கம்ப்யூட்டருக்கும் புதியவரா ? - Save மற்றும் Save as என்ன வேறுபாடு ?
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
Advertisement
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

08 நவ
2010
00:00

 எம்.எஸ். ஆபீஸ் தொகுப்பில் உள்ள பல்வேறு பயன்பாட்டு சாப்ட்வேர் தொகுப் புகளில் பைல் மெனுவில் நாம் காணும் இரு வேறு பயன்பாடுகள்  Save    மற்றும்   Save ஆகும். இரண்டுமே ஒரு பைலை கம்ப்யூட்டரின் ஹார்ட் டிஸ்க் அல்லது பிளாப்பி டிஸ்க்கில் நாம் தயாரித்துக் கொண் டிருக்கும் பைலை பதிவு செய்கின்றன? அப்படியானால் இரண்டு பயன்பாட்டிற்கும் வேறுபாடு இல்லையா? ஒரே பயன்பாட் டிற்கு ஏன் இரண்டு வெவ்வேறு கட்டளை கள் என நீங்கள் எண்ணலாம்? இரண்டு கட்டளைகளும் பைலைப் பதிந்தாலும் இரண்டின் செயல் பாட்டில் சற்று வேறுபாடு இருக்கத்தான் செய்கிறது. நீங்கள்  Save   கட்டளை பயன் படுத்தும்போது அப்போது பயன் பாட்டில் உருவாக்கப்படும் பைல் அதே பெயரில் சேமிக்கப்படுகிறது. அந்த பைலுக்கு அதற்கு முன் பெயர் கொடுக்க வில்லை என்றால் பெயர் கொடுக்குமாறு கம்ப்யூட்டர் கேட்கும். பெயர் கொடுத்தவுடன் அது பதிவு செய்யப்படும். மீண்டும் அதே பைலில் பணியாற்றுகையில்  Save  கட்டளை கொடுத்தால் அதே பெயரில் சேவ் ஆகும். புதிய பெயர் கொடு என்றெல்லாம் கம்ப்யூட்டர் உங்களைக் கேட்காது.  ஆனால் Save As  கட்டளை கொடுக்கையில் அந்த பைலை ஒரு புதிய பைல் போன்று மற்றொரு பெயர் கொடுத்து சேவ் செய்திடலாம். அதாவது ஒரு டாகுமெண்ட்டில் எடிட் செய்து கொண்டிருக்கிறீர்கள். அப்போது ஒரு மாற்றத்தை ஏற்படுத்துகிறீர்கள். ஆனால் அந்த மாற்றத்துடன் உள்ள ஆவணத்தை வேறு ஒரு பெயரில் வைத்துக் கொள்ள விரும்புகிறீர்கள் என்றால் அப்போது Save As   என்ற கட்டளை கொடுத்து சேமிக்கலாம். இவ்வாறு சேமித்த பின் விண்டோஸ் எக்ஸ்ப்ளோரர் சென்று பைல் டைரக்டரியைப் பார்த்தால் உங்கள் பைல் முந்தைய பெயரிலும் புதிய பெயரிலுமாக இரண்டு இருக்கும்.

Advertisement

 



வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X