அந்துமணி பதில்கள் !
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar advertisement tariff
 
Advertisement
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

14 நவ
2010
00:00

*பி.ரஞ்சித், சின்ன காஞ்சிபுரம்: மறைக்காமல் சொல்லுங்கள்... பத்திரிகைகள் கூப்பன்கள் வெளியிடுவது எதற்காக?
அஞ்சலகங்களில், தம் அஞ்சல்கள் வேகமாக பிரிக்கப்படுவதற்கும், பின்னர், தம் அலுவலகத்தில் அந்தந்தத் துறைக்கான தபால்களை சுலபமாக கண்டு கொள்ளவும் மட்டுமே!
***
*ஏ.கார்த்திகேயன், திருவள்ளூர்: என் அக்கா மகளை திருமணம் செய்து கொள்ள என்னை வற்புறுத்துகின்றனர். என் அக்கா சாயலிலேயே அவர் மகளும் இருக்கிறாள். அவளைப் பார்க்கும் போதெல்லாம் என் அக்கா நினைவுதான் வருகிறது. என்ன செய்வது?

இந்த விஷயத்தை அக்காவிடமும், மாமாவிடமும், பக்குவமாக எடுத்துச் சொல்லுங்கள்! கண்டிப்பாக புரிந்து கொண்டு, வேறு மாப்பிள்ளை பார்த்து விடுவர். அத்துடன், "மாமாவைத்தான் கட்டிக் கொள்ள போகிறோம்...' என மனமாற நினைத்திருந்த அக்கா பெண்ணின் மனமும் நோகாத வகையில், உங்கள் பிரச்னையை விவரியுங்கள் - சுலபமாக, சுபமாக முடியும்!
***
** கே.ராமசாமி, மணவூர்: பஸ் ஸ்டாண்ட், பிளாட்பாரம், பீச் போன்ற இடங்களில் சுண்டல் விற்கும் சிறுவர்களை பார்க்கும் போது, உங்கள் மனநிலை எப்படி இருக்கும்?
"நாலு எழுத்துப் படிக்க வாய்ப்பில்லாமல் போய் விட்டதே இவர்களுக்கு...' என்ற ஒரு வருத்தம்தான்! மற்றபடி, சிறு வயதிலேயே ஏதோ ஒரு நியாயமான வேலை செய்து, குடும்பத்திற்கு பாரமில்லாமல் இருப்பதை எண்ணி சந்தோஷம்தான்!
***
*பி.ஆர்.நந்தகுமார், ஊரப்பாக்கம்: மூன் றாம் மனிதரிடம் மனைவியை அறிமுகம் செய்யும் போது, "இவள் என் மிசர்ஸ்' என்று சொல்ல வேண்டுமா? அல்லது "இவள் என் ஒய்ப்' எனச் சொல்ல வேண்டுமா?
இரண்டாவதுதான் சரி என்கிறார், ஆங்கில புலமை கொண்ட நம் பெண் உதவி ஆசிரியை!               
***
**ஜெ.கிருஷ்ணவேணி, உடுமலைப்பேட்டை: கல்யாணம் செய்து கொண்ட ஆண், பிற பெண்களுடன் பழகலாமா?
கல்யாணமான ஆண்கள், பாவப்பட்ட ஜென்மங்கள் போல அல்லவா பேசுகிறீர்கள்? பல்வேறு சந்தர்ப்பங்களில், பல்வேறு காரணங்களுக்காக, கல்யாணமான ஆண்கள், பெண்களுடன் பேசிப் பழக வேண்டிய சூழ்நிலை காலத்தின் கட்டாயமாக உள்ளது. அது தவறு இல்லை. ஆனால், இதை ஒரு சாக்காக வைத்து வாலாட்ட பார்ப்பதுதான் தவறு!
***
*வி.ஹரிசங்கர், திருத்தணி: தாய்குலங்கள் எல்லாரும் உம்மை பிச்சு பிடுங்குவதைப் பார்த்தா, அவர்களுக்கு மட்டும் நீர், "மறைமுக' தரிசனம் கொடுக்கிறீர்களோ என்று சந்தேகப்படுகிறேன்!
உண்மைதான்... (அங்... நிறுத்துங்கள் உங்களது கற்பனைக் குதிரையை) நீங்கள் சொல்வது போலவே, "மறைமுக'மாக - (நேரடி அல்ல) பெண்களின் சுய கவுரவத்தையும், நியாயமான உரிமைகளையும் நிலை நாட்ட வாரமலர் இதழில் என் எழுத்து மூலம் தரிசனம் தருகிறேன்!                                    
***
**வே.முத்துக்குமரன், திண்டுக்கல்: சின்னத் தவறு செய்தாலும் கூட, அதை கொலை கேஸ் போல இழுக்கும் போலீஸ்காரர்களைப் பற்றி...
கடமையை செய்கின்றனர். அவர்களை நொந்து பயனில்லை! சட்டத்திற்கு புறம்பாக நடக்காமல் இருந்தால், இவர்களின் சங்காத்தமே ஏற்படாது. முடிந்தவரை போலீசிடம் சிக்காமல் இருப்பது நலம்!               
***

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement

 வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (2)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
thameem - singapore,இந்தியா
19-நவ-201019:05:14 IST Report Abuse
thameem how to send the Questions to அந்துமணி by mail. please give me the e-mail address
Rate this:
Cancel
Bertrand G. Russell - St.Johns,கனடா
14-நவ-201006:54:45 IST Report Abuse
Bertrand G. Russell It is true that there is some element of truth in what Mr. Rajaji was trying to do. However, it has many draw backs. One of the serious drawback is that it assumes that the future will follow the exact same pattern as the present and at best some of the past, meaning that the future requirements and life style of people, nation and world will be the same or at best will only be similar. We know that it is not so. After the electronic and information technology blow out, the world has changed dramatically. We all can understand that in addition to what is taught in schools, we have to learn more as well. After all, life is a continuous process of learning. While the story of the person using what he learnt from his father is good and understandable, we should also see the tens of thousands of people who have mastered the revolutions in electronic, information and technological sides. It is also true that there are people with degrees who are not properly employed. What could have been done is to encourage everyone to learn something more than what is taught in schools based on their apptitude, capabilities and their own understanding of the world. If what was suggested by Mr. Rajaji was followed we could not have had all these tens of thousnds of brainy people who are working in electronic, information, defence, space technologies. True there are problems with the present systems of education. Any man mande system will always have problems. Tell me an area where there is no problem, particularly in India. Corruption from top to bottom, and, practised only by "educated people". If Mr. Rajaji or anyone else for that matter was trying to putforward an educational system that will make the students science, languages, moral values, world issues that would be standing the test of times. We can write at length on this topic but I will stop at this.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Upload Photo
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X