திண்ணை - நடுத்தெரு நாராயணன்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar advertisement tariff
 
Advertisement
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

14 நவ
2010
00:00

தி.மு.க., ஆட்சிக்கு வரும் முன், காங்கிரசை எதிர்த்து சந்தித்த பொதுத் தேர்தல் அது. போராட்டத்தில், துப்பாக்கிச் சூட்டிற்கு ஆளாகி இறந்த ஒரு தோழரின் விதவை மனைவி, "கூலி உயர்வு கேட்டான் அத்தான்; குண்டடிபட்டு செத்தான்...' என்று அழுவது போல, பல நூறு சுவரொட்டிகள் ஒட்டப்பட்டன.
தி.மு.க.,வை எதிர்த்து பிரசாரம் செய்தார் ஈ.வெ.ரா., ஒரு கூட்டத்தில், "பிரச்னைக்கு வழி சொல்லாமல், அரசாங் கம் தாலியை அறுத்து விட்டது என்று சொல்லுகிறாயே... அண்ணாதுரை ஆட்சிக்கு வந்தால், மறு தாலி போடு வாயா?' என்று கடுமையாகக் கேட்டார்.

வேறெங்கும் இந்தப் பிரச்னைக்குப் பதில் சொல்லாத அண்ணாதுரை, பிரமாண்ட மான ஈரோடு கூட்டத்தில் பதில் சொன்னார்...
"மறு தாலி போடுவாயா என் கிறார், என் தலைவர் ஈ.வெ.ரா.,  மறு தாலி போட மாட்டான் அண்ணாதுரை; அப்படியே போட்டாலும், என்னுடைய தலைவர், ஈ.வெ.ரா.,வைப் போல், அவரசப்பட்டு போட மாட்டான்...' என்றார்.
அண்ணாதுரையின் பதிலைப் படித்த ஈ.வெ.ரா., கொஞ்ச நேரம் அமைதியாக இருந்துவிட்டு, பிறகு லேசாகக் சிரித்தார். "உம்... அது ஆத்திரத்தில் எடுத்த அவசர முடிவு...' என்றார். தன் இரண்டாவது திருமணத்தைக் குறிப்பிட்டு!
— திருச்சி செல்வேந்திரன் எழுதிய,
" ஈ.வெ.ரா., கலைஞருடன் கார் பயணங்களில்' நூலிலிருந்து...
பாண்டியருக்கு மீன் கொடி, சோழருக்கு புலிக் கொடி, சேரனுக்கு வில் கொடி. அதுபோல், ஐதராபாத் சமஸ்தான மன்னர் நிஜாமுக்கு, "ரொட்டிக் கொடி' என்பது உங்களுக்கு தெரியுமா? "காம்ருதீன் கான்' என்ற பெயர் கொண்ட நிஜாம், தன் கொடியின் நடுவே, வெந்தும், வேகாத ரொட்டியை சின்னமாக அமைத்தார்.
இது, முதலாம் நிஜாமின் வாழ்க்கையில் நடந்த ஒரு நிகழ்ச்சியைக் குறிக்கிறது. ஐதராபாத்தின் மேற்கே, 480 கி.மீ., தொலைவில் உள்ள அவுரங்காபாத் நகரின் வெளியே, ஒரு சூபி மகான் இருந்தார். அவர் ஒருமுறை, காம்ருதீனுக்கு சப்பாத்தி ரொட்டிகளைத் தந்தார். குளிர் மிகுந்த அந்தப் பனிக் காலத்தில், அவரால் ஏழு ரொட்டிகளை மட்டுமே உண்ண முடிந்தது.
மேலும், சில ரொட்டிகளை உண்ணுமாறு, காம்ருதீனை (முதல் நிஜாமை) வற்புறுத்தினார் அந்த ஞானி. அவர் மறுத்து விடவே, அந்த ஞானி தீர்க்க தரிசனமாக, "ஐதராபாத்தின் முதல் நிஜாமான காம்ருதீன் வம்சத்தில், ஏழு மன்னர்கள் மட்டுமே இருக்குமாறு விதிக்கப்பட்டு விட்டது. அக்குடியில், ஏழு மன்னர்களுக்கு மேல் இருக்க முடியாது...' என்றாராம்.
இது மெய்யோ, பொய்யோ தெரியவில்லை. இக்குடியின் கடைசி மன்னரான நிஜாம், ஏழாமவர். இவர்தான், இந்தியாவுடன் தன் அரசை இணைப்பதற்கு முதலில் மறுத்து, பின்னர் வல்லபாய் படேல் நடவடிக்கை எடுத்ததும், ஐதராபாத் சமஸ்தானத்தை இணைத்தார்.
— ப.சிவனடி எழுதிய, "இந்திய சரித்திரக் களஞ்சியம்' நூலிலிருந்து...
***

ஒருமுறை, அரசினரால் எழுதப் பட்ட பாட நூல்களைத் திருத்தி அமைக்க, கவிமணி தேசிக விநாயகம் பிள்ளையும், இன்னும் சில பெரியோர் களும், அவர்களுக்கு உதவியாக சிலரும் அமர்த்தப்பட்டிருந்தனர்.
ஒருநாள் அவர்கள் எடுத்துக் கொண்ட புத்தகத்தில், "கிளி' எனும் பாடம் வந்தது.  தலைப்பில் கிளியின் படமும் வரையப் பட்டிருந்தது. விநாயகம் பிள்ளை, எல்லா ரையும் புத்தகத்தை மூடும்படி செய்துவிட்டு, "கிளிக்கு விரல் முன்னே எத்தனை? பின்னே எத்தனை?' என்று கேட்டார்.
"முன்னே மூன்று விரல்; பின்னே ஒரு விரல்...' என்றனர் சில இளைஞர்கள். மற்றவர்களும், அதுவே சரி என்றனர். உடனே விநாயகம் பிள்ளை, எல்லாரையும் புத்தகத்தைத் திறந்து பார்க்கும்படி கூறினார். படத்தில் உள்ள கிளியும், முன்னே மூன்று விரல்களைக் காட்டிக் கொண்டு தான் இருந்தது. "இது பிழை; கிளிக்கு விரல் முன்புறம் இரண்டு. அதுபோல் பின்புறமும் இரண்டு உண்டு...' என்றதும், யாவரும் அதிசயித்தனர். விநாயகம் பிள்ளை அந்த அளவிற்கு கிளியின் கால் அமைப்பைக் கூட கவனித்து வைத்திருந்தார்.
***

"செப்பு மொழி பதினெட்டுடையாள்...' என்று, அன்னை பாரதத்தைப் போற்றிப் பாடினார் பாரதி. அந்தப் பதினெட்டு மொழிகள் எவை? அங்கம், அருணம், கலிங்கம், கவுசிகம், காம்போசம், கொங்கணம், கோசலம், சாவகம், சிங்களம், சிந்து, சீனம், சோனகம், திராவிடம், துளுவம், பப்பரம், மகதம், மராடம், வங்கம் ஆகியன. இதில், திராவிடம் என்பது தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய நான்கும் அடங்கும்.                                ***

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement

 



வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (2)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
திருச்சிக்காரன் - திருச்சி,இந்தியா
14-நவ-201009:38:47 IST Report Abuse
திருச்சிக்காரன் அது அன்றைய பிரிட்டிஷ் இந்தியாவில் இருந்த மொழிகள்.
Rate this:
Cancel
kalai - Auckland,நியூ சிலாந்து
14-நவ-201003:27:01 IST Report Abuse
kalai i like to read varamalar
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Upload Photo
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X