கேள்வி - பதில்
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

03 ஆக
2015
00:00

கேள்வி: நான் பயன்படுத்தி வந்த வேர்ட் புரோகிராமில், இதுவரை காட்டப்பட்டு வந்த மினி டூல் பார் கிடைக்கவில்லை. கர்சரை பல இடங்களில் அசைத்துப் பார்த்தும் பெற முடியவில்லை. இது எதனால் ஏற்பட்டது என்றும் தெரியவில்லை. செட்டிங்ஸ் வழிகளிலும் பல முறை முயன்று பார்த்துவிட்டேன். உதவவும். டிப்ஸ் தரவும்.
ஆர். ஸ்நேகா ரஞ்சித், தாம்பரம்
பதில்:
நீங்கள் பயன்படுத்தும் வேர்ட் புரோகிராம் என்னவென்று (2007 /2010) என்று கூறவில்லை.
இரண்டிற்குமான வழிகளைத் தருகிறேன். இந்த மினி டூல் பார் தானாகவே வேர்ட் புரோகிராமில் தோன்றும். இதற்கான செட்டிங்ஸ் அமைப்பு தேவையில்லை. வேறு வழிகளில் முயலுகையில், நீங்கள் அதனை நிறுத்தும்படியான செட்டிங்ஸ் அமைத்துவிட்டீர்கள் என்று நினைக்கிறேன். அல்லது உங்கள் கம்ப்யூட்டரைப் பயன்படுத்திய ஒருவர் நிறுத்தி இருக்கலாம். இருப்பினும் சரி செய்திட டிப்ஸ் தருகிறேன்.
நீங்கள் பயன்படுத்துவது வேர்ட் 2007 எனில், கீழ்க்கண்டவாறு செயல்படவும்.
1. Office பட்டன் கிளிக் செய்திடவும்.
2. Word Optionsகிளிக் செய்க.
3. இடது பக்கம் உள்ள பிரிவில் Popular என்பதில் கிளிக் செய்திடுக.
4. இங்கு கிடைக்கும் பிரிவில் Show Mini Toolbar என்பதில் உள்ள டிக் அடையாளத்தை எடுத்துவிடவும்.
5. பின் ஓகே கிளிக் செய்து வெளியேறவும்.
நீங்கள் பயன்படுத்துவது ஆபீஸ் 2010 தொகுப்பு எனில், கீழே தரப்பட்டுள்ள வழிகளை மேற்கொள்ளவும்.
1. File டேப்பில் கிளிக் செய்திடவும்.
2. இடது பக்கம் உள்ள பிரிவில் Help என்பதன் கீழாக உள்ள Options என்பதில் கிளிக் செய்திடவும்.
3. இங்கு General என்பதில் கிளிக் செய்திடுக.
4. இங்கு User Interface Options என்ற பிரிவில், Selection என்ற தலைப்பில், Mini Tool Bar
என்பதில் உள்ள டிக் அடையாளத்தை எடுத்துவிடவும்.
5. பின் ஓகே கிளிக் செய்து வெளியேறவும்.

கேள்வி: நான் கடந்த ஓராண்டாக ஜிமெயில் அக்கவுண்ட் ஏற்படுத்தி பயன்படுத்தி வருகிறேன். என் நண்பர்கள் பலரும் என்னுடன் தொடர்பு கொள்ள இதனையே பயன்படுத்துகின்றனர். இதற்கு முன் யாஹூ தளத்தில் அக்கவுண்ட் வைத்திருந்தேன். சில வேளைகளில், நண்பர்கள் அத்தள அக்கவுண்ட்டிற்கு கடிதம் அனுப்புகின்றனர். இதனை எப்படி நிரந்தரமாக மூடுவது எனத் தெரியவில்லை. அதற்கான செட்டிங்ஸ் மற்றும் வழிகளைக் கூறவும்.
இரா. தமிழ்ச் செல்வி, சேலம்.
பதில்:
மிக எளிதுதான். கீழ்க்காணும் வழிமுறைகளைப் பின்பற்றவும்.
1. யாஹூ தளத்தில் உள்ள மின் அஞ்சல் கணக்கினை நீக்க https://edit.yahoo.com/config/delete_user என்ற முகவரியில் உள்ள தளம் செல்லவும்.
2. உங்களின் யாஹூ யூசர் நேம் மற்றும் பாஸ்வேர்டினை ஞாபகத்தில் வைத்திருப்பீர்கள் என்று நினைக்கிறேன். அவற்றுடன், உங்களுக்கான தனி நபர் தகவல்களையும் அளித்து, நீக்க விரும்புவதனை confirm என்ற பட்டனை அழுத்துவதன் மூலம் உறுதிப்படுத்தவும்.
3. 90 நாட்களில் உங்கள் அக்கவுண்ட் முழுமையாக நீக்கப்படும். பின்னர், நீங்கள் விரும்பினாலும், அக்கவுண்ட் கிடைக்காது.
உங்கள் நண்பர்கள் அனைவருக்கும் மொத்தமாக முகவரி மாற்றியது குறித்து அறிவித்துவிடவும்.

கேள்வி: கட்டணம் செலுத்திப் பெற்ற விண்டோஸ் 7 ஆப்பரேட்டிங் சிஸ்டத்தினை என் கம்ப்யூட்டரில் கடந்த இரண்டு ஆண்டுகளாகப் பயன்படுத்தி வருகிறேன். ஆனால், எனக்கு, விண்டோஸ் 10 சிஸ்டம் பெறுவதற்கான ஐகான், டாஸ்க் பாரில் கிடைக்கவில்லை. இதற்கான காரணம் என்ன? இதனைப் பெற என்ன செட்டிங்ஸ் அமைக்க வேண்டும்?
எஸ். ஜெயச்சந்திரன், திருப்பூர்.
பதில்
: உங்கள் கம்ப்யூட்டரில் இன்றைய தினம் வரை மைக்ரோசாப்ட் வழங்கிய சிஸ்டம் அப்கிரேட் பைல்களை டவுண்லோட் செய்து இன்ஸ்டால் செய்யாமல் நீங்கள் விட்டிருப்பீர்கள். முதலில் உங்கள் கம்ப்யூட்டரில் SP 1 என்ற விண்டோஸ் 7க்கான பேக்கப் பைல்கள் இணைக்கப்பட்டு இன்ஸ்டால் செய்யப்பட்டதனை உறுதி செய்து கொள்ளவும். அல்லது விண்டோஸ் அப்டேட் சென்று, இதனைப் பெற்று இன்ஸ்டால் செய்திடவும். அத்துடன், மைக்ரோசாப்ட் தந்திருக்கும் அனைத்து அப்டேட் பைல்களும் இன்ஸ்டால் செய்திருக்கப்பட வேண்டும். இவை இன்ஸ்டால் செய்யப்பட்டால், தானாக விண்டோஸ் 10 ஐகான் டாஸ்க் பாரில் கிடைக்கும். இதே போல, விண்டோஸ் 8 வைத்திருப்பவர்கள், அதனை விண்டோஸ் 8.1க்கு அப்கிரேட் செய்திருக்க வேண்டும். அத்துடன் சார்ந்த பைல்களையும் அப்கிரேட் செய்து வைத்திருக்க வேண்டும். விண்டோஸ் 10 உடனடியாக அனைவருக்கும் தரப்பட போவதில்லை. எனவே பொறுமையாக, உங்கள் கம்ப்யூட்ட்டர் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தினை அப்டேட் செய்து காத்திருக்கவும்.

கேள்வி: விண்டோஸ் 10 ஆப்பரேட்டிங் சிஸ்டம் வர உள்ளது. இந்த நாளுக்குப் பின் நான் வாங்கும் கம்ப்யூட்டர் அல்லது டேப்ளட் பி.சி.க்களை, விண்டோஸ் 10க்கு அப்கிரேட் செய்திட முடியுமா?
என். சம்பத் ராஜா, சிதம்பரம்.
பதில்:
நீங்கள் வாங்கும் விண்டோஸ் 8 அல்லது விண்டோஸ் 8.1 சிஸ்டத்தினை, இலவசமாக விண்டோஸ் 10 ஆப்பரேட்டிங் சிஸ்டமாக அப்கிரேட் செய்து கொள்ளலாம். விண்டோஸ் இயக்க பெர்சனல் கம்ப்யூட்டர்கள், டேப்ளட் பி.சி.க்கள் மற்றும் விண்டோஸ் போன்கள் ஆகிய அனைத்தும் இலவசமாக அப்கிரேட் செய்திட உரிமை உள்ளவையாகும். நீங்கள் மைக்ரோசாப்ட் ஸ்டோரில் எந்த ஒரு விண்டோஸ் சாதனத்தைப் பார்த்தாலும், அதில், சிறிய குறிப்பு ஒன்றைப் பார்க்கலாம். அதில், இப்போது இதனை வாங்கிக் கொள்ளுங்கள். பின்னர், விண்டோஸ் 10க்கு அப்கிரேட் செய்து கொள்ளுங்கள் என்று உறுதி தரப்பட்டிருக்கும். இதே போல, டேப்ளட் பி.சி. மற்றும் விண்டோஸ் போன்களையும் இலவசமாக அப்கிரேட் செய்திட முடியும்.
ஆனால், விண்டோஸ் ஆர்.டி. இயங்கும் டேப்ளட் பி.சி.க்கள், விண்டோஸ் 10 சிஸ்டம் அப்கிரேட் செய்வதற்குத் தகுதியானவை அல்ல என்று மைக்ரோசாப்ட் அறிவித்துள்ளது.

கேள்வி: குரோம் பிரவுசரை என் இன்டர்நெட் தேடலுக்குப் பயன்படுத்துகிறேன். ஒரே நேரத்தில், பத்துக்கும் மேற்பட்ட டேப்களில், பல தளங்களைத் திறந்து பயன்படுத்துவேன். சில வேளைகளில், டேப் ஒன்றினை கிளிக் செய்து மூடுவதற்குப் பதிலாக, விண்டோவினையே மூடிவிடுகிறேன். மீண்டும் திறக்கையில், புதியதாகத்தான் உள்ளது. நான் முன்பு திறந்து பயன்படுத்திய தளங்களுடன் டேப்களைப் பெற வழி உள்ளதா? இருப்பின், அவற்றை எப்படி பெற முடியும் என்பதை விளக்கமாகத் தரவும். நன்றி.
என். சரண்யா, தேவகோட்டை.
பதில்
: இதற்கான வழியை குரோம் பிரவுசர் கொண்டுள்ளது, சரண்யா.. புதியதாக குரோம் பிரவுசரைத் திறந்தவுடன், அதில் உள்ள நியூ டேப்பில், வலது கிளிக் செய்திடவும். அங்கு கிடைக்கும் கீழ்விரி மெனுவில், reopen closed window என்ற ஒரு பிரிவு இருக்கும். இதில் கிளிக் செய்தால், நீங்கள் திறந்து பயன்படுத்திய அனைத்து தளங்களும், அவற்றிற்கான டேப்களுடன் கிடைக்கும்.

கேள்வி: புதியதாக ஒரு லேப்டாப் வாங்கினேன். அதில் காண்டெக்ஸ்ட் மெனு கீ தரப்படவில்லை. என் பெர்சனல் கம்ப்யூட்டரில் இணைக்கப்பட்டுள்ள கீ போர்டில் (டி.வி.எஸ். கோல்ட்) அது உள்ளது. அதில் பழகிவிட்டதால், லேப்டாப்பில் இல்லாதது குறையாக உள்ளது. இதனை நிவர்த்தி செய்திடும் வகையில், கீ எதையேனும் மாற்றி அமைக்க செட்டிங்ஸ் உள்ளதா?
எம். சீத்தாராமன், கும்பகோணம்.
பதில்:
ஒரு சில கீ போர்ட்களில், கீகளைக் குறைத்து வடிவமைக்கையில், பலியாகும் கீகளில் ஒன்று இந்த காண்டெக்ஸ்ட் மெனு கீ. கீ போர்ட் மேப்பில் சென்று, அதற்கான பைலைத் திருத்தி, வேறு ஒரு கீயை இதற்குப் பதிலாக அமைக்கலாம். ஆனால், அந்த செயல்பாட்டினை மேற்கொள்ள வேண்டாம். அதற்குப் பதிலாக, Shift + F10 கீகளை இயக்குங்கள். காண்டெக்ஸ்ட் மெனு கிடைக்கும். இதனை நீங்கள் விண்டோஸ் சிஸ்டத்தில் இயங்கும் எந்த கீ போர்டிலும் இயக்கலாம். ஆனால், குரோம் பிரவுசரில் இது இயங்காது. கர்சர் இருக்கும் இடத்திற்கேற்ப வேறு விளைவுகளைத் தரும்.

கேள்வி: நான் தயாரிக்கும் டாகுமெண்ட்களில், இணைய தள முகவரிகளை அதிகம் இணைக்கிறேன். கட்டுரைகளில் இவை இடம் பெற வேண்டியதுள்ளது. இதில் பிரச்னை என்னவென்றால், ஸ்பெல் செக் டூல், இவற்றில் பலவற்றில் பிழைகள் இருப்பதாகச் சுட்டிக் காட்டிக் கொண்டுள்ளது. இதனால், டாகுமெண்ட்களைக் கையாள்கையில், அதிக நேரம் எடுக்கிறது. இதனை எப்படித் தடுக்கலாம்?
எஸ். ஜெயப்பிரியா, புதுச்சேரி.
பதில்:
இணைய முகவரிகளை, ஸ்பெல்லிங் செக் டூல் சோதனையிடாமல் செட்டிங்ஸ் அமைத்துவிடலாம். அதற்கு கீழே கொடுத்துள்ளபடி செயல்படவும்.
1. முதலில் வேர்ட் ஆப்ஷன்ஸ் டயலாக் பாக்ஸைத் திறக்கவும்.
2. இந்த டயலாக் பாக்ஸின் இடது பக்கம் உள்ள Proofing என்பதனைத் தேர்ந்தெடுத்து கிளிக் செய்திடவும்.
3. இங்கு Ignore Internet and File Addresses என்பதன் அருகே உள்ள செக் பாக்ஸில் டிக் அடையாளம் ஒன்றை ஏற்படுத்தவும். பின் ஓகே கிளிக் செய்து வெளியேறவும். இனி இணைய முகவரிகள், ஸ்பெல்லிங் சோதனைக்கு உள்ளாகாது.

கேள்வி: வேர்ட் மற்றும் எக்ஸெல் புரோகிராம்களை நான் தினந்தோறும் தொடர்ந்து பயன்படுத்திக் கொண்டு வருகிறேன். இவற்றை ஸ்டார்ட் மெனு தேடி இயக்காமல், டெஸ்க்டாப் திரையில் ஷார்ட் கட் உருவாக்கி, இயக்கும் வகையில் செய்திட முடியுமா? விண்டோஸ் எக்ஸ்பி சிஸ்டத்தில் இதனை எளிதாக உருவாக்கி பயன்படுத்தினேன். விண்டோஸ் 7ல் எப்படி அமைப்பது என டிப்ஸ் கொடுக்கவும்.
என். கைலாசம், மதுரை.
பதில்:
விண்டோஸ் 7 சிஸ்டத்தில் இதற்கெனப் பல வழிகள் உள்ளனவே. நீங்கள் அடிக்கடி பயன்படுத்தும் புரோகிராம்களுக்கான ஷார்ட் கட் வழிகளை, ஸ்டார்ட் மெனு, டாஸ்க் பார், டெஸ்க் டாப் திரை ஆகியவற்றில் வைத்துக் கொள்ளலாம். வைத்து இயக்க வேண்டிய புரோகிராமினை முதலில் எங்கு உள்ளது எனக் காணவும். அதன் பெயரில், ரைட் கிளிக் செய்திடவும். கிடைக்கும் மெனுவில், டாஸ்க் பார் மற்றும் ஸ்டார்ட் மெனுவில் 'பின்' செய்து வைத்துக் கொள்ள ஆப்ஷன்ஸ் தரப்படும். உங்களுக்குத் தேவையானதைத் தேர்ந்தெடுத்து அமைத்துக் கொள்ளலாம். டெஸ்க்டாப்பில் இதன் ஷார்ட் கட் வழி கிடைக்கும். பின்னர், இந்த புரோகிராமினை இயக்க எண்ணுகையில், இதில் கிளிக் செய்தால் போதும். புரோகிராம் இயங்கத் தொடங்கும்.

கேள்வி: வர இருக்கும் விண்டோஸ் 10 ஆப்பரேட்டிங் சிஸ்டத்தினை என் கம்ப்யூட்டரில் பதிந்த பின்னர், எனக்கு அது பிடிக்கவில்லை என்றால், மீண்டும் விண்டோஸ் 7 அல்லது 8 சிஸ்டத்திற்குச் செல்ல முடியுமா?
என். சுகப்பிரியா, நெய்வேலி.
பதில்
: தற்போதைக்கு அதற்கு வாய்ப்பு இருப்பதாகத் தெரியவில்லை.

Advertisement

 Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X