இதப்படிங்க முதல்ல....
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar advertisement tariff
 
Advertisement
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

14 நவ
2010
00:00

சிம்பு பின்பற்றும்  ஆங்கில பாணி!
கவுதம் மேனனின், விண்ணைத் தாண்டி வருவாயா படத்தில் நடித்த பிறகு, தன் ஒவ்வொரு படங்களும் ஸ்டைலிஷாக இருக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறார் சிம்பு. அதற்காக, தன்னிடம் கதை சொல்ல வரும் டைரக்டர்களிடம், சில ஆங்கில படங்களை மேற்கோள் காட்டி, அந்த பாணியில் படமாக்குமாறு கேட்டுக் கொள்கிறார்.

அபிநயா பயிற்சி!
நாடோடிகள் படத்தில் நடித்த, வாய் பேசாத பெண்ணான அபிநயா, அந்தப் படத்தில் நடித்தபோதே, சசிகுமார் இயக்கவிருந்த ஈசன் படத்தின் அக்ரிமென்டில் இருந்தார். ஆனால், இப்போது அப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து விட்டதால், புதிய படங்களில் நடிக்கத் தயாராகி வருகிறார். மேலும், வாய் பேச முடியாது என்ற போதும், வார்த்தைக்கு தகுந்த உதடு அசைவுகள் கொடுக்கவும் பயிற்சி எடுத்து வருகிறார்.     — எலீசா.

அசின் நம்பிக்கை!
"லண்டன் ட்ரீம்ஸ்' இந்திப் படம் தோல்வியடைந்து, அசினின் வெற்றிக் கனவை கலைத்த போதிலும், அதே சல்மான் கானுடன் தற்போது நடித்து வரும், ரெடி படத்தை ரொம்பவே எதிர்பார்க்கிறார். இந்தப் படம் கட்டாயம் வெற்றி பெறும் என்று அடித்து கூறும் அசின், அதன் பிறகே புதிய இந்திப் படங்களில் கமிட்டாகும் முடிவில் உள்ளார். நினைத்தது இருக்க, நினையாதது எய்தும்; நினைத்தது வந்தாலும் வந்து சேரும்.     — எலீசா.

த்ரிஷாவுக்கு செக்யூரிட்டி!
ஆக்ஷன் பட ஹீரோக்கள் மாதிரி, காரில் பறப்பதென்றால் த்ரிஷாவுக்கு ரொம்ப பிடிக்கும். அதனால், படப்பிடிப்பு இல்லாமல் ஓய்ந்திருக்கும் நாட்களில், சென்னை ஈ.சி.ஆரில்,  தோழிகளுடன் தானே கார் ஓட்டி, ஜாலியாக பொழுதை கழிக்கிறார். என்றாலும்,  மகள் கண்மூடித்தனமாக டிரைவ் செய்து, விபரீதம் விளைவித்து விடக் கூடாது என்பதற்காக, அவரை கண்காணிக்க சில செக்யூரிட்டிகளை இன்னொரு காரில் அனுப்புகிறார் அவரது தாய்குலம். ஆலே பாலே என்று அலம்பிக் கொண்டிருக்கிறது!                                       — எலீசா.

ஜெனிலியாவுக்கு அலர்ஜி!
நடிகை தமன்னாவுக்கு நடனம் ஆடுவதென்றால் அல்வா சாப்பிடுகிற மாதிரி; ஆனால், நடிகை ஜெனிலியாவுக்கோ நடனம் என்றாலே அலர்ஜி. அதனால், தன்னைத் தேடி வரும் படங்களில் கூடுதலான நடன அசைவுகள் உள்ளவற்றை வெளிப்படையாக தவிர்க்காமல், அதே தேதியில் வேறு படம் உள்ளதாகச் சொல்லி தவிர்த்து விடுகிறார். தனக்கு எளிய சம்பந்தம்; விரலுக்குத் தகுந்த வீக்கம்!                                    — எலீசா.

தமிழில் நாட்டமில்லாத  ஓவியா!
நடிகை ஓவியா, தற்போது, தமிழில் நடித்து வரும் மூன்று படங்களிலுமே, பல நாயகிகளில் ஒருவராகத்தான் நடித்து வருகிறார். அதனால், தமிழ் சினிமா மீது நாட்டமில்லாத ஓவியா, கன்னடத்தில் கூடுதல் கவனம் செலுத்தி வருகிறார். தொடர்ந்து தெலுங்கில் கால் பதிக்கவும் கல்லெறிந்து வருகிறார். இட்டாருக்கு இட்ட பலன்! — எலீசா.

ஹரியின் புதிய பாணி!
"சிங்கம்' படத்தை இயக்கிய ஹரி, அடுத்தப் படத்தில் தனுஷ் - தமன்னாவை ஜோடி சேர்க்கிறார். தன் பெரும்பாலான படங்களில், அருவா சண்டைக் காட்சிகளை புகுத்தி, அருவா இயக்குனர் என்று பெயர் பெற்ற ஹரி, இப்படத்தை முற்றிலும் புதிய பாணியில் இயக்குகிறார். ஆனாலும், இப்படமும் அவரது வழக்கமான கமர்ஷியல் படையல் தான் என்கிறார். — சினிமா பொன்னையா.
 

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement

 



வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (1)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
சேட் ரசூல் - vellore,இந்தியா
14-நவ-201006:35:34 IST Report Abuse
சேட் ரசூல் எச்செல்லேன்ட் நியூஸ் லோட் ஒப் தேங்க்ஸ் டு dinamalar
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Upload Photo
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X