இது உங்கள் இடம் !
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar advertisement tariff
 
Advertisement
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

14 நவ
2010
00:00

டூவீலர் மெக்கானிக்கின் போன் நம்பர் செய்த உதவி!
என் கணவர் தனியார் நிறுவனம் ஒன்றில், கன்னியாகுமரி மாவட்ட பிரதிநிதியாக பணியாற்றுகிறார். இதனால்,  மாவட்டத்தின் அனைத்து பகுதிகளுக்கும், மோட்டார் சைக்கிளில் செல்ல வேண்டி யிருக்கும். கோவில், சினிமா தியேட்டர் மற்றும் பொருட்கள் வாங்க, நான், அவருடன் வெளியே செல்வது உண்டு. அப்போது, முக்கியமான சந்திப்புகளில் உள்ள டூவீலர் மெக்கானிக்குகளின் மொபைல் நம்பர்களை டைரியில் குறித்துக் கொள்வார்.

டூவீலர் மெக்கானிக்குகளின் மொபைல் நம்பர்களை  எதற்காக இவர் பதிவு செய்கிறார் என நான் யோசித் திருக்கிறேன். காரணம், இவர் பணியாற்றும் கம்பெனி டூவீலர் சம்பந்தப்பட்டது இல்லை. நானே ஒரு நாள், அவரிடம், "எதற்காக டூவீலர் மெக்கானிக்குகளின் மொபைல் நம்பரை எழுதுறீங்க?' என்று கேட்டேன். அதற்கு அவர் சஸ்பென்ஸ் வைத் தது போல், "நேரம் வரும் போது நீயே புரிஞ்சுப்பே...' என்றார். நான், அத்தோடு அதை விட்டு விட்டேன். கடந்த மாதம் ஒரு நாள், நானும், அவரும் மோட்டார் சைக்கிளில் திருவனந்தபுரத்துக்கு சென்று கொண்டி ருந்தோம். களியக்காவிளை அருகே படந்தாலுமூடு என்ற இடத்தில், மோட்டார் சைக்கிள் பஞ்சரானது; நான் அதிர்ச்சி யடைந்தேன்.  ஆனால், பதட்டப்படாமல் என்னை கீழே இறங்கச் சொல்லி, மோட்டார் சைக்கிளை, ஸ்டாண்ட் போட்டு நிறுத்தி, மொபைலில் யாரிடமோ பேசினார் என் கணவர்.
ஐந்தாவது நிமிடம் மோட்டார் சைக்கிளில் வந்த ஒரு மெக்கானிக், டயரை கழற்றி எடுத்துச் சென்று, பஞ்சர் சரி செய்து, 15 நிமிடத்தில் டயரை வண்டியில் பொருத்த, வண்டி ரெடியானது. பின்னர் நாங்கள் மோட்டார் சைக்கிளில் திருவனந்தபுரம் சென் றோம்.  முக்கிய சந்திப்புகளில் உள்ள டூவீலர் மெக்கானிக்குகளின் மொபைல் நம்பரை என் கணவர் குறித்து வைத்தது எதற்கு என்று, அப்போது தான் புரிந்தது. மோட்டார் சைக்கிள் பஞ்சரான தும், களியக்காவிளையில் உள்ள மெக்கானிக்கின் நம்பரைத் தேடி, அவரை அழைத்து, வண்டியை சரி செய்ய கூறினார். அவரும், உடனடியாக வந்து வண்டியை சரி செய்தார்.
அந்த மெக்கானிக்கின் மொபைல் நம்பர் இல்லை யெனில், ஆட்டோ பிடித்து மெக்கானிக்கைத் தேடி, மெக்கானிக் வந்த பின், டூவீலரை சரி செய்து முடிக்க குறைந்தது ஒன்று முதல் இரண்டரை மணி நேரமாவது ஆகும். என் கணவர் சமயோசிதமாகவும், முன்னெச்சரிக்கை யாகவும், அப்பகுதி டூவீலர் மெக்கானிக்கின் எண்ணை பதிவு செய்து வைத்ததால், இருபது நிமிடத்திலேயே எங்கள் பிரச்னை தீர்ந்து, பயணத்தைத் தொடர முடிந்தது.
என்ன நண்பர்களே... என் கணவர் செய்தது போல் நீங்களும், நீங்கள் அதிகமாக பயன்படுத்தும் வழியிலுள்ள முக்கியமான டூவீலர் மெக்கானிக்குகளின் போன் நம்பரை பதிவு செய்து வைத்தால், அவசர காலத்தில் உபயோகப் படும் அல்லவா!
— எல்.மீனாம்பிகா,  திருவட்டார்.

பாவிகளே... திருந்துங்கள்!
நாகர்கோவிலில் உள்ள ஒரு டிபார்ட்மென்டல் ஸ்டோருக்குச் சென்றேன். நான் கேட்ட ஒரு பொருள், உயரமான மேல் தட்டில் இருந்தது. சேல்ஸ் பணியில் இருந்த பெண்ணால் எட்டி எடுக்க இயலாத உயரம். அடுத்த பகுதியிலிருந்த ஒரு பையனை உதவிக்கு அழைத்து,  மேலே ஏறி அதை எடுத்து தருமாறு கேட்டாள். அவனும், பல்லை இளித்தவாறே வந்தான். "எங்கே... -----, எப்படி ------' என்று  இரட்டை அர்த்தம் தொனிக்க, எடுத்து தந்தான்.
அவள், "அண்ணா...' என்று அழைத்த அழைப் பின் அருமையை உணராத பயல்; அவளும் கூசி நின்றாள். அங்கு நின்றிருந்தோரும் அவனை எரிச்சலாய் பார்த்தனர். வறுமையின் காரணமாய், படிப்பைத் தொடர முடியாமல் போய்விட்ட இளம் பெண்கள், இப்படி குறைந்த ஊதியத்தில், "சேல்ஸ் கேர்ள்' பணிக்கு வருகின்றனர். அவர்களுக்கு இப்படியெல்லாம் பாலியல் தொல்லை. இதை யெல்லாம் நிர்வாகத்தினர் கண்டிக்கலாம் தானே! அந்தப் பெண்ணும் வீட்டில் அடுப்பு எரிவதற்காக சகித்து போகிறாள் போலிருக்கிறது. எப்போதும், எங்கும் பெண்மை என்றால் இளப்பம் தானோ? பாவிகளே... திருந்துங்கள்!
—ஆ.கல்யாணி, கன்னியாகுமரி.

மென்மை... மேன்மை தரும்!
"படியில் பயணம் நொடியில் மரணம்... படியில் நிற்காதே...' போன்ற இன்னும் சில அபசகுன, எரிச்சல் தரும், எச்சரிக்கை தரும் வாசகமே பெரும்பாலான அரசு பஸ்களில் எழுதப்பட்டிருக்கும்.  ஆணையிடுவது போல் இவ்வாசகம் இடம் பெற்றிருப்பதால், பஸ்சில் ஏறும் இளைஞர் கூட்டம், வேண்டுமென்றே படியில் நின்று, பயணம் மேற்கொள்ளும்.  சமீபத்தில், ஒரு தனியார் பஸ்சில், "நண்பா... பஸ் படியில் நின்று பயணம் செய்த என்னை பார்?' என, வீல் சேரில் அமர்ந்த நிலையில், ஒரு கை மற்றும் ஒரு காலை இழந்த ஒரு இளைஞரின் படத்துடன் கூடிய வாசக ஸ்டிக்கரை பேருந்தின் இரு வாசலிலும் ஒட்டி உள்ளனர்.
 இதைப் பார்த்ததும் நமக்கு பரிதாபம் ஏற்படுவதோடு, நாம் அவ்வாறு தவறாக பயணம் செய்யக்கூடாது என மனதில் பதியும்படி உள்ளது. இப்படியே, அரசு பஸ்களிலும் கனிவாக எழுதலாமே! மென்மை நிச்சயம் மேன்மை தரும். சம்பந்தப்பட்டவர்கள் கவனிப்பரா?                           
— எம்.எஸ்.வி.அருண், புளியங்குடி.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement

 



வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (3)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Anniyan - Chennai,இந்தியா
17-நவ-201012:28:55 IST Report Abuse
Anniyan உங்க கணவர் உண்மையாகவே திறமை சாலி தான் மீனாம்பிகா மேடம்.. நானும் இதை பின் பற்றுகிறேன்.. மிகவும் பயனுள்ள டிப்ஸ்..
Rate this:
Cancel
புவனேஷ் - சென்னை,இந்தியா
14-நவ-201007:23:03 IST Report Abuse
புவனேஷ் "சம்பந்தப்பட்டவர்கள் கவனிப்பரா?".. எனக்கு தெரியல்ல.
Rate this:
Cancel
ஹர்ஷித் - dubai,ஓமன்
14-நவ-201003:58:03 IST Report Abuse
ஹர்ஷித் திண்டுக்ல்லும் துபாயும் அரபு நாடுகளில் வாழும் இந்தியர்கள் என்றலே மிகவும் வசதியுடன் வாழும் மனிதர்களாகதான் எல்லோரும் நினைத்துகொண்டு உள்ளனர் ,ஆனால் அவர்களுடைய வாரிசுகள் படும் அவதி மிக உண்டு . என்னுடைய நண்பன் ஒருவன் ,துபாய் நகரத்திற்கு அப்பால் இருநூறு மயில் தொலைவில் எரிவாயு ஆலையில் வேலை பார்க்கிறான். அங்கு மூவாயிரம் குடும்பங்கள் இருக்கும் இடத்தில் ஒரு பள்ளி தான் உள்ளது. அங்கு, பல நாட்டவர் படிக்கும் பிரிட்டிஷ் முறை கல்வி, இந்திய தேர்வுமுறையான பத்தாம் மற்றும் பனிரெண்டாம் வகுப்புக்கு ஏற்றது இல்லை. நடுத்தர இந்திய குடும்பதின் மகன் அல்லது மகளை அங்கு உள்ளவர்கள் இருநூரு மைலுக்கு அப்பால் உள்ள இந்திய பள்ளிக்கு தினமும் அனுப்புகிற அவலம் உள்ளது. பேருந்து இருந்தாலும், காலையில் ஐந்து மணியளவில் புறப்பட்டு, மாலை தான் திரும்புகின்றனர், இந்திய மாணவர்கள். இது போல் எல்லா அரபு நாடுகளிலும் உள்ள,நகரத்தை தாண்டி வாழும் இந்தியர்கள் பல இன்னல்களுள் உள்ளனர். திண்டுக்கல் கிராம பள்ளி மாணவர்களை போல் , துபாய் கிராம இந்திய மாணவர்களும் பல மயில் தொலைவிற்கு சென்று கல்விக் கற்கின்றனர்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Upload Photo
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X