ஜூலை 14ல் கூகுள் தரும் ஆண்ட்ராய்ட் ஒன் போன் | மொபைல் மலர் | Mobilemalar | tamil weekly supplements
ஜூலை 14ல் கூகுள் தரும் ஆண்ட்ராய்ட் ஒன் போன்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 

பதிவு செய்த நாள்

13 ஜூலை
2015
00:00

லாவா நிறுவனத்தின் தயாரிப்பாக, வரும் ஜூலை 14ல், தன் ஆண்ட்ராய்ட் ஒன் ஸ்மார்ட் போனை, கூகுள் ரூ. 12,000 விலையில் இந்தியாவில் அறிமுகப்படுத்த உள்ளது. முதன் முதலில், கூகுள் தன் ஆண்ட்ராய்ட் போனை இந்தியாவில் அறிமுகப்படுத்தியபோது, இந்திய மொபைல் நிறுவனங்கள் அதிக ஆர்வம் காட்டவில்லை. தற்போது அனைத்து நிறுவனங்களும், கூகுளின் மொபைல் போன் தயாரிப்பு திட்டத்தில் பங்கெடுக்க விரும்புகின்றன.
அந்த வகையில், புதிய 'லாவா ஆண்ட்ராய்ட் ஒன்' ஸ்மார்ட் போன், லாவா நிறுவனத்தின் ஹார்ட்வேர் மற்றும் சாப்ட்வேர், மீடியா டெக் நிறுவனத்தின் சிப் ஆகியன கொண்டு வடிவமைக்கப்பட்டு வெளிவருகிறது. இதில் கூகுள் மற்றும் லாவா நிறுவனங்கள் இணைந்து தயாரித்த ஆண்ட்ராய்ட் செயலிகள் பல இடம் பெறுகின்றன.
சென்ற ஆண்டில், கூகுள் மூன்று ஆண்ட்ராய்ட் ஒன் ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்தது. மைக்ரோமேக்ஸ் கான்வாஸ் ஏ ஒன், கார்பன் ஸ்பார்க்கிள் மற்றும் ஸ்பைஸ் ட்ரீம் யு.என்.ஓ ஆகியவை வெளிவந்தன. இந்திய நிறுவனங்கள், இந்த போன்களை வடிவமைக்கையில், சீனாவிலிருந்து போன்களை அப்படியே இறக்குமதி செய்து, விற்பனைக்குக் கொண்டு வந்தன.
ஹார்ட்வேர் மற்றும் சாப்ட்வேர் ஆகியவற்றில், இவற்றின் பங்கு சிறிது கூட இல்லாமல் இருந்தது. ஆனால், இப்போது வெளியாக இருக்கும் இந்த லாவா ஆண்ட்ராய்ட் ஒன் போனில், லாவா நிறுவனத்தின் பங்கு அதிகமாகவே உள்ளது. அதனால், பயனாளர்களுக்குப் புதிய அனுபவத்தினை இது தரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement

 



We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X