விண்டோஸ் 7 ஷட் டவுண் ஷார்ட் கட்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
Advertisement
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

08 நவ
2010
00:00

விண்டோஸ்  7 சிஸ்டத்திற்கு மாறியவர்கள், உடனே எதிர்பார்க்கும் ஒரு வசதி, சிஸ்டம் ஷட் டவுண்,  பவர் டவுண் மற்றும் சிஸ்டம் ரீ ஸ்டார்ட் போன்றவற்றிற்கான ஷார்ட் கட்களை அமைப்பதுதான். இதற்கான வழிமுறைகள், விண்டோஸ் எக்ஸ்பி மற்றும் விஸ்டாவிற்கான  வழிமுறைகளைப் போன்றே தான் உள்ளன. ஆனால் விண்டோஸ் 7 சிஸ்டத்தில், இதனை டாஸ்க் பார் அல்லது சிஸ்டம் ட்ரே அல்லது இரண்டிலும் பதித்து வைக்க முடியும் என்பது ஒரு கூடுதல் வசதியாகும்.  இந்த ஷார்ட்கட் வழியை எப்படி அமைக்கலாம் என்று பார்க்கலாம்.
கம்ப்யூட்டர் பயன்படுத்துபவர்கள் எல்லாரும் ஷார்ட்கட் உருவாக்குவதற்கான வழிமுறைகளைத் தெரிந்து வைத்துள்ளனர். இருப்பினும் அவற்றை எளிமையாக இங்கு உறுதிப்படுத்திக் கொள்வோம்.
முதலில், டெஸ்க்டாப்பில் எதுவும் இல்லாத ஓர் இடத்தில், ரைட்கிளிக் செய்திடவும். கிடைக்கும் மெனுவில் New | Shortcut என்பதனைத் தேர்ந்தெடுக்கவும். இதனைக் கிளிக் செய்து தேர்ந்தெடுத்தவுடன், சில தகவல்களை உங்களிடம் கேட்டுப் பெறுகின்ற உள்ளீடு செய்திடும் திரை உங்களுக்குக் கிடைக்கும். இங்கு தான் நீங்கள் உருவாக்க விரும்பும் ஷார்ட்கட் வழிக்கான அமைப்புகளை மேற்கொள்ள வேண்டும்.
எடுத்துக் காட்டாக, விண்டோஸ் பெர்சனல் கம்ப்யூட்டர் ஒன்றினை ஷட் டவுண் செய்திடுவதற்கான ஷார்ட்கட் உருவாக்குவது குறித்து இங்கு காணலாம். எடுத்துக் காட்டாக, இங்கு ஷட் டவுண் செய்திட கீழ்க்காணும் கட்டளை வரியினை, கட்டத்திற்குள் அமைக்கவும்.
Shutdown.exe -s -t 00
இதன் பின் Next என்பதில் கிளிக் செய்திடவும். அடுத்த விண்டோ இந்த ஷார்ட்கட்டிற்கு பெயர் ஒன்றினைத் தருமாறு கேட்கும். எந்த கட்டளைக்கான ஷார்ட்கட் அமைக்கப்படுகிறதோ, அதனை நினைவு படுத்தும் வகையிலான பெயர் ஒன்றை அமைக்கவும். இங்கு, எடுத்துக்காட்டாக Shutdown  என அமைக்கலாம். இதோடு இங்கு நிறுத்திக் கொள்ளலாம். ஆனால் இதற்கென  ஐகான் ஒன்று அமைத்தால் நன்றாக இருக்கும். இங்கும் விண்டோஸ் எக்ஸ்பி மற்றும் விஸ்டாவில் ஐகான்களை மாற்றுவது போல மாற்றலாம்.  இங்கு சம்பந்தப்பட்ட ஐகான் மீது ரைட் கிளிக் செய்து, காண்டெக்ஸ்ட் மெனு பெறவும். பின்னர் அதில் ப்ராப்பர்ட்டீஸ் மெனு செல்லவும். ப்ராப்பர்ட்டீஸ் கண்ட்ரோல் பேனலில், Change Icon பட்டனைத் தேர்ந்தெடுக்கவும். அடுத்து வரும் திரையில், ஐகான்கள் நிறைய காட்டப்படும். இதில் எதனை நீங்கள் பயன்படுத்த விரும்புகிறீர்களோ, அதனைத் தேர்ந்தெடுத்து, இரண்டு முறை ஓகே பட்டனை இருமுறை கிளிக் செய்து முடிக்கவும்.  இப்போது உங்கள் டெஸ்க் டாப்பில் கம்ப்யூட்டரை ஷட் டவுண் செய்வதற்கான  ஐகானைக் காணலாம். இதில் கிளிக் செய்தால், சிஸ்டம் ஷட் டவுண் ஆகும்.
இனி இதனை எப்படி ஸ்டார்ட் மெனு அல்லது சிஸ்டம் ட்ரே அல்லது இரண்டிலும் பின் செய்து வைப்பது என்று பார்க்கலாம். ஷார்ட்கட் மீது ரைட் கிளிக் செய்திடவும். காண்டெக்ஸ்ட் மெனு கிடைக்கும். பின்னர் டாஸ்க்பாரில் அமைக்க வேண்டும் எனில்  Pin to Taskbar  என்று இருப்பதில் கிளிக் செய்திடவும்.  இதில் பின் செய்தவுடன், சிஸ்டம் ஷட் டவுண் செய்வதற்கான அவசர திறவுகோலான ஷார்ட்கட் கைகள் அருகில் கிடைக்கும்.
இதே முறையில் இன்னும் சில ஷார்ட்கட் கீகளுக்கான கட்டளையைப் பார்ப்போமா!
கம்ப்யூட்டரை ரீஸ்டார்ட் செய்திட
Shutdown.exe -r -t 00
கம்ப்யூட்டரை ஹைபர்னேட் என்னும் நிலையில் வைத்திட
rundll32.exe PowrProf.dll,SetSuspendState
கம்ப்யூட்டரை ஸ்லீப் மோடில் வைத்திட
rundll32.exePowrProf.dll,SetSuspendState 0,1,0

Advertisement

 வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (3)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
மதி - dubai,இந்தியா
11-நவ-201020:22:17 IST Report Abuse
மதி எனக்கு தேவை இல்லாத ப்ரோக்ராம் ஒன்றை அனின்ஸ்டால் செய்யும் போது error வருகிறது. நான் என்ன செய்ய வேண்டும் அந்த program ஐ uninstall செய்ய.
Rate this:
Cancel
மதி - Dubai,இந்தியா
11-நவ-201020:18:29 IST Report Abuse
மதி எனது கம்ப்யூட்டர் அட்மின் பாஸ்வோர்ட் மறந்து விட்டது. அதை நான் எப்படி அழிப்பது வழி உள்ளதா.இல்லை போர்மட் செய்ய வேண்டுமா?
Rate this:
Cancel
sivakumar - Dindigul,இந்தியா
11-நவ-201005:46:31 IST Report Abuse
sivakumar மிக்க நன்றி . நான் எதிர் பார்த்த ஒன்றை தாங்கள் அருமையாக கூறியுள்ளிர்கள் .
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X