அம்மனும், ஈஸ்வரியும்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar advertisement tariff
 
Advertisement
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

16 ஜூலை
2015
00:00

ஆடி மாதம் என்றவுடன் சட்டென்று நினைவுக்கு வருவது, அம்மன் திருவிழாக்கள்தான். அம்மன் பாடல்கள் என்றால் நம் கண்முன் வருபவர், திரைப்பட பின்னணிப் பாடகி எல்.ஆர். ஈஸ்வரி தான் பாடிய அம்மன் பாடல்களைப் பற்றி மனம் திறக்கிறார் அவர்.
நான் பாடி, ஒலிப்பதிவு செய்யப்பட்ட முதல் மாரியம்மன் பாடல், "வரமளித்து உலகயெல்லாம் வாழ்வளிக்க வந்தவளே!' என்ற பாட்டு, அந்தப் பாடல்களுக்கு இசையமைத்தவர் வயலின் மேதை குன்னக்குடி வைத்தியநாதன்.

இன்று ஆடி, தை மாதம் என்றால் மாரியம்மன் கோயில்களில் மட்டுமல்லாமல், பல்வேறு கோயில்களிலும் ஒலிக்கிற ஒரு பாட்டு "செல்லாத்தா! செல்ல மாரியாத்தா!'. இந்தப் பாட்டை எழுதியவர் வீரமணி சோமு. அதேபோல இன்னொரு மிகப் பிரபலமான பாட்டு "வேற்காடு வாழ்ந்திருக்கும் ஆதி பராசக்தியவள்' என்ற பாட்டு. நான் கிறிஸ்துவ மதத்தைச் சேர்ந்தவள் என்றாலும், நான் பாடிய அத்தனை அம்மன் மீதான பாடல்களையும் முழுமையான ஈடுபாட்டோடு, அனுபவித்துதான் பாடியிருக்கிறேன். அதற்குக் கவிஞர் தமிழ் நம்பியின் அற்புதமான தமிழும், ஆன்மிக அறிவும் காரணம். அவரை என் வாழ்நாளில் மறக்க முடியாது.
பண்டிகையோ, திருவிழாவோ... என்னோட பக்தி பாடல்கள் ஒலிக்காத அம்மன் கோயில்களே இல்லை என்று சொல்லவிடலாம். அதிலும், ஆடி மாதம் முழுக்க எங்கும் என் குரல்தான்! அது அந்தத் தெய்வமா பார்த்து எனக்குக் கொடுத்த வரம்.
குன்னக்குடி வைத்தியநாதன், வீரமணி சோமு, எல்.கிருஷ்ணன், இசையமைப்பாளர் தேவா போன்றவர்களின் இசையமைப்பில் ஆயிரக்கணக்கான பக்திப் பாடல்களைப் பாடியிருக்கேன். ஒவ்வொண்ணும் ஒவ்வொருவிதமா, மாணிக்கமா, மரகதமா, வைரமா, பவழமா, நவரத்தினமா ஜொலிக்கும்.
குறிப்பாக, "கற்பூர நாயகியே கனகவல்லி'ங்கிற பாடல் சூப்பர் ஹிட் ஆனது. அதை எழுதியவரோ, இசையமைத்தவரோ யாருன்னு ரொம்ப பேருக்கு தெரியாது. கவிஞர் அவினாசி மணி என்பவர் எழுதிய தெய்வீக மணம் கமழும் வார்த்தைகளுக்கு இசையமைத்தவர் வீரமணி -சோமு. "பள்ளிக்கட்டு சபரி மலைக்கு' பாடுவாரே அதே பாடகர் வீரமணிதான்!
தேவாவின் இசையமைப்பில் "மகமாயி... சமயபுரத்தாயே' பாடலில் கவிஞர் தமிழ் நம்பி எழுதிய வரிகளை நான் பாடியுள்ளேன். அது என்னவோ எனக்காகவே எழுதியது போலத் தோன்றுவதால் அதைக் கேட்கும்போதெல்லாம் என் கண்கள் கலங்கி விடும். என் நெஞ்சம் பக்தியில் நெகிழ்ந்துவிடும்.

-அனிதாமூர்த்தி

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement

 



வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Upload Photo
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X