அன்புடன் அந்தரங்கம் - சகுந்தலா கோபிநாத்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar advertisement tariff
 
Advertisement
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

14 நவ
2010
00:00

அன்புள்ள தோழிக்கு —
 நான் படித்து முடித்து, ஒரு தனியார் கம்பெனியில், வேலை செய்யும்  இளைஞன். நான் ஓரினச் சேர்க்கையாளன். சிறு வயதில் இருந்தே, பெண்கள் மீது, எந்தவித ஈர்ப்பும் எனக்கு வரவில்லை; ஆண்கள் மீது தான் வந்தது.
என் நண்பர்கள் ஆபாச சிடி பார்த்தால், எனக்கு பிடிக்காது. ஏனென்றால், அதில் பெண்கள் தான் இருக் கின்றனர்; ஆண்களை காட்டுவதே இல்லை. அதனால், இணைய தளதிற்குச் சென்று, "கே' பற்றி தெரிந்து கொண்டேன்.

வாரம் ஒருமுறை, பிரவுசிங் சென்டருக்கு போய், "கே' வீடியோவைத் தான் பார்ப்பேன்... சாட்டிங்கிலும், ஆண்களுடன் தான் பேசுவேன்.
இதற்கும் ஒரு படி மேலே சென்று ஆண்களுடன் நான், 20 முறை இப்படிப்பட்ட உறவு வைத்திருக் கிறேன். ஆனால், நான் இப்படிப் பட்டவன் என்று, என் நண்பர்களுக்கும், வீட்டில் உள்ளவர்களுக்கும் தெரியாது. என்னைப்பற்றி அவர்கள் அறிந்து கொண்டால், நான் உயிரையே விட்டு விடுவேன்.
இப்போது, என் வீட்டில் எனக்கு பெண் பார்த்துக் கொண்டிருக்கின்றனர். எனக்கு திருமணமானால், என்னால் குற்ற உணர்வுடன் இருக்க முடியாது. மேலை நாடுகளில் எல்லாம் ஆண்கள், ஆண்களையே திருமணம் செய்து கொள்கின்றனர். ஏன்... பிள்ளையும் பெற்று கொள்கின்றனர். அந்த கலாசாரத்தை நம் மக்கள் ஏற்க விரும்புவதில்லை.
என்னை தோழனாக ஏற்று, எனக்கு பதில் கூறுங்கள்.
— இப்படிக்கு, உங்கள் தோழன்.
அன்புள்ள மகனுக்கு —
உன் கடிதம் கிடைத்தது. உன் வயது 28 இருக்கக் கூடும். எழுத்தர் பணி செய்கிறாய் என நம்புகிறேன். நீ ஒரு தனிமை  விரும்பி. உன்  கையெழுத்தில்,  பெண்மை தன்மை ஓங்கி நிற்கிறது. நீ ஓரினச் சேர்க்கையாளனாக இருப்பதற்கு, கீழ்க்கண்ட காரணிகளே காரணம் என நம்புகிறேன்:
1. ஓரினச் சேர்க்கையாளராக இருப்பது, மரபியல் குறைபாடு.
2. அம்மா இறந்து, கம்பீரமான அப்பா வளர்த்த பிள்ளையாக நீ இருக்கலாம் அல்லது அப்பா இறந்து சுயநலக்கார அம்மா வளர்த்த பிள்ளையாக இருக்கலாம் அல்லது நான்கைந்து அக்காக்களுடன் பிறந்த கடைக்குட்டி தம்பியாக இருக்கலாம் நீ. அவலட்சண பெண்களின் நிர்வாணத்தை, நீ சிறுவயதில் பார்த்து, பெண்களின் உடலை புரிந்து கொள்ளாது, அருவருப்படைந்திருக்கிறாய்.
3. ஓரினச்சேர்க்கை பற்றி அதிகம் பேசும், ஈடுபடும் தவறான நண்பர்கள் உனக்கு இருப்பர்.
4. உலகத்தின் மீது, சமூகத்தின் மீது ஒரு முட்டாள்தனமான கோபம் உனக்கு. குரங்கை, "குரங்கு' எனக் கூறாமல், "குங்ரகு' என கூறுவது. முன்னே நடக்காமல், பின்னுக்கு நடப்பது. மொத்தத்தில்... முரண்படுவது.
5. கடவுளை நம்பாத, அரைவேக்காட்டுதனமான, நாத்திகவாதியாக நீ இருக்கக் கூடும். உலகின் எந்த மதமும், ஓரினச்சேர்க்கையை சரி என ஏற்றுக் கொள்வதில்லை.
6. தவறான விஞ்ஞான மனோபாவம், தனக்கு எல்லாம் தெரியும் என்ற ஆணவத்தை கொடுத்து விடும்.
7. சித்தியின் கொடுமையால், பாதிக்கப்பட்ட முதல் தாரத்து பையனாக இருக்கலாம் நீ.
8. நீ ஒரு சாகச விரும்பி மற்றும் கலகக்காரன்.
ஓரினச் சேர்க்கையாளர்களை, எனக்கு அறவே பிடிக்காது. இயற்கையுடன் ஒட்டி வாழவே, நாம் படைக்கப்பட்டுள்ளோம்.
ஆண் - பெண் உறவு, மனித இனத்தை அடுத்த தலைமுறைக்கு, தொடரச் செய்யும் ரிலே ரேஸ். ஆண் - பெண் உறவு கலவி நோக்கத்துக்காக மட்டுமல்ல. சமூகவியல் அடிப்படையில் பார்த்தால், குடும்ப அமைப்பு ஒரு சமுதாயத்தின் அடிப்படை அலகு. காலம் காலமாக, மனிதன் உணவை வாய் வழியாக உட்கொள்கிறான். ஒரு  மாற்றத்துக்காக வேறோரு உறுப்பால், உணவை உட்கொள்ள முடியுமா? முடியாது. 1:1 விகிதத்தில் தான், ஆண் - பெண் குழந்தைகள் பிறக்கின்றன.
ஒருவனுக்கு ஒருத்தி என்பதுதான், இறைவனின் எழுதப்படாத விதி. பெண் என்பவள் மலர், ஆண் என்பவன் வண்டு. வண்டு - மலரில் தேன் குடிக்கும். மலர் - வண்டில் தேன் குடிக்க முடியுமா அல்லது ஒரு வண்டு, இன்னொரு வண்டியிடம் தேன் குடிக்க முடியுமா?
ஆண், பெண் உறவு பிரிவை வைத்துதான், உலகின் அனைத்து படைப்பிலக்கியங்களும், கவிதைகளும் மற்றும் நுண்கலைகளும் செழித்தோங்குகின்றன.
கடிதத்தில், ஆண் - ஆணை மணந்து, குழந்தை பெற்றுக் கொள்வதாய் எழுதியிருக்கிறாய். ஆணும், ஆணும் இணைந்து குழந்தை பெற்றுக் கொள்வது விஞ்ஞான சாத்தியமில்லை.
வேண்டுமானால், தத்து எடுத்துக் கொள்ளலாம். ஓரினச் சேர்க்கையாளர்களின் தத்து குழந்தைகள் எதிர்காலத்தில், மனநோயாளிகளாக, கிரிமினல் குற்றவாளிகளாக மாறுவர்.
உன் வாழ்க்கை சிறக்க ஒரு யோசனை சொல்கிறேன்... கேட்பாயா மகனே?
பெண்களைப், பார்த்தால், கலவியல் கவர்ச்சி வருவதில்லை என கூறியிருந்தாய்; அது ஒரு மாயை. கண்ணாடியில் படிந்துள்ள புகையை துடைத்துவிட்டு பார்; காட்சி தெளிவாகும். கூடாத நண்பர்களுடன், இணையதளத்தில் மேயாதே. ஆன்மிக பாதையில் கவனத்தை திருப்பு.
உனக்கு பெண் பார்த்தால்,  தடை போடாதே; பார்க்கட்டும். நடிகை தபு போல், ஆண்மைத்தனம் வழியும் மணப்பெண்ணை தேர்ந்தெடு.
எனக்கு தெரிந்த பல ஓரினச் சேர்க்கையாளர்கள் முறையான திருமணம் செய்து, மரபு வழி திரும்பி, மகிழ்ச்சியாக இருக்கின்றனர். நீயும் ஒற்றையடி காட்டுபாதை தவிர்த்து, மரபு வழி சேர்.
ஓரினச் சேர்க்கை, "எய்ட்ஸ்'  நோயை பரிசளிக்கிறது. எய்ட்ஸ் நோயாளியாக உழல உனக்கு ஆசையா?
பெண்களின் மேன்மையை போற்றும் இலக்கியங்களை வாசி. வாழ்க்கையில் பல மோசமான பெண்களை சந்தித்திருந்தால், எத்தனையோ நல்ல பெண்களிடமிருந்து, இந்த கெட்டவர்களை கழித்து விடு.
திருமணம் செய்து, மனைவி மகள்களுடன் அமோகமாய் இரு!
— என்றென்றும் தாய்மையுடன்,  சகுந்தலா கோபிநாத்

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement

 வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (36)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
RAJA - UAE,இந்தியா
22-மார்ச்-201215:17:41 IST Report Abuse
RAJA தயவு செய்து இதிலிருந்து மீள நல்ல கவுன்சலிங் தாருங்கள் எங்களை போன்றவர்களுக்கு !
Rate this:
Cancel
Shemalejasmin - hyderbad,இந்தியா
23-நவ-201021:51:09 IST Report Abuse
Shemalejasmin Side Effectts of Legalizing GAYSEX Will Destroy Social Fabric in INDIA ?
Rate this:
Cancel
சீனு ஈரோடு - ஈரோடு.,இந்தியா
20-நவ-201018:32:51 IST Report Abuse
சீனு ஈரோடு முட்டாள்களே! கோவிலில் உள்ள சிலைகள் எதை காட்டுகிறது? மனித வாழ்வின் இயற்கையான வாழ்வியல் நெறிகளைதானே. இதுதான் ஆன்மீகம். இந்த அன்மீகம்தான் அறிவு. தொன்மையான பாரத பண்பாட்டில் உள்ளவர்களுக்கு இதுதான் வாழ்வியல் நெறியாகும். 2000 ஆண்டு வரலாறு உள்ளவர்களுக்கு கண்டதே காட்சி. கொண்டதே கோலம்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Upload Photo
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X