிங் அண்டு மைன் சர்வேயிங் பிரிவில் குறைந்த பட்சம் 60 சதவிகித மதிப்பெண்களைப் பெற்றுத் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். எஸ்.சி., எஸ்.டி., பிரிவினர் குறைந்த பட்சம் 50 சதவிகித மதிப்பெண்களைப் பெற்றுத் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இதனுடன் 'டைரக்டர் ஜெனரல் ஆப் மைன்ஸ் சேப்டி (டி.ஜி.எம்.எஸ்., தன்பாத்) வழங்கும் ஓவர்மேன் டிராப்ட் சர்டிபிகேட் ஆப் காம்பீடன்சி தகுதியும் கூடுதலாகத் தேவைப்படும்.
தேர்ச்சி முறை : நெய்வேலி லிக்னைட் கார்ப்பரேஷனில் ஜூனியர் இன்ஜினியர் பதவிக்கு நேர்காணல் முறையில் தேர்ச்சி இருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பக் கட்டணம் : நெய்வேலி லிக்னைட் கார்ப்பரேஷனில் ஜூனியர் இன்ஜினியர் பதவிக்கு விண்ணப்பிக்க ரூ.300/-ஐக் கட்டணமாகச் செலுத்த வேண்டும். இதனை நெய்வேலியில் மாற்றத்தக்க டி.டி.,யாக "Neyveli Lignite Corporation Limited " என்ற  பெயரில் எடுக்க வேண்டும். எஸ்.சி., எஸ்.டி., உடல் ஊனமுற்றோர், முன்னாள் ராணுவத்தினருக்கு கட்டணம் எதுவும் கிடையாது.
விண்ணப்பிக்கும் முறை : நெய்வேலி லிக்னைட் கார்ப்பரேஷனில் ஜூனியர் இன்ஜினியர் பதவிக்கு பரிந்துரைக்கப்பட்ட படிவ மாதிரியில் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். இந்த விண்ணப்பப் படிவத்தில் சமீபத்திய பாஸ்போர்ட் அளவு வண்ணப் புகைப்படத்தை ஒட்டி கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு 10.11.2010க்குள் கிடைக்குமாறு அனுப்பவேண்டும். அனுப்பும் கவரின் மீது தவறாமல் "Application for the Post of ____________ Advt. No :10/2010 "  என்று குறிப்பிட வேண்டும்.
முகவரி
The Chief Manager ( Personnel ),
Recruitment Cell, P & A Department,
Corporate Office, Block & 01,
Neyveli Lignite Corporation Limited,
Neyveli, Tamil Nadu 607801.

Advertisement

 



வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X