எட்ஜ் பிரவுசரின் கூடுதல் சிறப்புகள் | கம்ப்யூட்டர் மலர் | Computermalar | tamil weekly supplements
எட்ஜ் பிரவுசரின் கூடுதல் சிறப்புகள்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 

பதிவு செய்த நாள்

20 ஜூலை
2015
00:00

மைக்ரோசாப்ட் நிறுவனம் தன் இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பிரவுசருக்கு விடை கொடுக்கும் காலத்தை நெருங்கிக் கொண்டுள்ளது. தன் எட்ஜ் பிரவுசரை, இதுவரை யாரும் எதிர்பார்க்காத வகையில் வடிவமைத்து விண்டோஸ் 10 சிஸ்டத்துடன் வழங்குகிறது. இந்த சிஸ்டத்துடன் மாறா நிலையில், தரப்படும் பிரவுசராக எட்ஜ் அமையப் போகிறது. முந்தைய விண்டோஸ் சிஸ்டம் எதிலும், எட்ஜ் இயங்காது. எப்போதும், புதிய பிரவுசர் ஒன்றை மைக்ரோசாப்ட் அறிமுகப்படுத்துகையில், அது பழைய பிரவுசர்களில் இயங்கியவற்றையும் அணைத்தே செலுத்தும். பழைய விண்டோஸ் சிஸ்டங்களிலும் இயங்கும், backward compatibility என அழைக்கப்படும், பழைய சிஸ்டத்துடன் இணைந்து செல்லும் வசதியைக் கொண்டிருந்ததால் தான், இன்டர்நெட் எக்ஸ்புளோரர் இயக்க பைல் தொகுப்பு, பெரிய அளவில் இருந்தது. ஆனால், முதல் முறையாக, வேறு எந்த முந்தைய சிஸ்டத்திலும் இயங்காத வகையில், எட்ஜ் அறிமுகமாகிறது.
எட்ஜ், மைக்ரோசாப்டின் ActiveX, Browsers Helper Objects (BHOS), VBScript ஆகிய எதனையும் சப்போர்ட் செய்திடாது. இன்டர்நெட் எக்ஸ்புளோரர் 11க்கு உருவாக்கப்பட்ட தர்ட் பார்ட்டி டூல் பார்கள் எதனையும் சப்போர்ட் செய்திடாது. இவை அனைத்துமே, சிஸ்டம் செயல்பாட்டினை மந்தப்படுத்திய விஷயங்களாகும். இவை, எட்ஜ் பிரவுசரில் நீக்கப்பட்டுள்ளன. ஆனால், அடோப் பிளாஷ் மற்றும் பி.டி.எப். பைல்களுக்கு சப்போர்ட் தரப்படுகிறது.
backward compatibility தரும் விஷயங்கள் அனைத்தும் நீக்கப்பட்டுள்ளதால், எட்ஜ் பிரவுசரின் இயக்க பைல், மிகச் சிறியதாக அமைந்துள்ளது.
இன்டர்நெட் எக்ஸ்புளோரர் போல் இல்லாமல், எட்ஜ் பிரவுசர், ஜாவா அடிப்படையில் அமைந்த எக்ஸ்டன்ஷன் புரோகிராம்களை சப்போர்ட் செய்திடுகிறது. இதனால், தர்ட் பார்ட்டி நிறுவனங்கள், இணையப் பக்கங்களை அவர்கள் விருப்பப்படி காட்டும் வகையில் தளங்களை அமைக்க முடியும்.
மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் பிங் தேடல் சாதனத்துடன், எட்ஜ் பிரவுசர் ஒருங்கிணைக்கப்பட்டு தரப்படுகிறது. அத்துடன் புதிய கார்டனா பெர்சனல் அசிஸ்டண்ட் செயல்பாட்டுடனும் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது. பிரவுசரின் அட்ரஸ் பாரில், கேள்வி ஒன்றை டைப் செய்திடுகையில், எட்ஜ் பிரவுசர், அதற்கென கிடைக்கும் வாய்ப்புள்ள விடைகளைத் தயார் செய்து அளிக்கிறது.

Advertisement

 



We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X