பயர்வால் என்பதில் இவ்வளவு பாதுகாப்பு சமாச்சாரங்கள் உள்ளன என்று காட்டியதற்கு நன்றி. படித்தவுடனேயே, என் கம்ப்யூட்டருக்கு இந்த கவசத்தினை மாட்டிவிட்டேன்.
–தி. கரு.பழனியப்பன், காரைக்குடி
ஸோன் அலார்ம் பயர்வால் குறித்த தகவல்கள் மிகத் தெளிவாகவும், விவரமாகவும் உள்ளன. அப்படியே கடைப்பிடித்து இயக்க எளிதாக உள்ளது.
–சி. ராணி எஸ்தர், கோவை
மைக்ரோசாப்டின் வைரஸ் பாதித்த கம்ப்யூட்டரை ஒதுக்கிவைக்கும் திட்டம் பல கம்ப்யூட்டர்களைப் பாதுகாக்கும். ஆனால் நம் கம்ப்யூட்டரில் வைரஸ் தாக்கியவுடன் நமக்குத் தெரிந்தால் தானே நாமும் எச்சரிக்கையுடன் இருக்கலாம்? அதற்கான வழியை மைக்ரோசாப்ட் அல்லது மெக் அபி போன்றவை தந்தால் நல்லது.
–எஸ். சுப்பிரமணியன், ஓய்வு பெற்ற அரசு அலுவலர், சென்னை
இந்தியாவில் கிடைக்கும் முன்பே, நீங்கள் இரு வாரங்களுக்குள் தந்த தகவல்களைக் கொண்டு இன்ஸ்டண்ட் சர்ச் பயன்படுத்தி வருகிறேன். மிகவும் அற்புதமான ஒரு வசதி.
–க.அருள்தாஸ் ஆண்டனி, மதுரை
வாரம் ஒருமுறை ஏதேனும் புதிய செய்திகளைத் தரும் கூகுள், பொருளடக்கம் போல அனைத்தையும் ஒரு தளத்தில் தருவதும் ஒரு புதுமையே. இணையம் பயன்படுத்தும் அனைவருமே, கூகுள் நிறுவனத்திற்குக் கடன் பட்டுள்ளோம்.
–ஆர். வெங்கடேஷ், இராஜபாளையம்
இணையத்தில் இலவச நூல்கள் தரும் தளம் சென்று பார்த்தோம். சில நூல்களைப் பார்க்கத்தான் முடிகிறது. காப்பி செய்திட முடியவில்லை. அனைத்தையும் காப்பி செய்திட வழிகளைக் கூறவும்.
–டி. சிவராஜ் மற்றும் நண்பர்கள், மேலூர்
மீண்டும் உங்களுக்குத் தெரியுமா தொடர் மூலம் சுவராஸ்யமான தகவல்களைத் தொகுத்துத் தந்ததற்கு நன்றி.
–என். யுவராஜ், தேனி
ஒரு பைலைக் காப்பியாகவும் திறக்கலாம் என்ற தகவல் எப்படி இது நாள் வரை பயன்படுத்தாமல் இருந்தோம் என எண்ண வைக்கிறது உங்கள் டிப்ஸ். அருமையான குறிப்புகள்.
–அ.மங்கள ராணி, திண்டுக்கல்
கண்கள் கவனம் என்ற உடல்நலம் குறித்த கட்டுரையில், 20:20:20 விதி அனைவரும் பின்பற்ற வேண்டிய குறிப்பு. இன்றைய இளைஞர்கள் இந்த கட்டுரையில் உள்ள அனைத்து குறிப்புகளையும் தவறாமல் பின்பற்றினால், கண்கள் பார்வைக் குறைவு, கருவளையம் போன்றவற்றைத் தவிர்க்கலாம்.
–டாக்டர் பிரசன்னகுமார், மதுரை
கர்சர் பிளிங்க் ரேட் குறித்து கேள்வி பதில் பகுதியில் சொல்லியிருப்பதை இன்னும் சற்று விரிவாகத் தரவும்.
–ஆ. மலர்விழி, புதுச்சேரி
வேகமாக இயங்க விரும்பும் இந்தக் காலத்தில் யு.இ.எப்.ஐ. தொழில் நுட்பத்தினை அனைவரும் வரவேற்பார் கள். இது அனைத்து டிஜிட்டல் சாதனங்களிலும் பயன்பட்டால், பல காரியங்களை விரைவாக முடிக்கலாம்.
–ச. பாரதி மன்னன், திருப்பூர்