கேள்வி - பதில்
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

06 ஜூலை
2015
00:00

கேள்வி: என்னிடம் மூன்று மின் அஞ்சல் முகவரிகள் உள்ளன. அனைத்தையும் வெவ்வேறு வகை செயல்பாடுகளுக்கெனப் பயன்படுத்தி வருகிறேன். இவை அனைத்தையும் என் பிரவுசரில் கொண்டு வர முடியுமா? அதற்கான வழிகள் என்ன?
என். ராஜலட்சுமி, தேவாரம்.
பதில்
: உங்களுடைய கேள்வி தெளிவாக இல்லை. நீண்ட கடிதத்தில் இருந்து, நீங்கள், உங்கள் அனைத்து மெயில்களையும் Windows Live Mail புரோகிராமில் கொண்டு வர விரும்புகிறீர்கள் என்று தெரிகிறது. பிரவுசர் என்பது, இணையத்தை அணுகப் பயன்படுத்தப்படும் ஒரு புரோகிராம். இமெயில் கிளையண்ட் புரோகிராம் என்பது, இணையத்தை அணுகி, இமெயில் சர்வர்களிடமிருந்து உங்களுக்கான அஞ்சல்களைப் பெற உதவிடும் புரோகிராம் ஆகும்.
நீங்கள் மூன்று வெவ்வேறு மின் அஞ்சல் நிறுவன சேவையினைப் பயன்படுத்துவதாக இருந்தால், ஒவ்வொன்றுக்கும், உங்கள் பிரவுசரில், ஒரு டேப்பினைத் திறந்து, அஞ்சல் முகவரிக்கான அஞ்சல்களைத் தரவிறக்கம் செய்திட வேண்டும். ஒரே சேவை நிறுவனத்திடம் இருந்து, மூன்று முகவரிகளைக் கொண்டிருந்தால், ஒவ்வொன்றுக்கும் வேறு வேறான பிரவுசரைப் பயன்படுத்தலாம். இன்டர்நெட் எக்ஸ்புளோரர், குரோம், பயர்பாக்ஸ் எனப் பயன்படுத்தலாம். இந்த வகையில் ஒரே நேரத்தில், அனைத்து முகவரிகளுக்கும் வந்திருக்கும் அஞ்சல்களைப் பெறலாம்.
உங்கள் அஞ்சல்கள் அனைத்தையும் Windows Live Mailக்கு தரவிறக்கம் செய்திட நீங்கள் விரும்புவதாகவும் தெரிகிறது. இதுவும் மிக எளிதான ஒன்றுதான். உங்கள் விண்டோஸ் லைவ் மெயில் இன்பாக்ஸினைத் திறக்கவும். இதன் இன்பாக்ஸில், மேலாக இடது புறம் உள்ள சிறிய அம்புக்குரியில் கிளிக் செய்து அதனைத் திறக்கவும். பின்னர், இதில் காட்டியுள்ள ஆப்ஷன்களில், தேவையானவற்றைக் கிளிக் செய்திடவும். தொடர்ந்து E-mail accounts என்பதனைத் தேர்ந்தெடுக்கவும். இதனை அடுத்து Add Accounts என்பதனைத் தேர்ந்தெடுக்கவும். இப்போது லைவ் மெயில் புரோகிராம், அக்கவுண்ட்களை அமைக்கும் வழிகள் மூலமாக உங்கள் எளிதில் வழி நடத்திச் செல்லும்.

கேள்வி: நான் என் கம்ப்யூட்டரில் ஹார்ட் ட்ரைவை மாற்ற இருக்கிறேன். தற்போது விண்டோஸ் 7 பயன்படுத்தி வருகிறேன். ஆனால், உடனடியாக ஹார்ட் ட்ரைவ் மாற்ற வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறேன். விண்டோஸ் 10 ஆப்பரேட்டிங் சிஸ்டத்தினை எப்படி பெறுவது? தற்போது ஏற்கனவே பெற்ற உரிமம் பெற்ற விண்டோஸ் 7 உள்ளது. புதிய ஹார்ட் ட்ரைவில் அதனைப் பதிந்து கொள்ளலாம். இதற்கே விண் 10 கிடைக்குமா? அல்லது, பின் நாளில், புதியதாக கட்டணம் செலுத்தி வாங்கிப் பதிய வேண்டுமா?
ஆர். தனுஷ்கோடி, திருப்பூர்.
பதில்
: ஹார்ட் ட்ரைவ் மாற்ற வேண்டிய தருணம் வந்தால் உடனே மாற்றிவிடுங்கள். விண்டோஸ் 7 உரிமம் கொண்ட ஆப்பரேட்டிங் சிஸ்டத்தை இன்ஸ்டால் செய்து, அனைத்து அப்டேட்களையும் மேற்கொள்ளுங்கள். உங்கள் ஹார்ட் ட்ரைவ், விண்டோஸ் 10 பெறத் தகுதியுடையதாகிவிடும். இணையத்தில், மைக்ரோசாப்ட் அப்டேட் செய்தால், தானாகவே, விண் 10 ரிசர்வ் செய்து பெற்றுக் கொள்ளத் தேவையான ஐகான், உங்கள் கம்ப்யூட்டரின் சிஸ்டம் ட்ரேயில் வலது மூலையில் காட்டப்படும். அதில் கிளிக் செய்து விண் 10 ஐ, ரிசர்வ் செய்து வைக்கவும். பின் நாளில், அதாவது ஜூலை 29 அன்று, உங்கள் கம்ப்யூட்டரில் தானாகவே, விண் 10க்கான பைல்கள் தரவிறக்கம் செய்யப்படும். உங்கள் விருப்பம் போல அதனை இன்ஸ்டால் செய்து கொள்ளலாம். கவலை வேண்டாம்.

கேள்வி: மைக்ரோசாப்ட் போன்ற சாப்ட்வேர் நிறுவனங்கள், கல்வி நிறுவனங்களில், மாணவர்களுக்கு உதவிடும் வகையில் நிதி உதவி, அடிப்படைக் கட்டமைப்பு அமைக்க நிதி அளிக்கின்றனவா? இருந்தால், அதே போல, இங்கும் நிறுவனங்கள் உதவலாமே?
ஆர். ஸ்ரீதரன், கோவை.
பதில்:
அமெரிக்காவில், அனைத்து பெரிய நிறுவனங்களும் கல்வி நிறுவனங்களில் நிதி உதவி அளிக்கும் திட்டங்களை அமைத்து உதவி செய்து வருகின்றன. இதன் மூலம், மாணவர்கள் சிறந்த முறையில் உருவாகி, பின் நாளில் இந்நிறுவனங்களில் பணியாற்றலாம். எடுத்துக் காட்டாக, யுனிவர்சிட்டி ஆப் வாஷிங்டன் (University of Washington) பல்கலைக் கழகத்தில், அண்மையில் மைக்ரோசாப்ட் நிறுவனம் அங்கு இயங்கும் கம்ப்யூட்டர் அறிவியல் துறைக்கு ஒரு கோடி டாலர் நிதி உதவி அளித்துள்ளது. இது இன்னொரு வளாகத்தினைக் கட்டி, அதில் புதிய வகுப்புகளைத் தொடங்கப் பயன்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம், எதிர்காலத்தில், தங்கள் நிறுவனத்தில் பணியாற்ற திறமைசாலிகள் உருவாகும் வாய்ப்புகள் ஏற்படுகிறது. மற்றும் எதிர்காலத்தை உருவாக்கும் திறமை கொண்ட இளைஞர்கள் உருவாவார்கள் என மைக்ரோசாப்ட் அறிவித்துள்ளது. இந்தியாவிலும், ஆங்காங்கே பல்கலைக் கழகங்களுக்குப் பல நிறுவனங்கள் உதவி வருகின்றன.

கேள்வி: ஆண்ட்ராய்ட் போன்களிலும், சாதாரண வசதிகள் கொண்ட போன்களிலும், பல அப்ளிகேஷன்கள் இயங்குகின்றன. மக்கள் இவற்றைப் பயன்படுத்துவது, போன்களின் பயன்பாட்டினையே மாற்றி வருகிறது. பேசுவதற்கு அதிகம் இந்த போன்கள் பயன்படுத்தப்படுகின்றனவா? அல்லது அப்ளிகேஷன்களை இயக்கி வசதிகளைப் பெற இவை பயன்படுத்தப்படுகின்றனவா?
ஆ. மகிழ்நிலா, சென்னை.
பதில்
: நல்ல கேள்வி. ஸ்மார்ட் போன்களில் தான் அதிகம் அப்ளிகேஷன்கள் இயங்கி வருகின்றன. எனவே, மக்கள் போன்களை இயக்காமல் வைப்பதில்லை. தொடர்ந்து பேசுவதற்கும், இந்த அப்ளிகேஷன்களை இயக்கி வசதிகளை அனுபவிக்கவும் பயன்படுத்தி வருகின்றனர். உங்கள் கேள்விக்கான பதிலைத் தேடுகையில், நீல்சன் என்னும் அமைப்பு மேற்கொண்ட ஆய்வு முடிவுகள் கிடைத்தன. சராசரியாக, ஒவ்வொரு மாதமும், ஒருவர் 37.5 மணி நேரம் அப்ளிகேஷன்கலை இயக்குகின்றனர். அதாவது, ஒரு மாதத்தில் இரு முழு இயங்கும் நாட்கள் இவர்கள் அப்ளிகேஷன்களை இயக்க பயன்படுத்துகின்றனர்.
சென்ற இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர், இது 23 மணி நேரமாக இருந்தது. அப்ளிகேஷன்கள் பல வகையாகவும், பல வசதிகளைத் தருவதாயும் அமைந்து கிடைப்பதே இதற்குக் காரணம் ஆகும். சராசரியாக, ஒரு பயனாளர், 28 வேறுபட்ட அப்ளிகேஷன்களை இயக்குகிறார். அதிகமாக, 70% பேர், முதல் நிலையில் உள்ள 200 அப்ளிகேஷன்களை இயக்குகின்றனர்.
பெண்களைக் காட்டிலும் ஆண்களே அதிக அப்ளிகேஷன்களைப் பயன்படுத்துகின்றனர். அப்ளிகேஷன்களைப் பொறுத்தவரை, பொழுது போக்கிற்கெனப் பயன்படுத்தும் அப்ளிகேஷன்களே அதிகம். இவற்றில், கேம்ஸ், ஆடியோ, விடியோ, ஸ்போர்ட்ஸ் மற்றும் இ ரீடர் அப்ளிகேஷன்கள் அதிகம்.

கேள்வி: வரும் விண்டோஸ் 10 ஆப்பரேட்டிங் சிஸ்டத்தின் லோகோ எவ்வாறு இருக்கும்? எக்ஸ்பி, விஸ்டா, விண் 7 ஆகியவற்றில், ஒவ்வொன்றுக்கும் தனித்தனி லோகோ அடையாளம் காட்டும் வகையில் தரப்பட்டது. விண் 10 என்ன வகை கொண்டிருக்கும் என ஏதேனும் தகவல் உண்டா?
எம்.எஸ். ஆர்யராஜன், கோவை.
பதில்
: நல்ல கேள்வி. விண்டோஸ் 8க்கு டெய்சி மலர்கள், விஸ்டாவிற்கு அரோரா என இருந்ததைப் போல, விண் 10க்கும் தனிப்பட்ட முறையில் வடிவமைக்கப்பட்ட லோகோ நிச்சயம் இருக்கும். அந்த வகையில், இதுவரை கிடைத்த தகவலின் படி, விண்டோஸ் லோகோவிலிருந்து ஒளிக்கற்றைகள் வெளியாகும் படம் ஒன்று இதன் லோகோவாக இருக்கும் என்று தெரிய வந்துள்ளது. இதனை அமைப்பதில், மைக்ரோசாப்ட் கேமரா மேப்பிங், லேசர் மற்றும் ப்ரொஜக்டர் தொழில் நுட்பத்தினைப் பயன்படுத்தியதாகவும் அறியப்பட்டுள்ளது. இந்த லோகோ வர இருக்கும் பல லட்சக்கணக்கான விண்டோஸ் 10 கம்ப்யூட்டர்களில் தரப்பட உள்ளது.
இந்த லோகோ, இருட்டு மற்றும் இளம்பனி உள்ளதாக இருக்கும். ஒளிக்கற்றைகள், வழக்கமான விண்டோஸ் சதுரங்களில் வழியாக வெளிவரும் காட்சி அமைக்கப்பட்டுள்ளது.

கேள்வி: கம்ப்யூட்டரில் ஒவ்வொரு வகை பைலையும், குறிப்பிட்ட செயலியின் மூலம் திறக்கிறோம். அதுவே மாறா செயலியாக, அந்த வகை பைலுக்கு அமைந்துவிடுகிறது. இதனை மாற்ற வேண்டுமாயின் என்ன செய்ய வேண்டும்? எங்கு சென்று செட்டிங்ஸ் மாற்றி அமைக்க வேண்டும்?
பொ.சிவசுப்ரமணியன், ஹோசூர்.
பதில்:
பைல் வகை ஒன்றினைப் புதிய செயலி ஒன்றின் வழியாகத் திறந்து பயன்படுத்த விரும்புகிறீர்கள். அதனையே மாறா நிலை புரோகிராம் ஆகவும் அமைக்க விரும்புகிறீர்கள். இதற்கு இரண்டு வழிகள் உள்ளன. பைல் பெயர் மீது ரைட் கிளிக் செய்து, கிடைக்கும் மெனுவில் Open With என்பதனைத் தேர்ந்தெடுக்கவும். அந்த பைலைத் திறந்து இயக்கக் கூடிய புரோகிராம்களின் பட்டியல் காட்டப்ப்படும். அதிலிருந்து நீங்கள் பயன்படுத்த விரும்பும் புரோகிராமினைத் தேர்ந்தெடுக்கலாம். அந்த வகை பைலை, எப்போதும் ஒரு குறிப்பிட்ட புரோகிராம் தான் திறக்க வேண்டும் என விரும்பினால், அதே Open With மெனுவில், Choose default programs என்பதில், நீங்கள் விரும்பும் புரோகிராமினைத் தேர்ந்தெடுத்து அமைத்துவிட்டால், அடுத்து மாற்றப்படும் வரையில், அதே புரோகிராம் தான், அந்த வகை பைலைத் திறக்கும்.

கேள்வி: பைல்களின் பட்டியலைப் பார்க்க, விண்டோஸ் எக்ஸ்புளோரரைப் பயன்படுத்தும்போது, ஒவ்வொரு ட்ரைவிலும் ஒரு மாதிரியாக, பைல் குறித்த தகவல்கள் காட்டப்படுகின்றன. அனைத்து ட்ரைவ்களிலும், இவை ஒரே மாதிரியாகக் காட்டப்பட வேண்டும் என விரும்புகிறேன். இதற்கான வழிகள் என்ன?
டி. முகமது கனி, இராமேஸ்வரம்.
பதில்
: இது வழக்கமான ஒரு செயல்பாடு தான். எக்ஸ்புளோரர் செட்டிங்ஸ் அமைக்கையில், ஒவ்வொரு போல்டரும் ஒருவிதமாகக் காட்டப்படும். வியூ மெனுவில் பல ஆப்ஷன்கள் உள்ளன. ஆனால் உங்களைப் போல பலரும், ஒரு குறிப்பிட்ட வியூவினையே விரும்புவார்கள். இதனையே அனைத்து போல்டர்களும் காட்ட வேண்டும் எனவும் விருப்பப்படுவார்கள். இதில் தவறேதும் இல்லை. அப்போதுதான் ஒரே மாதிரியான பணி நிலை கிடைக்கும். இதற்கு போல்டர் ஒன்றைத் திறந்து Organize என்னும் டேப்பில் கிளிக் செய்திடவும். இதன் பின் Folder and search options என்பதனைத் தேர்ந்தெடுக்கவும். இங்கு வியூ டேப்பிற்குச் சென்று மேலாக உள்ள Apply to folders என்ற பட்டனில் கிளிக் செய்திடவும். இனி இதுதான் உங்களின் மாறா நிலையில் உள்ள (Default) போல்டராக அமைந்துவிடும்.

கேள்வி: எங்கள் வீட்டில் மூன்று புதிய ஆண்ட்ராய்ட் ஸ்மார்ட் போன் வாங்கிப் பயன்படுத்தி வருகிறோம். இவற்றில் புளுடூத், வை பி மற்றும் லொகேஷன் ஆகிய செயல்பாடுகளை இயக்கியே வைத்திருக்கிறோம். பலர், இதனால், பேட்டரி சக்தி வீணாகும். அடிக்கடி சார்ஜ் செய்திட வேண்டியதிருக்கும். எனவே, இவற்றை நிறுத்தி வைக்கலாம் என்று டிப்ஸ் தருகின்றனர். பயன்படுத்தாத போதும், இயக்கி வைப்பதாலேயே பேட்டரி சக்தி வீணாகுமா? தங்களுடைய அறிவுரை என்ன?
என். ஜெகதீசன், திருச்சி.
பதில்
: ஆண்ட்ராய்ட் போன்களில், செயல்படாமல் ஒரு செயலியை இயக்க நிலையில் வைத்திருக்க முடியாது. புளுடூத் நீங்கள் பயன்படுத்தினாலும், பயன்படுத்தாவிட்டாலும், இயக்கிவிட்டால், அது பேட்டரியின் சக்தியைப் பயன்படுத்திக் கொண்டுதான் இருக்கும். மேலும், வை-பி, புளுடூத் மற்றும் ஜி.பி.எஸ். போன்ற ரேடியோ அலைப் பயன்பாட்டு வசதிகள் அனைத்தும், பேட்டரியின் சக்தியை அதிகம் எடுத்துக் கொள்ளும். எனவே, புளுடூத் ஹெட்செட் பயன்படுத்தவில்லை எனில், புளுடூத் வசதியை எப்போதும் அணைத்தே வைக்கலாம். ஜி.பி.எஸ். வசதியை ஒரு சிலரே பயன்படுத்துகின்றனர். இதனையும் அணைத்தே வைக்கலாம். அதே போல வை பி இணைப்பும். பயன்படுத்தாத நேரத்தில், இவற்றை அணைத்து வைப்பதே நல்லது. இதனால், பேட்டரியின் மின் சக்தி பயன்பாடு குறையும். மின்சக்தி வெகு நேரம் இருக்கும். பேட்டரி பயனின்றிப் போவது தள்ளிப்போடப்படும்.

Advertisement

 Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X