மொஸில்லா, விண்டோஸ் 10ல் இயங்கக் கூடிய பிரவுசர் ஒன்றைத் தயாரிக்கும் பணியில் இறங்கியுள்ளது. இதில் என்ன அதிசயம் என்கிறீர்களா? சென்ற ஆண்டு, மொஸில்லா, தான் டச் ஸ்கிரீனுக்கான பிரவுசரைத் தயாரிக்கும் முயற்சியைக் கைவிட்டுவிட்டதாக அறிவித்திருந்தது. மிகக் குறைந்த எண்ணிக்கையிலான பயனாளர்களே, டச் ஸ்கிரீன் பிரவுசரை டவுண்லோட் செய்து பயன்படுத்துவார்கள். எனவே, அது தேவையற்றது என மொஸில்லா கருதியது.
ஆனால், தற்போது, விண்டோஸ் 10க்கான பிரவுசரைத் தயாரிக்க இறங்கியிருப்பதன் மூலம், இந்த புதிய பிரவுசரின் மூலம், மொஸில்லா புதிய வாய்ப்புகளை எதிர்நோக்கியுள்ளது என்பது தெளிவாகிறது. iOS சிஸ்டத்தில் இயங்கும், டச் ஸ்கிரீன் பிரவுசர் ஒன்றையும் மொஸில்லா தயாரிக்கிறது. இது குறித்த கூடுதல் தகவல்கள் எதனையும் தன் வலைமனையில் (https://blog.mozilla.org/futurereleases/2015/07/02/whattolookforwardtofromfirefox/) மொஸில்லா தரவில்லை. புதிய பிரவுசர், தனிச் செயல்பாட்டுடன் இருக்கும் என்றும், வழக்கமான இணைய பிரவுசருக்கு மாற்றாக இருக்கும் என்றும் தகவல் தரப்பட்டுள்ளது.
விண்டோஸ் ஸ்டோரில், மொஸில்லாவின் பிரவுசர் கிடைக்கிறது. கடந்த இரண்டு ஆண்டுகளில், மொஸில்லா பிரவுசரைப் பயன்படுத்துபவர்களின் பங்கு 42% ஆகக் குறைந்துள்ளது. புதியதாக, விண்டோஸ் 10க்கென வர இருக்கும், பயர்பாக்ஸ் பிரவுசர், இந்தப் பயன்பாட்டினை அதிகரிக்கலாம்.