வரையறையற்ற நடுநிலையான இணைய சேவை - அறிக்கை வெளியீடு
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

27 ஜூலை
2015
00:00

தகவல் தொழில் நுட்பத் துறை, சென்ற ஜூலை 16ல், “நெட் நியூட்ராலிட்டி” குறித்த தனது 111 பக்க அறிக்கையை வெளியிட்டுள்ளது. வெகு காலமாக எதிர்பார்க்கப்பட்ட இந்த அறிக்கை, இதனை எதிர்பார்த்த இரு பிரிவினருக்கும் சில எதிர்பார்ப்புகளை வழங்கியுள்ளது.
“வரையறையற்ற, எந்த தடையும் இல்லாத, நடுநிலையான இணைய சேவை” மக்களுக்கு வழங்கப்பட வேண்டும் என்ற குறிக்கோளைத் தன் கொள்கையாக இந்திய அரசு ஏற்றுக் கொள்ள பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இருப்பினும், இதனைச் செயல்படுத்துவதில், இப்பிரிவில் செயல்படும் மற்ற நிறுவனங்களின் உரிமையைக் காப்பதுடன், சில நிறுவனங்களின் சேவைகளைத் தன் கண்காணிப்பில் கொண்டு வர முடிவெடுத்துள்ளது. WhatsApp, Viber, Facebook Messenger போன்ற செயலிகள் வழங்கும் சேவைகள் ஊக்கப்படுத்தப்பட வேண்டும் என்பதைத் தெளிவாக்கி, மக்களுக்கு ஆதரவாக அறிக்கை தந்துள்ளது. இந்த அறிக்கை அரசுக்கு அறிவிக்கப்பட்ட பரிந்துரைகள் தான். இறுதி முடிவு அல்ல. ட்ராய் அமைப்பும் தன் அறிக்கையைச் சமர்ப்பித்த பின்னர், அரசு நெட் நியூட்ராலிட்டி குறித்து இறுதி முடிவினை எடுக்கும்.
அறிக்கையின் சில முக்கிய விஷயங்களை இங்கு காணலாம்.
1. “வரையறையற்ற, எந்த தடையும் இல்லாத, நடுநிலையான இணைய சேவை” மக்களுக்கு வழங்கப்பட வேண்டும் என்பதை எந்த தயக்கமும் இன்றி செயல்படுத்த வேண்டும்.
2. பன்னாட்டளவில் பின்பற்றப்படும் சிறந்த வழிமுறைகளுடன், நெட் நியூட்ராலிட்டியின் அடிப்படை இலக்குகள் இணைக்கப்பட்டு, இந்தியாவிற்கான சமமான இணைய சேவைக் கொள்கை வகுக்கப்படும். இதில் இந்தியாவிற்கான குறிப்பிட்ட தேவைகள் மனதில் கொள்ளப்படும்.
3. நவீன கண்டுபிடிப்புகளை உற்சாகப்படுத்துகையில், அதற்கான அடிப்படைக் கட்டமைப்பு வளர்ச்சியும் ஆதரிக்கப்பட வேண்டும். ஏனென்றால், ஒன்றை விட்டு மற்றொன்று வளர இயலாது. இணையக் கொள்கை வரையறை செய்வதில் இதனையும் கருத்தில் கொள்ள வேண்டும்.
4. அனைவரும் பெறும் விலையில் இணைய இணைப்பு, பன்னாட்டளவிலான, தரமான, வேகமான இணைய இணைப்பு வழங்கப்பட வேண்டும்.
5. இணைய சேவை பயன்படுத்துவதில், பயனாளர்களின் உரிமை பாதுகாக்கப்பட வேண்டும். இணைய சேவை வழங்கும் நிறுவனங்கள் பயனாளர்களைக் கட்டுப்படுத்தக் கூடாது.
6. இணையம் வழி அழைப்பு வசதிகள் சில ஆண்டுகளாகவே, பயனாளர்களுக்குக் கிடைத்து வருகின்றன. நுகர்வோரின் நலத்தைக் காப்பதுடன், வளர்ச்சிக்கும் இது அடிப்படையாக அமைந்துள்ளது. எனவே அத்தகைய சேவைகள் ஊக்கப்படுத்தப்பட வேண்டும். இந்த சேவை வழங்குவதில் உள்ள தடைகள் நீக்கப்பட வேண்டும்.
7. இணையம் வழி தொடர்பு மற்றும் அழைப்பு வசதியினை நிறுவனங்கள் இலவசமாக வழங்குகையில், இத்தகைய தொடர்புகளை, கட்டணம் பெற்று வழங்கும் நிறுவனங்களுக்குச் சிக்கல்கள் ஏற்படுகின்றன.
8. இணையம் வழி இலவச தொடர்புகளை, வெளிநாடுகளுடனான தொடர்புகளுக்கு வழங்கும் நடைமுறையைச் சற்று சுதந்திரமான எண்ணத்துடன் அணுகலாம். ஆனால், உள்நாட்டு தொடர்புகளைப் பொறுத்த மட்டில், தற்போதைக்கு அவை வரைமுறைப்படுத்தப்பட வேண்டும். இந்த வரைமுறைகள், பொதுமக்களுடனும் ட்ராய் அமைப்புடனும் கலந்தாய்வு செய்யப்பட்டு வரையறை செய்யப்பட வேண்டும்.
9. இன்றைய சூழ்நிலையில், தற்போது இயங்கும் தகவல் தொழில் நுட்ப நிறுவனங்களுக்கான விதிமுறைகளை, அதே நிலையில், இணையம் வழி தொடர்புகளை இலவசமாகத் தரும் நிறுவனங்களுக்கு விதிக்கக் கூடாது.
10. முறையான, தேவையான தகவல் போக்குவரத்தினை அனுமதிக்கலாம்; ஆனால், அவை நெட் நியூட்ராலிட்டிக்கான அடிப்படை உரிமைகளுக்கு எதிராக இருக்கக் கூடாது.
11. ஏற்கனவே செயல்பாட்டில் இருக்கின்ற சட்டவிதிமுறைகளின் இடத்தில், புதிய சட்ட நெறிமுறைகளைத் திட்டமிடுகையில், அவை நெட் நியூட்ராலிட்டிக்கான அடிப்படை உரிமைகளுடன் இணைந்ததாய்த் திட்டமிடப்பட வேண்டும். இவை உருவாக்கப்பட்டு அமல்படுத்தப்படும் வரையிலான இடைப்பட்ட காலத்தில், இணைய சேவை மற்றும் தகவல் தொழில் நுட்ப நிறுவனங்களுக்கான உரிமங்களை வழங்குவதற்கான நிபந்தனைகளில், தற்போது அறிக்கை தந்துள்ள குழுவின் பரிந்துரைகள் இருக்க வேண்டும்.
12. தேசிய பாதுகாப்பு என்பது மிக முக்கியமாதும் தலையானதுமாகும். நெட் நியூட்ராலிட்டி கொள்கையைக் காட்டிலும் அதற்கு முக்கியத்துவம் தரப்பட வேண்டும். எனவே, இணைய வழி இலவச அழைப்பு மற்றும் தொடர்புக்கான வழிகளை வழங்கும் நிறுவனங்களிடம், அரசு நாட்டின் பாதுகாப்பு தொடர்பான தேவைகளை வலியுறுத்தி, அவை பின்பற்றப்படுவதனை உறுதி செய்திட வேண்டும். இதற்கென, பல்வேறு அமைச்சரவைகளுக்கிடையே ஒருங்கிணைந்த செயல்பாட்டினை மேற்கொள்ள வேண்டும்.
மேற்கண்ட பரிந்துரைகளே, தகவல் தொழில் நுட்பத் துறை வழங்கிய அறிக்கையில் முக்கியமானவையாகும். இதில் உண்மையிலேயே நெட் நியூட்ராலிட்டி எனப்படும் இணையப் பயனாளர் அனைவருக்குமான சமமான சுதந்திரமான சேவை தரப்படும் சாத்தியக் கூறுகள் உள்ளனவா எனப் பார்க்கலாம்.
Whatsapp மற்றும் Viber போன்ற செயலிகள் வழியாக வெளிநாட்டு அழைப்புகள், தகவல் பரிமாற்றங்களை ஊக்குவிக்க வேண்டும். ஆனால், அதே நேரத்தில், இவை உள்நாட்டில் அழைப்புகளை ஏற்படுத்தித் தரும் வசதிகளை ஒழுங்கு செய்திட வேண்டும் என்று பரிந்துரைக்கப்படும் நேரத்தில், அவை குறித்து ஒரு சுதந்திரமான நோக்கு ('liberal approach') இருக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப் பட்டுள்ளது. சென்ற 2002 ஆம் ஆண்டு ஏப்ரல் முதலே, இணையம் வழியாக தொலைபேசி அழைப்பு ஏற்படுத்த, நம் அரசு அனுமதித்துள்ளது. எனவே, 'liberal approach' என்று பொதுவாகக் கூறியிருப்பது, நெட் நியூட்ராலிட்டி தரும் உரிமைகள் பறிக்கப்படுமோ என்ற அச்சம் இதன் ஆதரவாளர்களிடையே பரவி வருகிறது.
தேசிய அளவிலான சாப்ட்வேர் நிறுவனங்களின் அமைப்பான, National Association of Software and Services Companies (NASSCOM), இணையம் வழி தரப்படும் உள்நாடு மற்றும் வெளிநாடு இலவச அழைப்புகளுக்கு எந்தவிதமான தடையும் இருக்கக் கூடாது என கருத்து தெரிவித்துள்ளது. தடை விதிப்பது, சமமான இணைய சேவையின் அடிப்படையையே நெறிக்கும் என அறிவித்துள்ளது.
இப்படித்தான் இருக்க வேண்டும் என வெட்டு ஒன்று துண்டு இரண்டாக இந்த அறிக்கை இல்லை என்றும், இதன் மூலம், தொலை தொடர்புத் துறையில் இயங்கும் மொபைல் சேவை நிறுவனங்களின் விருப்பத்தை இந்த அறிக்கை ஆதரிக்கிறதோ என்ற அச்சமும் மக்களிடையே உருவாகியுள்ளது.
இணையம் வழி அழைப்பு மற்றும் தகவல் பரிமாற்றத்திற்கு வழி தரும் சேவைகள், இனி மொபைல் அழைப்பு சேவைகளைப்போல கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப் படலாம் என்ற எண்ணம் பரவத் தொடங்கியுள்ளது.
மொபைல் டேட்டா கட்டணம் எதுவும் இல்லாமல், சில இணைய தளங்களைப் பார்வையிட அனுமதிக்கும், பேஸ்புக் நிறுவனத்தின் Internet.org திட்டத்திற்கு இந்த அறிக்கை எதிர்ப்பு தெரிவித்துள்ளது. ஆனால், அதே நேரத்தில், ட்ராய் அமைப்பிடம் அனுமதி பெற்று ஏர்டெல் நிறுவனத்தின் Airtel Zero போன்ற திட்டங்களுக்கு அனுமதி வழங்க பரிந்துரைத்துள்ளது.

Advertisement

 வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X