கேள்வி - பதில்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

05 ஆக
2015
00:00

எனக்கு வயது 30; தனியார் நிறுவனத்தில் பணிபுரிகிறேன். குறைவாகவே நடப்பேன்; எங்கு சென்றாலும் இருசக்கர வாகனம் தான். ஆனாலும் கால் பாதங்கள் வலிக்கின்றன. காரணம் என்ன?

பிரபாகர், அரக்கோணம்.
கால் பாதங்கள் வலிக்க காரணம், தைராய்டு பிரச்னை இருக்கலாம். தைராய்டு பிரச்னை இருந்தால், கால்கள் வலிக்கும்; உடல் சோர்வடையும். மேலும், பாதங்களிலுள்ள திசுக்கள் சேதமடைந்து இருந்தாலும், பாதங்கள் வலிக்க துவங்கும்.அதோடு, நீரிழிவு நோய்க்கான பரிசோதனை செய்து கொள்வதும் நல்லது. நீரிழிவு நோய் இருந்தாலும், கால் பாதங்கள் வலிக்கும். அல்லது ஊசி குத்துவது போன்ற உணர்வு இருக்கும்.
குதிகால் எலும்பிலிருந்து, 'பிளான்டர் அப்போனீரோசிஸ்' எனும் திசுக்கொத்து, கால் கட்டை விரலை நோக்கிச் செல்கிறது. குதிகால் எலும்பும் இந்தத் திசுக்கொத்தும் இணையும் இடத்தில், ஒருவித அழற்சி ஏற்பட்டு, வீக்கம் உண்டாகும். அதனாலும் குதிகால் வலி ஏற்படும்.
விவேகானந்தன், எலும்பு நிபுணர், சென்னை.

என் மகளுக்கு வயது 19; ஒல்லியாக இருக்கிறாள். அதற்கு என்ன காரணம்?
உமா மகேஷ்வரி, திருச்சி.
பொதுவாக, உடல்வாகு என்பது அவரவர் பரம்பரை தன்மையைப் பொறுத்தது. அப்பா, அம்மா ஒல்லியாக இருந்தால், அவர்களின் வாரிசுகளும் ஒல்லியாக இருக்க அதிக வாய்ப்புண்டு. ஆனால், அவர்களுக்கு, ஆரோக்கியத்தில் எந்தக் குறையும் இருக்காது. ஆகவே, அதற்காக கவலைப்பட அவசியமே இல்லை.சத்துக் குறைவால், உடல் ஒல்லியாக இருப்போர் தான் அதிகம். எனவே ஊட்டச்சத்துள்ள உணவுகளான பால், பழம், முட்டை, மீன், இறைச்சி போன்றவற்றை தினமும் கொடுத்து வந்தால் சத்துக் குறைவு நோய்கள், இவர்களை எளிதில் தாக்காது. போதிய ஊட்டச்சத்தில்லாமல் ஒல்லியாக இருப்போர், சத்தான உணவுகளை சாப்பிட்டால் ஆரோக்கியமானவர்களாக ஆகிவிடுவர்.
தில்லைநாதர், பொது மருத்துவர், திருநெல்வேலி.

துாக்க மாத்திரை சாப்பிடுவது நல்லதா?
சந்தோஷ், மயிலாப்பூர், சென்னை.
நன்றாகத் துாங்கி எழுவதற்கு, தினமும் துாக்க மாத்திரையைச் சாப்பிடும் பழக்கம் பலருக்கும் இருக்கிறது. ஆனால், அது ஒரு நிரந்தரத் தீர்வு அல்ல. மாத்திரையின் வீரியம் குறையக் குறைய, அதன் அளவை அதிகரிக்க வேண்டியிருக்கும். அதனால், உடலில் வேறு பல பாதிப்புகள் ஏற்படலாம். துாக்க மாத்திரையைச் சாப்பிட்டுப் பழகிவிட்டால், திடீரென அதை நிறுத்தவும் முடியாது. அப்படி நிறுத்தினால் துாக்கம் பாதிக்கப்படும்.
சுரேந்திரன், பொது மருத்துவர், சென்னை.

Advertisement

 



வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X