செய்முறை:
1. தரை விரிப்பில் நிமிர்ந்த நிலையில் படுக்கவும்.
2. இரண்டு கைகளையும் உடலோடு ஒட்டிய நிலையில், தரையில் உள்ளங்கை படுமாறு வைக்கவும்.
3. கைகளை அழுத்தியவாறு மூச்சை இழுத்துக் கொண்டே, இரண்டு கால்களையும் மேலே உயர்த்தவும்.
4. இரண்டு கைகளால் முதுகை பிடிக்கவும். பின், இரண்டு கால்களையும், தலைக்கு பின்னே மெதுவாக கொண்டு வந்து, தரையை தொடவும்.
5. கைகளை முதுகிற்கு பக்கவாட்டில் நேராக நீட்டவும்.
6. ஆழ்ந்த சுவாசத்தில் சிறிது நேரம் இருந்து, மெதுவாக சாதாரண நிலைக்கு வரவும்.
பயன்கள்:
1. மலச்சிக்கல், வாயுப்பிரச்னைகள், தைராய்டு பிரச்னைகளுக்கு நல்ல தீர்வாகிறது.
2. பெண்கள் மாதவிடாய் சம்பந்தப்பட்ட பிரச்னைகளிலிருந்து விடுபடலாம்.
3. முடி கொட்டுவது, நரை தடுக்கப்படுகிறது.
4. அஜீரணக் கோளாறு, பசியின்மை போன்றவற்றுக்கு சிறந்த ஆசனம்.
5. உடல் எடை குறையும்.
குறிப்பு:
முதுகு வலி, கழுத்து வலி உள்ளவர்கள், இந்த ஆசனத்தை தவிர்க்க வேண்டும்.
பொருள் : ஆசன நிலை, கலப்பை (ஹெலம்) போன்று இருப்பதால், இப்பெயர் பெற்றது.
- ரா.சுதாகர், திருமூலர் பிரபஞ்ச யோகா மையம், சென்னை. 9790911053