முப்பதை தாண்டாதீங்க...
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

05 ஆக
2015
00:00

முப்பது வயதிற்குள்ளேயே குழந்தை பெற்றுக் கொள்ள வேண்டும் என்பதற்கான காரணங்கள். இருபதுகளின் ஆரம்ப வயதில் தான் ஆண், பெண் இருவரும், 100 சதவீதம் குழந்தைப் பேறுக்கான உடல் மற்றும் மனத் தகுதிகளோடு இருக்கின்றனர். இந்த வயதில் ஒரு பெண்ணிற்கு, 10 லட்சத்தில் இருந்து 20 லட்சம் முட்டைகள் வரை கருவில் உருவாகிறது.
இருபதுகளின் கடைசிகளில், பெண்களுக்கு கருத்தரிப்பதற்கான உடல் வலிமை குறைய ஆரம்பித்துவிடும். ஆயினும் கருத்தரிக்க, 75 சதவீத வாய்ப்புகள் உள்ளன. ஏனெனில், ஆணின் விந்தணுவின் உற்பத்தியும் வேகமும் குறைவதில்லை. முப்பதுகளின் ஆரம்ப வயதில் இருந்து ஒவ்வொரு மாதவிடாய் காலத்திலும், பெண்களின் கருமுட்டைகளின் எண்ணிக்கை, ஆயிரக்கணக்கில் குறையத் துவங்கும். இதுதான் பெண்களுக்கு. 30 வயதில், குழந்தைப் பேறுக்கான வாய்ப்புகள் குறைய காரணம். இயல்பாகவே, 40 முதல் 45 வயதிற்குள், பெரும்பாலான பெண்களுக்கு மாதவிடாயே நின்று விடுகிறது. அப்படியே கருமுட்டை உருவாகினாலும், வலிமை குறைவாக தான் இருக்கும்.
அதேநேரம், ஆணின் விந்து உற்பத்தியும், வேகமும் குறைந்து விடும். அதனால் நாற்பதுகளில் குழந்தைப் பேறு என்பது மிகவும் சிரமம். 45 வயதிற்கு மேல், மிக சில பெண்களுக்கு மட்டுமே, குழந்தைப் பேறு வாய்க்கிறது. அதுவும், சிலருக்கு சரியான மருத்துவ சிகிச்சைகளின் மூலமாக கருத்தரிக்க செய்கின்றனர். கருமுட்டையின் வலுவின்மையும், மாதவிடாய் முடியும் தருவாய் என்பதாலும், கருத்தரிப்பில் சிரமம் ஏற்படுகிறது. மேலும், ஆணின் விறைப்பு தன்மை மற்றும் வேகம் மிகவும் குறைந்திருக்கும். இதனால், குழந்தைப் பேறு அடைவது மிக மிக குறைகிறது.

- சாந்தி,
மகப்பேறு மருத்துவர், சென்னை.
dr.shanthi60@gmail.com

Advertisement

 



வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (1)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
skv - Bangalore,இந்தியா
05-பிப்-201608:59:50 IST Report Abuse
skv<srinivasankrishnaveni> என்ன செய்றது பலருக்கும் திருமணங்களே தள்ளிபோறதே 30/36 வயதுக்குமே திருமணம் ஆகாமல் பொண்ணுக நிக்குறாங்க. பாவம் பொண்ணு சம்பாத்யம் தான் முக்கியம் நு தான் பெத்தா பசங்கள் மேலுக்கு வரனும்னு காத்துண்டுருக்கா, அன்று பொண்ணு வயசுக்குவந்துட்டா நாளே போன்னைபெத்தவா தவிப்பா , இன்று ஒரு பொண்ணு பெத்துப்பா அதுக்கும் காலாகாலத்துலே திருமணம் செய்யாமல் இழுத்தடிக்கரா . சம்பாதிக்கும் பொன்னால் மேலுக்குவந்த பிள்ளைகளோ இஷ்டத்துக்கு தாங்களே திருமணம் செய்துண்டு பரப்பாணுக பாரினுக்கு , தனக்கு பாதுகாப்பு இல்லேன்னு பொண்ணு க்கு திருமணமே செய்யாமல் இருக்கும் அப்பன்களும் உண்டு, அப்படியே அவ தானாவே பார்த்துன்டாலும் ஆயிரம் கொனஷ்டை சொல்லி நிருத்துவாணுக . நெரையபடிச்சுட்டுபொன்னுகலும் நிராகரிக்குராங்கள், அனேகமா பல பொண்ணுக குடிகாரன்களை ரிஜெக்ட் பண்ணுதுங்க அப்பனும் தந்நீர்கேசானால் சுத்தம் .ஹோச்டல் படிக்கும் பொண்ணுக சுயமாவாசவே விரும்புறாங்க ,விதௌட் எனி கண்ட்ரோல்பலன் லேட்மேறேஜ் அப்பறம் எல்லாமே தாமதம் சில சமத்துக்கள் பிள்ளையே பெத்துக்கமாட்டோம்னு வாழுதுங்க
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X