கேள்வி - பதில்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

27 ஜூலை
2015
00:00

கேள்வி: பல எக்ஸெல் ஒர்க் ஷீட்களை அடிக்கடி உருவாக்குகிறேன். பெரும்பாலும் அவை மிகப் பெரியவையாகவே உள்ளன. இதில் குறிப்பிட்ட செல்களை மட்டும் எப்படி அச்செடுப்பது எனத் தெரியவில்லை. ஒர்க் ஷீட் முழுவதுமாக அச்செடுப்பது, என் அலுவலகத்தில் தேவையற்ற வேலையாக இருக்கும். இதற்கான வழி சொல்லவும்.
என். கதிரேசன், திருப்பூர்.
பதில்:
சில வேளைகளில், எக்ஸெல் ஒர்க் ஷீட்டில், குறிப்பிட்ட சில செல்களை மட்டும், ஒரு பகுதியை மட்டும் அச்செடுக்க வேண்டியதிருக்கும். இதனை மேற்கொள்ளும் வழிகளை இங்கு பார்க்கலாம். நீங்கள் எந்த ஆபீஸ் தொகுப்பினைப் பயன்படுத்துகிறீர்கள் எனக் குறிப்பிடவில்லை. இருப்பினும் இருவகை செயலிகளுக்கான குறிப்புகளைத் தருகிறேன்.
நீங்கள் எக்ஸெல் 2007 பயன்படுத்துபவராக இருந்தால், கீழே குறிப்பிட்டுள்ளபடி செயல்படவும்.
1. நீங்கள் அச்செடுக்க வேண்டிய செல் வரிசைகளை மட்டும் தேர்ந்தெடுக்கவும்.
2. அடுத்து பிரிண்ட் டயலாக் பாக்ஸைப் பெறவும். இதற்கு Ctrl+P அழுத்தலாம்.
3. அடுத்து Print What பாக்ஸில் Selection என்ற ஆப்ஷனைத் தேர்ந்தெடுக்கவும்.
4. பின்னர், ஓகே கொடுக்க, தேர்ந்தெடுக்கப்பட்ட பகுதி மட்டும் அச்சாகும்.
நீங்கள் பயன்படுத்துவது எக்ஸெல் 2010 ஆக இருந்தால், மேலே குறிப்பிட்ட செயல்முறைகளைச் சற்று மாற்றி அமைக்க வேண்டியதிருக்கும்.
1. அச்செடுக்க வேண்டிய செல்களை முதலில் தேர்ந்தெடுக்கவும்.
2. அடுத்து பிரிண்ட் ஆப்ஷன்ஸ் தேர்ந்தெடுக்க வேண்டும். இதற்கு ரிப்பனில், File டேப் தேர்ந்தெடுக்கவும். அடுத்து Print என்பதில் கிளிக் செய்திடவும். இல்லை எனில், சுருக்கமாக, Ctrl+P அழுத்தலாம்.
3. தொடர்ந்து Settings தலைப்பின் கீழ் உள்ள செவ்வக பட்டனை அழுத்தவும்.
4. உடன் சில பிரிண்டிங் ஆப்ஷன்ஸ் காட்டப்படும். அதில் Print Selection என்பதைத் தேர்ந்தெடுத்து கிளிக் செய்திடவும்.
5. அடுத்து Print என்பதில் கிளிக் செய்திடவும்.

கேள்வி: உங்கள் அறிவுரைப்படி, விண்டோஸ் 8 வைத்திருந்த நான், விண்டோஸ் 8.1க்கு மாறியுள்ளேன். விண் 8 மற்றும் 8.1ல் Wordpad போல ஏதேனும் புரோகிராம் இணைந்து தரப்பட்டுள்ளதா? இது அவசியம் என் நண்பருக்குத் தேவைப்படுகிறது.
செ.மாணிக்க ராஜன், கடலூர்.
பதில்:
நண்பருக்காக கேட்கிறீர்களா? அல்லது நீங்களும் பயன்படுத்துகிறீர்களா? Paint போல இந்த வேர்ட்பேட் புரோகிராமும், விண்டோஸ் 8.1ல் தரப்பட்டுள்ளது. பலரும் விண்டோஸ் 8.1, மற்ற ஆப்பரேட்டிங் சிஸ்டங்களிலிருந்து வேறுபட்டது; அதனால், பல புரோகிராம்கள் இதில் இருக்காது என தவறாக எண்ணுகின்றனர். இல்லை. மாறா நிலையில் விண்டோஸ் சிஸ்டத்துடன் தரப்படும் அனைத்து புரோகிராம்களும், விண்டோஸ் 8.1. சிஸ்டத்துடன் தரப்பட்டுள்ளன. Metro/Modern திரையில், Wordpad என டைப் செய்தால், அந்த புரோகிராம் பெயர் காட்டப்படும். அதில் கிளிக் செய்தால், அந்த புரோகிராம் இயக்கப்பட்ட நிலையில் கிடைக்கும். அல்லது சார்ம்ஸ் பாரில் தேடி, அங்கு கிடைக்கும் வேர்ட்பேட் ஐகானில் கிளிக் செய்து இந்த செயலியைப் பெறலாம். இந்த செயலியில் வேர்டில் நாம் பயன்படுத்தும் பல வசதிகள் தரப்பட்டுள்ளன. இதில் புதிய டாகுமெண்ட் ஒன்றைத் திறந்தால், என்ன என்ன வசதிகள் கிடைக்கின்றன என்று தெரியவரும்.

கேள்வி: விண்டோஸ் 10 ஆப்பரேட்டிங் சிஸ்டம் இலவசமாக வழங்கப்படுகிறது. சிஸ்டம் தருவதனை மைக்ரோசாப்ட் “சர்வீசஸ்” என ஏன் அழைக்கிறது. இது சேவை என்றால், எப்படிப்பட்ட சேவை? அதன் பயன் என்ன? விளக்க முடியுமா?
என். மரகதம், சென்னை.
பதில்:
நல்ல கேள்வி. ஆப்பரேட்டிங் சிஸ்டம் இலவசமாகத் தருவதே ஒரு சேவை தானே. பின் ஏன் தனியாக, இதனை சேவை என மைக்ரோசாப்ட் அழைக்கிறது? இது பலருக்கு வந்துள்ள சந்தேகமே. ஆப்பரேட்டிங் சிஸ்டம் இலவசமாக வழங்கப்பட்ட பின்னர், மைக்ரோசாப்ட் அந்த சிஸ்டத்திற்கு வழங்கும் சப்போர்ட்டினை சேவை என்று அழைக்கிறது. விண்டோஸ் 10 சிஸ்டம் தொடர்ந்து அப்டேட் செய்யப்படும்; வடிவமைப்பில் மாற்றங்கள் மேற்கொள்ளப்படும். இந்த முறையையும் பணியையுமே, மைக்ரோசாப்ட் சேவை என்கிறது. மூன்று ஆண்டுகளில் புதிய சிஸ்டம் ஒன்றை வடிவமைத்து, அல்லது முக்கிய பைல்களை மாற்றி, அதனை விற்பனை செய்திட மைக்ரோசாப்ட் முயற்சிக்காது.
அதற்குப் பதிலாக, விண்டோஸ் 10 சிஸ்டமே அவ்வப்போது புதிய வசதிகளுடம் மேம்படுத்தப்பட்டு அப்கிரேட் செய்யப்படும். இவ்வாறு வழங்கப்பட இருக்கும் வசதிகளுக்கு நாம் எந்தக் கட்டணமும் செலுத்தத் தேவை இல்லை. இது போல பத்து ஆண்டுகளுக்கு சப்போர்ட் வழங்கப்படும் என மைக்ரோசாப்ட் சென்ற வாரம் அறிவித்துள்ளது. இதனைத்தான் அது சேவை என அழைக்கிறது.
இது ஏறத்தாழ கூகுள் குரோம் பிரவுசரைப் போன்றது. பின்னணியில், அதன் செயல்பாட்டில் புதிய மாற்றங்களும், வசதிகளும் ஏற்படுத்தப்பட்டு தானாக அப்டேட் செய்யப்படுவதைப் போல, மைக்ரோசாப்ட் நிறுவனமும் தன் விண்டோஸ் 10ல் மேற்கொள்ள இருக்கிறது. மேக் கம்ப்யூட்டர், ஐபோன் மற்றும் ஐபேட் சாதனங்களின் ஆப்பரேட்டிங் சிஸ்டமும் இதே போல் தான் அப்கிரேட் மற்றும் அப்டேட் செய்யப்படுகின்றன. அடுத்த பதிப்பு என ஒன்று வெளியிடப்படும் வரை இந்த மேம்படுத்தல்கள் எல்லாம் இலவசமாக சேவையைப் போல் வழங்கப்படுகின்றன.

கேள்வி: என்னுடைய ஒவ்வொரு வேலைக்கும் ஒரு பிரவுசரைப் பயன்படுத்துகிறேன். இவற்றில் நான் எடுத்து வைக்கும் புக்மார்க் மற்றும் பேவரிட்ஸ் அனைத்தையும் மொத்தமாக பட்டியலில் வைத்து அனைத்து புக்மார்க்குகளையும் பயன்படுத்த முடியுமா? அதற்கு என்ன செட்டிங்ஸ் ஏற்படுத்த வேண்டும்?
செ. தெய்வநாயகம், மதுரை.
பதில்
: நல்ல முயற்சி. இது சாத்தியமாகாது என்ற எண்ணத்தில் பல பயனாளர்கள் இருக்கலாம். சரி, இதற்கான தீர்வைப் பார்க்கலாம். ஒவ்வொரு பிரவுசரிலும், இது போல பிரவுசர்களில் sync எனப்படும் ஒருங்கிணைக்கும் செயல்பாட்டிற்கான டூல் இருக்கும். ஆனால், இது அந்த அந்த பிரவுசரை வேறு ஒரு கம்ப்யூட்டரில் இயக்கும் போது, நாம் குறித்து வைத்த புக்மார்க்குகளைத் தரும். நீங்கள் விரும்புவது, வெவ்வேறு பிரவுசர்களிடையேயான பேவரிட்ஸ் மற்றும் புக்மார்க் இணைப்பு. இதனை, நாம் தர்ட் பார்ட்டி அப்ளிகேஷன்களைக் கொண்டே செயல்படுத்த முடியும்.
எனக்குத் தெரிந்த வகையில், தீங்கற்ற இலவச செயலி ஒன்று Xmarks என்ற பெயரில் இணையத்தில் கிடைக்கிறது. இதனை www.xmarks.com என்ற முகவரியில் உள்ள தளம் சென்று பெற்றுக் கொள்ளலாம். இந்த தளம் சென்று, இதற்கான Install Now பட்டனை அழுத்தவும். இதனை இன்ஸ்டால் செய்த பின்னர், அக்கவுண்ட் ஒன்றை உருவாக்கவும்.
யூசர்நேம், பாஸ்வேர்ட் மற்றும் மின் அஞ்சல் முகவரிகளைத் தரவும். இவற்றின் மூலம், எக்ஸ்மார்க்ஸ் தளம் சென்று, எந்த பிரவுசர் வழியாகவும், நீங்கள் பயன்படுத்திய அனைத்து புக்மார்க்குகளையும் பெறலாம்.
இந்த வசதியுடன் சேர்த்து ஒரு சில கூடுதல் வசதிகளையும் இந்த தளம் தருகிறது.

கேள்வி: விண்டோஸ் 7 ஆப்பரேட்டிங் சிஸ்டம் என் கம்ப்யூட்டரில் இயங்குகிறது. பல மாதங்களாய், நான் திறந்து பயன்படுத்தும் பைல்கள் அனைத்தும் அதற்கான ஐகானுடன், பெயரையும் சேர்த்து டாஸ்க் பாரில் தெரிந்தன. இப்போது, அவை சிறிய ஐகான் மட்டும் காட்டப்படுகிறது. அதில் கர்சரைக் கொண்டு சென்றால், அதில் உள்ள பைல்கள் அடுக்காய் உள்ளன. தனித்தனியாய் இல்லை. ஏன் மாறியது என்று தெரியவில்லை. பழையபடி, பைல் பெயருடன் பட்டன் காட்டப்பட என்ன செய்திட வேண்டும்? மாறியதற்கான காரணம் என்ன?
என். சுரேஷ் குமார், திருப்பூர்.
பதில்:
இது தானாக மாறியதற்கான வாய்ப்பு இல்லை. உங்கள் கம்ப்யூட்டரைப் பயன்படுத்திய ஒருவர் இந்த மாற்றத்தினை ஏற்படுத்தி இருக்கலாம். பரவாயில்லை. மீண்டும் நீங்கள் விரும்பியபடி காட்டப்பட கீழே குறிப்பிட்டுள்ளபடி செயல்படவும்.
டாஸ்க் பாரில் காலியாக உள்ள இடத்தில் ரைட் கிளிக் செய்திடவும். கிடைக்கும் மெனுவில் Properties என்பதைத் தேர்ந்தெடுக்கவும். இதில் Taskbar buttons என்ற கீழ் விரி மெனுவினைக் காணவும். இதில் Combine when taskbar is full என்பதனைத் தேர்ந்தெடுக்கவும். இப்போது அந்த புரோகிராம் பெயருடன் நீளமான சதுரத்தில், முன்பு காட்டப்பட்டது போல காட்சி அளிப்பதனைக் காணலாம். மறுபடியும் ஐகான் மட்டுமே காட்டப்பட்டு, பைல்கள் அதற்குள் பொதியாகக் காட்டப்பட வேண்டுமாயின், இதே போலச் சென்று Taskbar buttons என்ற கீழ் விரி மெனுவில், Always Combine, Hide Label என்பதில் கிளிக் செய்து, பின்னர், Apply மற்றும் OK கிளிக் செய்து வெளியேறவும்.

கேள்வி: நான் என் லேப்டாப் கம்ப்யூட்டரில் தொடு உணர் திரையுடன், விண்டோஸ் 8.1 பயன்படுத்தி வருகிறேன். இதில் தரப்பட்டுள்ள சார்ம்ஸ் பாரில் விரைவாகச் செயல்பட சில வசதிகள் தரப்பட்டுள்ளன. ஆனால், வர இருக்கும் விண்டோஸ் 10ல், இந்த சார்ம்ஸ் பார் இல்லை என்று படித்தேன். அதற்குப் பதிலாக, அதே செயல்பாட்டைத் தருவதற்கு, விண் 10ல் என்ன தரப்படுகிறது? அதனைப் பயன்படுத்துவது எப்படி?
என். ஜெலினா ஜோஸ்வனா, நாகர்கோவில்.
பதில்
: நல்ல கேள்வி. உங்களுக்குப் பிடித்த சார்ம்ஸ் பார், பலருக்குப் பிடிக்காமல் போனதால், மைக்ரோசாப்ட், தன் விண்டோஸ் 10 தொகுப்பில், இதனை எடுத்துவிட்டது. எனவே, விண்டோஸ் 10ல் சார்ம்ஸ் பார் இல்லை. அதற்குப் பதிலாக, விண் 10ல், Start பட்டன் கிளிக் செய்திட வேண்டும். உடன் புதிய ஸ்டார்ட் மெனு கிடைக்கும். இதில் கிடைக்கும் பட்டியலில், Settings திரைக்குச் செல்ல ஒரு லிங்க் தரப்பட்டுள்ளது. அதில் கிளிக் செய்திட வேண்டும். விண்டோஸ் 8ல், சார்ம்ஸ் பார் தந்ததற்கும் மேலாகவே, இதில் ஆப்ஷன்கள் தரப்பட்டுள்ளன. இங்கு கிடைக்கும் Settings பார் வழியாக, Network, Volume, Notifications and Power எனப் பல பிரிவுகளுக்குச் செல்லலாம். தற்போது சிஸ்டம் ட்ரேயில், வலது புறம் காட்டப்படும் அனைத்தும் இந்த செட்டிங்ஸ் லிங்க்கில் கிளிக் செய்தால் கிடைக்கும்.
ஸ்டார்ட் மெனுவில், All apps லிங்க்கில் கிளிக் செய்திடவும். இங்கு விண்டோஸ் அப்ளிகேஷன் ஒன்றைத் திறக்கலாம். People அல்லது Mail என எதனையும் தேர்ந்தெடுக்கலாம். திரையின் இடது மேல்புறம் உள்ள Options பட்டனில் கிளிக் செய்திடவும். இது இங்கு மூன்று படுக்கைக் கோடுகள் கொண்ட ஐகான் போல காட்சி தரும். இதில் கிளிக் செய்தால், சார்ம்ஸ் பாரில் கிடைக்கப்பெற்ற அதே கட்டளைகளுடனான பாப் அப் விண்டோ காட்டப்படும். இதில் Settings கிளிக் செய்தால், குறிப்பிட்ட அப்ளிகேஷனுக்கான செட்டிங்ஸ் பார் கிடைக்கும். இதில் App கட்டளையில் கிளிக் செய்தால், அந்த அப்ளிகேஷனுக்கான App பார் கிடைக்கும். விண் 8ல் சார்ம்ஸ் பார் பார்த்து இயக்கி ரசித்தவர்களுக்கு, விண் 10ல் அதற்கான சந்தர்ப்பமே கிடைக்காது.

Advertisement

 வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X