கேள்வி - பதில்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
Advertisement
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

08 நவ
2010
00:00

கேள்வி: கேப்ஸ் லாக் போன்ற பட்டன்கள் இயக்கப் படுகையில், பீப் ஒலி எழுப்பும் வசதியினை எப்படி அமைப்பது? அத்துடன் அப்போது பிளாஷ் போன்று திரையில் ஏற்பட வேண்டும் எனில் என்ன செய்திட வேண்டும்?  –டி. நிரஞ்சன்  விநாயகம், சென்னை
பதில்: இந்த வசதியினை அமைப்பது குறித்து அடிக்கடி நினைவு படுத்த வேண்டியுள்ளது. இருப்பினும் இந்த முறை பிளாஷ் அமைப்பது குறித்தும் பார்க்கலாம்.
1. Start  பட்டனில் கிளிக் செய்திடவும். பின்னர் Settings, Control Panel  எனச் செல்லவும். (எக்ஸ்பி பயன்படுத்துபவர்கள் ஸ்டார்ட் மற்றும் கண்ட்ரோல் பேனல் எனச் செல்லவும்) அதன் பின்னர்  Accessibility Options ஐகான் மீது கிளிக் செய்து திறக்கவும்.
2.  Keyboard tab   டேப் தேர்ந்தெடுத்து, அதன் பின் “Use Toggle Keys”  என்பதில் டிக் அடையாளம் ஏற்படுத்தவும்.   அவ்வளவு தான்! இனி இந்த டாகிள் கீக்களை அழுத்தினால் பீப் ஒலி கிடைக்கும்.
இனி, திரை அதிர்வது குறித்து.
1.  Accessibility Options   திரையில் Sound tab  என்பதில் கிளிக் செய்திடவும். பின்னர் “Use SoundSentry”  என்ற செக் பாக்ஸில் டிக் அடையாளம் ஏற்படுத்தவும்.
2. அடுத்து செட்டிங்ஸ் என்ற பட்டனில் கிளிக் செய்திடவும். இனி “Warning for windowed programs”  என்ற கீழ்விரி மெனுவில்  “Flash active window” என்பதனைத் தேர்ந்தெடுக்கவும். அடுத்து ப்ராப்பர்ட்டி அண்ட் செட்டிங்ஸ் திரை விலகும் வரை ஓகே கிளிக் செய்து வெளியேறவும். அடுத்து உங்களுக்குப் பிரியமான வேர்ட் ப்ராசசரைத் திறந்து கேப்ஸ் லாக் கீயை அழுத்திப் பார்த்து நீங்கள் விரும்பியது கிடைத்துவிட்டதா எனப் பார்க்கவும்.

கேள்வி: நான் அனுப்பிய மின்னஞ்சல் கடிதம் ஒன்றை, பெறுபவர் அதனைப் படித்து விட்டார் என்று அறிய என்னவகையான செட்டிங்ஸ் மேற்கொள்ள வேண்டும்? –கா. சூரியப் பிரகாஷ், கோவை
பதில்: நீங்கள் கேட்பது, மின்னஞ்சல் தொகுப்புகளில் உள்ள  “read receipt”  என்னும் வசதி பற்றி. இது நமக்கு நம் அஞ்சல் அலுவலகங்கள் தரும்  பதிவுத்தபாலுக்கான அக்னாலட்ஜ்மெண்ட் கார்ட் போல. இதன் மூலம் நீங்கள் அனுப்பிய மெயில், யாருக்கு அனுப்பப்பட்டதோ, அவரால் திறந்து படிக்கப்பட்டது என அறிந்து கொள்ளலாம். ஆனால் இந்த வசதியினை அனைத்து இமெயில் சேவை தரும் நிறுவனங்களும் தருவதில்லை. இதனால் தனிநபர் உரிமை பாதிக்கப் படுவதாக  அந்நிறுவனங்கள் தெரிவிக்கின்றன.  எடுத்துக்காட்டாக, யாஹூ, ஜிமெயில் மற்றும் ஹாட்மெயில் ஆகிய பிரபல இமெயில் நிறுவனங்கள் இந்த வசதியைத் தருவதில்லை. இன்கிரெடிமெயில் இந்த வசதியைத் தருகிறது. விண்டோஸ் மெயில் சர்வர் (முன்னால் அவுட்லுக்) இதனைத் தங்கள் மெயில் விண்டோவில், டூல்ஸ் மெனுவில் தருகிறது.
இதனைக் காட்டிலும் ஒரு நல்ல வழியைச் சொல்லட்டுமா! உங்கள் கடிதத்திலேயே, கடிதம் பெறுபவருக்கு, இதனைப் பெற்று படித்ததற்கான பதில் அஞ்சலை அனுப்பினால் மகிழ்ச்சி அடைவேன் என்ற குறிப்பினை அனுப்பவும். உங்கள் அன்பான குறிப்பை உணர்ந்து, அஞ்சலைப் பெறுபவர் நிச்சயம் பதிலளிப்பார்.

கேள்வி: டேட்டா பைல்களை ஸ்டோர் செய்திட, அதிக லேயர்கள் கொண்ட டிவிடி இருப்பதாகக் கேள்விப் பட்டேன். அதனைப் பற்றிய தகவல்களையும், பைல்களைக் காத்திட இந்த டிவிடிக்கள் பயனளிக்குமா என்றும் விளக்கவும்.  –எஸ். ÷ஷாபா தேவி, மதுரை
பதில்: டேட்டா பைல்களைப் பாதுகாப்பாக வைத்திட, டிவிடி எனப் பார்க்கையில் கோல்டு டிவிடியை (இது தங்கம் அல்ல, ஒரு வகையான டிவிடி) அனைவரும் பரிந்துரைக்கின்றனர். சோதனை செய்து பார்த்ததில் இது 15 ஆண்டுகளுக்கு தகவல்களைப் பாதுகாப்பாக வைத்திருக்கும் என அறியப்பட்டுள்ளது.
ஆனால், எந்த வகை டிவிடி என்றாலும் அதில் ஏறத்தாழ 4.7 கிகா பைட் அளவிலான தகவல்களையே பதிய முடியும். மேலும் மேலும் அழித்து எழுதுவது முடியாது. இதனால், இறுதியாக பேக் அப் செய்தது தேவையில்லை என்றால், உடனே நம் பைல்கள் அடுத்தவர் பார்வைக்குச் செல்லாமல் இருக்க, அவற்றை சுக்கு நூறாக உடைப்பதுதான் ஒரே வழி.
டேட்டா ஸ்டோரேஜ் என்று வருகையில், எந்த வகை டிவிடி என்பது முக்கியமல்ல. எழுதிய பின் அவற்றை எப்படி பாதுகாப்பாக வைக்கிறோம் என்பதுதான் மிக முக்கியம். உலர்ந்த சீதோஷ்ண நிலையில் தான் அவற்றை வைத்திருக்க வேண்டும். அவ்வாறு வைத்திருக்கும் வரை பிரச்னை எதுவுமில்லை.  உங்கள் பைல்களைப் பாதுகாப்பாக வைத்திருக்க மற்ற சில வழிகளும் உள்ளன. மெமரி கார்ட் இதில் ஒரு வகை. இவை டிவிடிக்களைக் காட்டிலும் அதிக அளவில் டேட்டா கொள்ளக் கூடியவை. இவற்றையும் முன்பு கூறிய படி உலர் சீதோஷ்ணத்தில் வைத்திட வேண்டும்.  இன்னொரு வழி, கம்ப்யூட்டருக்குள் வைத்திடாமல் தனியே வைத்து இயக்கும் ஹார்ட் டிஸ்க்குகளாகும். இப்போது இவை டெரா பைட் அளவுகளில் கிடைப்பதில், மிகப் பெரிய அளவில் பைல்களைப் பதிந்து வைக்கலாம். மற்றவற்றுடன் ஒப்பிடுகையில், பைல்களின் கொள்ளளவு அடிப்படையில்,  இதற்கு செலவழிக்கும் பணம் குறைவுதான். இதனை இந்த டிஸ்க் வரும் ஒரிஜினல் பாக்ஸில் வைத்துப் பாதுகாப்பதே நல்லது. ஆனால் ஒரு விஷயத்தை மனதில் கொள்ள வேண்டும். எந்த ஸ்டோரேஜ் வகை என்றாலும், அவை எந்த சூழ்நிலையிலும் பிரச்னைக் குள்ளாகி, நம் டேட்டா பைல்களைத் திரும்பத் தராத நிலைக்குத் தள்ளப் படலாம். எனவே கவனமாகவே, பல முன்னெச்சரிகை நடவடிக்கைகளுடன் இவற்றைக் கொள்ள வேண்டும். இதனால் கலவரம் அடைய வேண்டாம். சற்று கவனத்துடன் இவற்றைப் பயன்படுத்தவும், எந்தச் சூழ்நிலை ஏற்பட்டாலும், சமாளித்துக் கொள்ள தயாராக இருக்க வேண்டும் என்பதற்காகவே இந்த தகவல். ஒன்றிற்கு இரண்டாக சேமித்து வைப்பதுவும், அடிக்கடி அவற்றைச் சோதனை செய்து, அவை தொடர்ந்து சரியாக உள்ளனவா என்று உறுதி செய்து கொள்வதும் தேவை.

கேள்வி: போட்டோஷாப் சாப்ட்வேருக்குப் பதிலாக, இலவச இமேஜ் எடிட்டர் புரோகிராம் உள்ளதா? என் நிறுவனத்தில் பயன்படுத்தும் வகையில் உள்ளதைக் கூறவும். –டி.பாலாஜி, தேவி வீடியோஸ், சென்னை
பதில்: இணையத்தில் பல இலவசமாகக் கிடைக்கின்றன. ஆனாலும் அடோப் போட்டோ ஷாப் புரோகிராமில் உள்ள அனைத்தும் கிடைக்குமா என்பது சந்தேகமே. இருப்பினும் அண்மையில் நான் இணையத்தில் கண்டு பயன்படுத்திய புரோகிராம் ஒன்று பற்றிக் கூறுகிறேன். அதனைப் பயன்படுத்திப் பாருங்கள்.
அதன் பெயர் GIMP.  இது ஓர் இமேஜ் எடிட்டிங் புரோகிராம். போட்டோ மற்றும் படங்களை எடிட் செய்திடவும், டச் அப் செய்திடவும் உதவுகிறது. இதனைப் பொறுத்தவரை உள்ள சிறப்பம்சம், இதனை எப்படிப் பயன்படுத்துவது என்ற விளக்கக் குறிப்புகள், அதன் தளத்திலேயே இலவசமாகக் கிடைக்கின்றன. அத்துடன் அவை Beginner, Intermediate, Expert, Photo Editing, Web, and Scripting  எனப் பல்வேறு நிலைகளில் இதனைப் பயன்படுத்து வோருக்கென தரப்பட்டுள்ளன.  இந்த புரோகிராம் மற்றும் குறிப்புகளுக்கு நீங்கள் செல்ல வேண்டிய தள முகவரி http://www.gimp.org.

கேள்வி: திடீரென என் விண்டோஸ் எக்ஸ்பி டாஸ்க்பாரில் இரு கோடுகள் மேலாகத் தெரிகின்றன. இது திடீரென ஏன் தோன்றியுள்ளது? வைரஸ் காரணமா? என்ன செய்திட வேண்டும் எனக் கூறவும். –நீ. மதிவாணன், காரைக்கால்
பதில்: பல எக்ஸ்பி பயனாளர்கள் அண்மையில் இதனைக் குறிப்பிட்டுக் கேட்டுள்ளனர். இது வைரஸால் அல்ல. இதன் பொருள் உங்கள் டாஸ்க் பார் லாக் செய்யப்படவில்லை என்பதே. இதனை மிக எளிதாகச் சரி செய்து விடலாம். டாஸ்க் பாரில் காலியாக உள்ள இடத்தில் ரைட் கிளிக் செய்திடவும். இதில் Lock the Taskbar  என்றுள்ளதன் எதிரே சிறிய டிக் ஒன்றை ஏற்படுத்தவும். இனி கோடுகள் கிடைக்காது.

கேள்வி: விண்டோஸ் 7 ஆப்பரேட்டிங் சிஸ்டம் அலுவலகத்தில் இன்ஸ்டால் செய்யப்பட்டு பயன்படுத்தி வருகிறோம். இதில் பழைய எக்ஸ்பியில் இருந்தது போல் டாஸ்க்பாரினை அமைக்க முடியுமா? வழி காட்டவும். –கே.  சிவநேசன், வேளாண்துறை அலுவலகம், விழுப்புரம்.
பதில்: உங்களுக்கு விண்டோஸ் எக்ஸ்பி பிடித்திருந்தால், அதன் பல அம்சங்களை மீண்டும் வைத்துக் கொள்ள, விண்டோஸ் 7 வழி தருகிறது. இங்கு டாஸ்க்பாருக்கு வழி பார்ப்போம். டாஸ்க்பாரில் காலியாக உள்ள இடத்தில் ரைட் கிளிக் செய்திடவும். கிடைக்கும் ஆப்ஷன் பட்டியலில் Properties  என்பதைத் தேர்ந்தெடுக்கவும். இப்போது கிடைக்கும் Taskbar and Start Menu Properties  என்ற விண்டோவில், Taskbar   என்னும் டேப்பில் கிளிக் செய்திடவும். Use small icons  என்னும் பாக்ஸில் செக் செய்திடவும். Taskbar buttons  என்பதில் உள்ள  பட்டனில் கிளிக் செய்தவுடன், Never combine  என்பதனைத் தேர்ந்தெடுக்கவும்.  அடுத்து ஓகே அல்லது அப்ளை என்பதில் கிளிக் செய்து வெளியேறவும். இனி உங்கள் விருப்பப்படி, விண்டோஸ் 7 இயக்கத் தொகுப்பில், விண்டோஸ் எக்ஸ்பியில் இருப்பது போன்ற டாஸ்க்பார் கிடைக்கும். இதில் கூடுதலாக, விண்டோஸ் 7 சிறப்பம்சமும் கிடைக்கும். இங்குள்ள பட்டன்கள் மேலாக, உங்கள் மவுஸ் கர்சரைக் கொண்டு சென்றால், திறந்திருக்கும் அப்ளிகேஷன் புரோகிராம்களின் சிறிய படங்கள் கிடைக்கும். எக்ஸ்பியில் அவற்றின் பெயர்கள் மட்டுமே காட்டப்பட்டு வந்தது உங்களுக்கு நினைவிருக்கலாம்.

Advertisement

 வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X