இந்திரா காந்தி பல்கலைக் கழகத்தில் பணி வாய்ப்பு
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

08 நவ
2010
00:00

தொலை நிலைக் கல்வியில் நாள் தோறும் சாதனைகள் பல படைத்து வரும் இந்திரா காந்தி திறந்தவெளி பல்கலைக் கழகத்தில் டேட்டா என்ட்ரி ஆப்ரேட்டர் மற்றும் செமி புரொபஷனல் அசிஸ்டன்ட் பணி இடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.
கல்வித் தகுதி
இந்திரா காந்தி பல்கலைக் கழகத்தின் டேட்டா என்ட்ரி ஆபரேட்டர் மற்றும் செமி புரொபஷனல் அசிஸ்டன்ட் பணிகளுக்கு விண்ணப்பிக்க ஏதாவது ஒரு பிரிவில் பட்டப்படிப்பை முடித்திருக்க வேண்டும். டேட்டா என்ட்ரி ஆப்பரேட்டர் பதவிக்கு விண்ணப்பிப்பவர்கள் இத்துடன் கம்ப்யூட்டர் தொடர்புடைய சான்றிதழ் அல்லது டிப்ளமோ படிப்பை முடித்திருப்பதோடு ஒரு மணி நேரத்தில் 8 ஆயிரம் எழுத்துக்களை தட்டச்சு செய்யும் திறமையும் பெற்றிருக்க வேண்டும். செமி புரொபஷனல் அசிஸ்டன்ட் பதவிக்கு விண்ணப்பிப்பவர்கள் லைப்ரேரியன் சயின்ஸ் பிரிவில் சான்றிதழ் படிப்பை முடித்திருக்க வேண்டும்.
தேர்ச்சி முறை
இந்திரா காந்தி பல்கலைக் கழகத்தின் டேட்டா என்ட்ரி ஆப்ரேட்டர் பதவிக்கு எழுத்துத் தேர்வும் திறனறியும் தேர்வும் நடத்தப்படும். செமி புரொபஷனல் அசிஸ்டன்ட் பதவிக்கு எழுத்துத் தேர்வு மற்றும் நேர்காணல் என்ற முறையில் தேர்வு செய்யப்படுவார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பக் கட்டணம்
இந்திரா காந்தி பல்கலைக் கழகத்தின் டேட்டா என்ட்ரி ஆப்பரேட்டர்மற்றும் செமி புரொபஷனல் அசிஸ்டன்ட் பணிகளுக்கு விண்ணப்பிக்க ரூ.100/- கட்டணமாகச் செலுத்த வேண்டும். எஸ்.சி., எஸ்.டி., பிரிவினர் ரூ.50/- மட்டும் செலுத்தினால் போதுமானது. மகளிர் மற்றும் உடல் ஊனமுற்றோருக்கு நிபந்தனைகளுக்குட்பட்டு இந்தக் கட்டணத்திலிருந்து முழு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. முழு விபரங்களறிய இணையதளத்தைப் பார்க்கவும். விண்ணப்பக்கட்டணத்தை "IGNOU, New Delhi" என்ற பெயரில் புது டில்லியில் மாற்றத்தக்க டி.டி.,யாக எடுக்க வேண்டும். டி.டி.,யின் பின்புறம் விண்ணப்பிப்பவரின் பெயர், பிறந்த தேதி, விண்ணப்பிக்கும் பதவியின் பெயர் ஆகியவற்றை ஆங்கிலத்தில் கேபிடல் எழுத்துகளில் குறிப்பிட வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை
இந்திரா காந்தி பல்கலைக் கழகத்தின் டேட்டா என்ட்ரி ஆப்பரேட்டர் மற்றும் செமி புரொபஷனல் அசிஸ்டன்ட் பணிகளுக்கு இணைய தளத்திலிருந்து டவுண்லோட் செய்யப்பட்ட படிவ மாதிரியில் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்.
பூர்த்தி செய்த விண்ணப்பத்துடன் கல்வித் தகுதி மற்றும் இதர சான்றிதழ் நகல்களையும், டி.டி., யையும் இணைத்துப் பின் வரும் முகவரிக்கு சாதாரண தபாலில் அனுப்ப வேண்டும்.
அனுப்பும் கவரின் மீது தவறாமல்"Application for the post of _________________________"என்று குறிப்பிடவும். பூர்த்தி செய்த விண்ணப்பங்களை 30.11.2010க்குள் கிடைக்குமாறு அனுப்ப வேண்டும்.
முகவரி
Assistant Registrar (Rectt.),
Block No.7, Room No.14,
Indira Gandhi National Open University,
Maidan Garhi, New Delhi &110 068.

Advertisement

 



Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X