கேள்வி - பதில் | கம்ப்யூட்டர் மலர் | Computermalar | tamil weekly supplements
கேள்வி - பதில்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
Advertisement
 

பதிவு செய்த நாள்

20 ஜூலை
2015
00:00

கேள்வி: பெரும்பாலும், தமிழ் டாகுமெண்ட்களைத் தயாரிக்கவே நான் கம்ப்யூட்டரைப் பயன்படுத்தி வருகிறேன். இதற்கு குறள் தமிழ்ச் செயலி மற்றும் என்.எச்.எம். ரைட்டரைப் பயன்படுத்துகிறேன். இவற்றைப் பயன்படுத்தி டாகுமெண்ட் தயாரிக்கையில், வாக்கியம் ஒன்றின் முதல் எழுத்து நான் டைப் செய்யாத எழுத்தாக வருகிறது. மீண்டும் அதனை ஒட்டியே தேவைப்படும் எழுத்தை டைப் செய்து, முதலில் உள்ள எழுத்தினை நீக்க வேண்டியுள்ளது. இந்த பிரச்னை, ஆங்கில மொழி சார்ந்ததது என்று என் நண்பர் கூறுகிறார். சிலர், நான் பயன்படுத்தும் தமிழ் சாப்ட்வேர் சார்ந்தது என்று கூறுகின்றனர். இந்தப் பிரச்னையின் மூலம் என்ன? தீர்வு எங்குள்ளது?
கா. முருகவேல், தூத்துக்குடி.
பதில்
: தமிழில் டாகுமெண்ட்களைத் தயாரிப்பதில் மட்டுமல்ல, தமிழைச் சாதாரணமாகப் பயன்படுத்தும் அனைவருக்கும் இந்த பிரச்னை ஏற்படுகிறது. நீங்கள் பயன்படுத்தும் எம்.எஸ். ஆபீஸ் தொகுப்பு என்னவென்று கூறவில்லை. வேர்ட் 2007 என நினைக்கிறேன். வாக்கியத்தின் முதல் எழுத்து மாற்றம் என்பது ஆங்கில மொழி அடிப்படையில், வேர்ட் செயலியில், மாறா நிலையில் தரப்படும் செயல்பாடாகும். நீங்கள் டைப் செய்திடும் வாக்கியத்தின் முதல் எழுத்து கேபிடல் எழுத்து என வேர்ட் ஏற்றுக் கொண்டு, அதனை கேபிடல் எழுத்தாக மாற்றுகிறது. இது AutoCorrect என்ற டூல் செய்திடும் செயல்பாடு. இந்த செயல்பாட்டினை மட்டும் நிறுத்திவிட்டால், உங்கள் பிரச்னைக்குத் தீர்வு கிடைக்கும்.
முதலில் AutoCorrect டூல் இருக்கும் இடம் செல்லவும். இதற்கு ரிப்பனில் கிளிக் செய்து கிடைக்கும் மெனுவில், Word Options என்பதனைத் தேர்ந்தெடுக்கவும். கிடைக்கும் விண்டோவில், இடது பக்கம், Proofing என்பதனைத் தேர்ந்தெடுக்கவும். இதனைத் தேர்ந்தெடுத்தவுடன், Change how word corrects and formats your text என்ற விண்டோ கிடைக்கும். இதில் முதல் டூலாக Auto Correct Options என்ற டேப் கிடைக்கும். இதில் கிளிக் செய்தால், Auto Correct என்று காட்டி, தொடர்ந்து, நீங்கள் தேர்ந்தெடுத்து அமைத்த ஆங்கிலம் (AutoCorrect:English United States) தலைப்பிட்ட விண்டோ கிடைக்கும். அதில் பல டேப்கள் காணப்படும். அதிலும் ஆட்டோ கரெக்ட் என்ற டேப்பில் கிளிக் செய்திட கிடைக்கும் பல்வேறு ஆப்ஷன்களில், ''Capitalize First letter of Sentences” என்று இருப்பதன் முன் உள்ள பாக்ஸில் உள்ள டிக் அடையாளத்தை எடுத்துவிடவும். பின்னர், ஓகே கிளிக் செய்து வெளியேறலாம். ஆனால், ஆங்கில வாக்கியங்களை அமைக்கும்போது, முதல் எழுத்தினைச் சிறிய எழுத்தாக அமைத்தால், அது திருத்தப்பட மாட்டாது. இந்த விண்டோவில் கிடைக்கும் வசதிகள் பின்வருமாறு: Correct Two Initial Capitals, Capitalize First Letter Of Sentences, Capitalize First Letter Of Table Cells, Capitalize Names Of Days, Correct Accidental Use Of Caps Lock Key.

கேள்வி: விண்டோஸ் 10 கிடைக்கும்போது, விண்டோஸ் மீடியா சென்டர் / பிளேயர் இருக்காது எனக் கூறுகிறார்களே? அப்படியானால், அதன் இடத்தில் என்ன அமைத்துக் கொள்ளலாம்? எப்படி அமைத்துக் கொள்ளலாம்?
என். இந்திரா, மதுரை.
பதில்
: விண்டோஸ் மீடியா சென்டர், விண் 10 உடன் கிடைக்காது. ஆனால், விண்டோஸ் பிளேயர், சிஸ்டத்துடன் கிடைக்கும் என்றுதான் தெரிகிறது. விண்டோஸ் மீடியா சென்டர் போல அனைத்து செயல்பாடுகளையும், மீடியா பிளேயரில் மேற்கொள்ள முடியாது என்றாலும், மியூசிக் மற்றும் விடியோ பைல்களை இயக்கலாம். இதற்குப் பதிலாக என்றால், வி.எல்.சி. மீடியா பிளேயரை டவுண்லோட் செய்து பயன்படுத்தலாம்.

கேள்வி: என் தற்போதைய விண்டோஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டம், இலவச விண்டோஸ் 10 சிஸ்டத்தைப் பெற முடியாது. புதியதாக வாங்க வேண்டும் என்றால், எவ்வளவு செலுத்த வேண்டும்? எப்போது கிடைக்கும்?
கா. உதயகுமார், சேலம்.
பதில்:
எல்லாருக்கும், விண்டோஸ் 10 இலவசமாகக் கிடைக்காது என்பது உண்மையே. நீங்கள் விண்டோஸ் 7 அல்லது விண்டோஸ் 8.1 பயன்படுத்தவில்லை என்றால், அல்லது ஓராண்டுக்குப் பின்னர், விலை கொடுத்து விண்டோஸ் 10 சிஸ்டத்தினை விலை கொடுத்து வாங்க விரும்பினால், மைக்ரோசாப்ட் அதற்கான வகைகளைத் தெரிவித்துள்ளது. விண்டோஸ் 10 சிஸ்டத்தின் இரு வகைகளை விற்பனைக்குக் கொண்டு வருகிறது. Windows 10 Home சிஸ்டத்தின் விலை 119 டாலர். Windows 10 Pro சிஸ்டம் விலை 199 டாலர்.

கேள்வி: என்னிடம் நான்கு ஆண்டுகளுக்கு முன்னர் வாங்கிய விண்டோஸ் 7 சிஸ்டம் கொண்ட கம்ப்யூட்டர் உள்ளது. விண்டோஸ் 7 அப்டேட் செய்யப்படவில்லை என்றால், என்னால், விண்டோஸ் 10க்கு அப்கிரேட் செய்திட முடியாது என்று உங்கள் கட்டுரையில் படித்தேன். நான் அப்கிரேட் செய்திட முயற்சிக்கையில், “Windows Update error 80070422.” என்று வருகிறது. நான் என்ன செய்திட வேண்டும்? நான் இதுவரை ஆப்பரேட்டிங் சிஸ்டத்தினை அப்டேட் செய்திடவே இல்லை.
அ.ஸ்ரீதர், சென்னை.
பதில்:
இதுவரை நீங்கள் உங்கள் ஆப்பரேட்டிங் சிஸ்டம் விண்டோஸ் 7, அப்டேட் செய்திடாமல் இருந்தால், இதற்கு மைக்ரோசாப்ட் தரும் செயல்பாடுகளை மேற்கொள்ள வேண்டியதிருக்கும். tinyurl.com/kbl3bcm என்ற முகவரியில் உள்ள தளத்தினைப் பார்க்கவும். இதன் மூலம் அப்டேட் செய்திட இயலவில்லை என்றால், கீழே குறிப்பிட்டுள்ளபடி, விண்டோஸ் 7 சிஸ்டத்திற்கான அனைத்து அப்டேட் பைல்களும் இணைந்த '' Windows 7 SP1,” என்பதனை டவுண்லோட் செய்திடவும். இதனை அப்டேட் செய்திட்டால், விண்டோஸ் 10 பெற உங்கள் கம்ப்யூட்டர் தயாராகிவிடும்.
அப்கிரேட் செய்வதற்கான மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் அறிவுரைகள் tinyurl.com/pql9fs2 என்ற தளத்தில் கிடைக்கின்றன. இந்த தளத்தில், மேலே குறிப்பிட்டுள்ளது போல, அனைத்து அப்டேட் பைல்களும் அடங்கிய மொத்த தொகுப்பினை டவுண்லோட் செய்திட லிங்க் தரப்பட்டுள்ளது. அதே தளப் பக்கத்தில், விண்டோஸ் 8 வைத்துள்ளவர்கள், விண்டோஸ் 8.1 அப்டேட் செய்வதற்கான லிங்க் தரப்பட்டுள்ளதனையும் பார்க்கலாம்.
இதே தளத்தில், விண்டோஸ் 10 இயக்கத் தேவையான ஹார்ட்வேர் தேவைகளும் பட்டியலிடப்பட்டுள்ளன. உங்களுடைய கம்ப்யூட்டரில் உள்ளது 32 பிட் ப்ராசசரா அல்லது 64 பிட் ப்ராசசரா என்ற கேள்விக்கு இங்கு நீங்கள் விடை அளிக்க வேண்டும். இதனை அறிய கண்ட்ரோல் பேனல் சென்று, System என்பதனைத் தேர்ந்தெடுக்கவும். அங்கு இந்த தகவல் கிடைக்கும். உங்கள் ஹார்ட் டிஸ்க்கில் எவ்வளவு இடம் காலியாக உள்ளது என்பதனை அறிய C drive சென்று properties என்பதனைத் தேர்ந்தெடுத்துப் பார்த்து அறியலாம்.
மைக்ரோசாப்ட் தரும் குறைந்த பட்ச ஹார்ட்வேர் தேவைகளே உங்கள் கம்ப்யூட்டர் கொண்டுள்ளது என்றால், விண்டோஸ் 10 பதிந்த பின்னர், உங்கள் கம்ப்யூட்டர் மெதுவாக இயங்க வாய்ப்புண்டு. எனவே, சற்றுக் கூடுதலாக ஹார்ட்வேர் தேவைகளைத் தேர்ந்தெடுத்து அமைத்துக் கொள்ளவும்.
விண்டோஸ் 10 பதியப்படுகையில், தன்னால் இயக்க இயலாத சாப்ட்வேர் அப்ளிகேஷன்களை, நீக்கிவிடும்படி, விண்டோஸ் 10 இன்ஸ்டாலர் கேட்கும். எனவே, எதற்கும் தயாராக இருக்கவும்.

கேள்வி: எம்.எஸ். ஆபீஸ் 2007 பயன்படுத்தி வருகிறேன். முன்பு வேர்ட் 2003 தொகுப்பில், வியூ மெனு மூலம், டாகுமெண்ட் முழுமையும், முழு திரையையும் எடுத்துக் கொண்டு, நன்றாகக் காட்சி தரும். இதை அப்படியே மாணவர்களுக்கு வகுப்பில் காட்ட சிறப்பாக இருந்தது. தற்போது அதே போன்ற செயல்பாட்டினை, வேர்ட் 2007ல் கொண்டு வர இயலவில்லை. இது எதனால்? அதனைப் பெற என்ன செட்டிங்ஸ் அமைக்க வேண்டும்?
ஆர். தியாகராஜன், திருச்சி.
பதில்
: நீங்கள் சொல்வது சரியே. வேர்ட் 2007ல், முழுத் திரையும் ஒரு டாகுமெண்ட் எடுத்துக் கொண்டு காட்சி தரும் வழி இல்லை. இது குறித்து, Microsoft Conversion Guide பார்க்கும் போது, View, Full Screen Reading, என்று சென்று பெறலாம் என்று கூறுகிறது. ஆனாலும், முழுத் திரையும் டாகுமெண்ட்டால் பயன்படுத்த இயலவில்லை. ஓரமாக இருக்கும் சில நுனிகள், நம் கவனத்தைச் சிதறடிக்கின்றன.
ஆனாலும், உங்களுக்கு உதவிட, மைக்ரோசாப்ட் சில வழிகளைக் கொண்டுள்ளது. ஆனால், அந்த வழிகள் மறைக்கப்பட்டுள்ளன. ஏன் மறைக்கப்பட்டுள்ளன என்ற கேள்விக்கு விடை இல்லை. இடைமுகத்தினை (இண்டர்பேஸ்) சிறப்பாக்க என்று சொல்லிக் கொள்ளலாம். வழக்கமான முழு திரைப் பயன்பாடு தேவை என்றால், Alt+V அழுத்தி, உடன் U அழுத்தவும். ஆபீஸ் தொகுப்பின் அனைத்து சங்கதிகளும் மறைக்கப்பட்டிருக்கும். ஸ்குரோல் பார் மட்டும், திரையின் வலது பக்கத்தில் காட்டப்படும். இந்த காட்சியிலிருந்து வெளியேற வேண்டும் எனில், எஸ்கேப் கீயை அழுத்தவும்.
இதனை ஒரு டூல் பார் மூலம் பெற வேண்டும் என்றால், கீழே கொடுத்துள்ளபடி செயல்படவும்.
1. ஆபீஸ் பட்டன் அழுத்தி, Word Options தேர்ந்தெடுக்கவும். வேர்ட் Word Options டயலாக் பாக்ஸைக் காட்டும்.
2. டயலாக் பாக்ஸின் இடதுபுறம் Customize என்ற பட்டனை அழுத்தவும்.
3. கீழ்விரி மெனுவில், All Commands என்பதனைத் தேர்ந்தெடுக்கவும்.
4. கிடைக்கும் கட்டளைகளில், Toggle Full Screen என்பதனைத் தேர்ந்தெடுக்கவும்.
5. தொடர்ந்து Add பட்டனை அழுத்தவும்.
இப்போது, முழுத்திரைக்கான டாகிள் பட்டன் (Toggle Full Screen) டூல்பார் காட்டப்படும். இதனைப் பயன்படுத்தித் தேவையான போது, டாகுமெண்ட்டினை முழுத் திரையில் காணலாம்.

கேள்வி: என்னிடம் இரண்டு லேப்டாப் கம்ப்யூட்டர்கள் உள்ளன. ஒன்றில் விண்டோஸ் 8.1, மற்றொன்றில், விண்டோஸ் விஸ்டா உள்ளது. நான் 8.1 உள்ள லேப் டாப் கம்ப்யூட்டரில், விண்டோஸ் 10க்காக பதிவு செய்துள்ளேன். அடுத்த கம்ப்யூட்டரிலும், இதனை மேற்கொள்ள வேண்டுமா? அல்லது இதில் கிடைக்கும் உரிமத்தினை வைத்து, விண்டோஸ் 10 பதிந்து கொள்ளலாமா?
பொ. காளிராஜன், மதுரை.
பதில்:
ஒவ்வொரு கம்ப்யூட்டரிலும், வேறு வேறு உரிமம் பெற்ற ஆப்பரேட்டிங் சிஸ்டம் இயங்குவதால், ஒவ்வொன்றிலும் நீங்கள் பதிவதற்கு முயற்சிகள் எடுக்க வேண்டும்.
இன்னொரு லேப் டாப் கம்ப்யூட்டரில், விண்டோஸ் விஸ்டா இயங்குவதாகக்
கூறியுள்ளீர்கள். விண்டோஸ் விஸ்டா ஆப்பரேட்டிங் சிஸ்டம் இயங்கும் கம்ப்யூட்டருக்கு, விண்டோஸ் 10 இலவசமாகக் கிடைக்காது. அந்த லேப் டாப் கம்ப்யூட்டரின் ஹார்ட்வேர், விண் 10 சிஸ்டம் இயங்குவதற்குத் தேவையானதைக் கொண்டிருந்தால், நீங்கள் 100 டாலர் அல்லது அதற்கு ஈடான இந்தியப் பணம் செலுத்தி, விண்டோஸ் 10 ஆப்பரேட்டிங் சிஸ்டத்தினைப் பெற்றுக் கொள்ள வேண்டியதிருக்கும்.

கேள்வி: ஒவ்வொரு வேர்ட் டாகுமெண்ட் தயாரிக்கும்போதும், அதன் Properties உடன், டாகுமெண்ட் குறித்த மற்ற அம்சங்களும் கொண்ட Summary இணைக்கப்பட்டு கிடைக்கிறது. இதனை டாகுமெண்ட்டுடன் அச்செடுத்து வைத்துக் கொள்ள முடியுமா? என்ன செய்தும் அச்சடிக்க இயலவில்லை. அதற்கான செட்டிங்ஸ் என்ன?
என். அருட்செல்வன், சிதம்பரம்.
பதில்
: நல்ல கேள்வி. நீங்கள் விரும்பும் அந்த Summary details டாகுமெண்ட்டின் இறுதிப் பக்கமாக அச்செடுக்கலாம். அதற்கான செட்டிங்ஸ் கீழே தருகிறேன். நீங்கள் வேர்ட் 2007 பயன்படுத்துபவராக இருந்தால்,
1. Ctrl+P அழுத்தவும். வேர்ட் பிரிண்ட் டயலாக் பாக்ஸைக் காட்டும்.
2. அடுத்து Print What கீழ்விரி மெனுவினைப் பயன்படுத்தி, Document Properties என்பதனைத் தேர்ந்தெடுக்கவும். பின் ஓகே கிளிக் செய்து வெளியே வந்தால், அடுத்து டாகுமெண்ட் அச்சாகும்போது, இந்த விரிவான தகவல்களும் ஒரு பக்கத்தில் அச்சாகிக் கிடைக்கும்.
நீங்கள் வேர்ட் 2010 பயன்படுத்தினால்,
1. Ctrl+P அழுத்தவும். வேர்ட் ரிப்பனின் File டேப்பினைக் காட்டும். Print ஆப்ஷன் இடது பக்கம் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும்.
2. Settings லேபிளுக்குக் கீழாக உள்ள கீழ்விரி மெனுவினைக் கிளிக் செய்திடவும். வேர்ட் நீங்கள் அச்சிட விரும்பும் பல அம்சங்களைக் காட்டும்.
3. அவற்றில் Document Properties என்பதில் கிளிக் செய்திடவும்.
4. பின்னர் Print என்பதில் கிளிக் செய்திடவும்.

Advertisement

 We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X