அன்புடன் அந்தரங்கம்!
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar advertisement tariff
 
Advertisement
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

09 ஆக
2015
00:00

அன்புள்ள அம்மா —
என் வயது 27; என் கணவரின் வயதும், 27. தனியார் நிறுவனத்தில் பணிபுரிகிறார். சமீபத்தில் தான், எங்களுக்கு திருமணம் நடந்தது. திருமணம் ஆன புதிதில், என் கணவரின் பாக்கெட்டில், ஒரு கடிதம் பார்த்தேன். அதில், என் கணவரின் பெயர் போட்டு, 'நீயும் தப்பு செய்யல; நானும் செய்யல. சாமி தான் தப்பு செய்துடுச்சு. நான் உனக்கு வேணாம்; உங்க வீட்ல பாக்குற பொண்னை, கல்யாணம் செய்துக்க. உன் கூட, 'பஸ்ட் இயர்'ல சந்தோஷமா இருந்தேன். உங்க அப்பா நல்ல மனுஷன். நம் விஷயம் அவருக்கு தெரிய வேணாம்; மனசு கஷ்டப்படுவார். உங்க அக்கா ரெண்டு பேரும் சொல்றத கேளு. நீ என்ன காதலிக்கும் போது, என்ன ஜாதின்னு கேக்கல; நானும் சொல்லல. நான் வேற ஜாதி. இத உன்கிட்ட சொல்லாம மறைச்சதுக்கு மன்னிச்சிடு. உங்க அக்கா என்கிட்ட போன்ல பேசும் போது, உங்களோட வசதியப்பத்தி பேசினாங்க. அது, இன்னும் என் காதுல ஒலிச்சுக்கிட்டே இருக்கு. உனக்காக, நான், என் வீட்டை விட்டு வருவேன். ஆனா, நீ வர மாட்டேன்னு எனக்கு தெரியும். எனக்காக உங்க வீட்ல யார்கிட்டயும் சண்டை போட வேணாம்....' என்று எழுதியிருந்தது.

இக்கடிதத்தை படித்ததும், என் கணவரிடம் கேட்டேன். 'அது என்னோடது இல்ல; என் கூட வேலை செய்ற பையன் வைச்சிருந்தான். அதை, வாங்கி பார்த்தவன் திருப்பி தர மறந்துட்டேன்...' என்றார்.
அவர் பொய் சொல்கிறார் என்று தெரிந்தது. ஏனெனில், கடிதத்தில் அவருடைய அக்கா பெயர் இருந்தது. அதனால், 'இந்த லெட்டர் உங்களுக்கு தானே வந்தது; உங்களுக்கு பிடிக்காம கல்யாணம் செய்துக்க, நான் தான் கிடைச்சேனா?' என்று கேட்டேன். அதற்கு மறுத்து ஏதேதோ சொல்லி, என்னை சமாதானப்படுத்தினார்.
அதன்பின், மூன்று மாதம் சென்றதும், என் கணவரின் மொபைலை எதேச்சையாக பார்த்தேன். அதில், அவரின் பெயரோடு, அப்பெண்ணின் பெயர் சேர்த்து, ஒரு மெயில் வந்திருந்தது. 'இது யாரோடது'ன்னு கேட்டேன். 'தெரியாது...' என்றார். கோபத்தில் அவரை நன்றாக திட்டி விட்டேன்.
'எது கேட்டாலும் தெரியாதுன்னு எதுக்கு சொல்றீங்க... இனிமேல், எதுலயும், என் பேரோட சேர்த்து உங்க பேர எழுத மாட்டேன். நீங்க எனக்கு புடவை, பூ எதுவும் வாங்கி தர வேணாம். உங்க ரெண்டு பேருக்கும், காதலித்து ஊர் சுத்த தெரிஞ்சுது; கல்யாணம் செய்துக்க தெரியலயா... நீயும் புடிக்காம கல்யாணம் செய்துட்டு, எனக்கு ஒரு புள்ளய குடுப்ப. அவளும், புடிக்காம ஒருத்தன கல்யாணம் செய்துக்குட்டு, புள்ளய பெத்துக்குவா. உங்க ரெண்டு பேருக்கும் நானும், அவனும் ஏமாளியா தெரியுறோமா? வேணும்ன்னா அவள ரெண்டாம் தாரமா கல்யாணம் செய்துக்கோ; நான் ஏதும் கேக்க மாட்டேன்...' என்று கூறினேன். எதுவும் பேசாமல் அமைதியாக இருந்தார்.
அன்றிலிருந்து கடந்த, 10 மாதங்களாக தினமும் அவர் என்னிடம் பேசும் போதெல்லாம், இதை சொல்லி காட்டியபடியே இருந்தேன். ஆனால், அவரோ எதுவும் நடக்காதது போல, என்னுடன் இயல்பாக பழகினார். ஆபிசுக்கு போனால், இரு முறையாவது போன் செய்து விசாரிப்பார். நான் ஊருக்குச் சென்றிருந்தாலும், ஒரு நாளைக்கு மூன்று முறையாவது போன் செய்து விடுவார்.
என்னிடம் பாசமாக இருப்பார். வேறு எந்த பெண்ணிடமும் போனில் கூட பேசுவதில்லை. அது எனக்கு நன்றாக தெரியும். 'இப்படிப்பட்ட கணவரை எனக்கு தந்ததுக்கு நன்றி'ன்னு கடவுளுக்கு கூட நன்றி சொல்வேன். சாப்பிடும் போது எனக்கு ஒரு வாய் ஊட்டிய பின்பே அவர் சாப்பிடுவார். என் தோழிகள், 'எங்க புருஷன் எங்கள செல்லமா கூப்பிட மாட்டாங்க; உன் நல்ல மனசுக்கு தான் ஆண்டவன் நல்லவரா குடுத்திருக்கார்...' என்பர்.
என் கணவர் எவ்வளவு லேட்டா வந்தாலும் ஏன்னு கேட்கவோ, என் அம்மா வீட்டுக்கு போயிருந்தா, 'என்ன பார்க்க வாங்க'ன்னோ கூப்பிட மாட்டேன்.
தற்போது, எனக்கு குழந்தை பிறந்து ஒரு மாதம் ஆகிறது. ஒருநாள், என் கணவர் போனில் பேசும் போது, 'என்ன பாக்க வாங்கன்னு கூப்பிட மாட்டேங்கிற; லேட்டா வந்தா, ஏன் லேட்டா வர்றீங்கன்னு கேக்க மாட்டேங்கிற, போன் செய்யலன்னா, ஏன் போன் செய்யலன்னு கேக்க மாட்டேங்கிறியே...' என்றார். அதற்கு, 'எனக்கு, என் குழந்தையிடம் உரிமை இருக்கு; உங்களிடம் இல்ல. நான், உனக்கு இரண்டாவது பொண்டாட்டி தான். அதனால, 'எங்க வேணா போ; என்ன வேணும்ன்னாலும் செய்'ன்னு உரிமையோட நீங்க எதிர்ப்பாக்குற இதெல்லாம் நான் செய்யறதில்ல...' என்றேன்.
அன்றிலிருந்து அவர் எனக்கு போன் செய்வதில்லை. நான் ஏழெட்டு முறை, போன் செய்த பின்னரே, 'என்ன விஷயம்'ன்னு கேட்டு, 10 நிமிடங்கள் பேசிட்டு வெச்சிடறாரு. இதனால், அவரை இழந்துருவேனோன்னு பயமா இருக்கு. எனக்கு சரியான அறிவுரை கூறுங்கள்.
என் கணவரின் பழைய காதல் நினைப்பு வரும் போது, என்னால் அவரிடம் இயல்பாக பேச முடிவதில்லை. ஆனால், என் புருஷன் இல்லாமல் என்னால் இருக்க முடியாது. எனக்கு நல்ல அறிவுரை தாருங்கள் அம்மா.
இப்படிக்கு,
உங்கள் மகள்.


அன்புள்ள மகளுக்கு,
ஒவ்வொரு ஆணும், பெண்ணும் திருமணத்திற்கு முன் குறைந்தபட்சம், நான்கு பேரை காதலிப்பர். இரண்டு பேரை, ஒருதலையாய் காதலித்திருப்பர். வெளிப்படையாக இல்லை என்றாலும் மனதுக்குள்ளாவது, யாரையாவது காதலித்திருப்பர். பெரும்பாலோர், திருமணத்திற்கு பின், தங்கள் காதல்களை மறந்து விடுவர். திருமணத்திற்கு பின், எங்காவது தாங்கள் காதலித்தவர்களை சந்திக்கும் போது, தங்கள் வாழ்க்கைத் துணைக்கு, நண்பர் - தோழி என்றும், குழந்தைகளுக்கு, ஆன்ட்டி - அங்கிள் என்று அறிமுகப் படுத்துவர்.
உன் கணவனும் காதலை தலை முழுகி, மனைவியுடன் முழு மனதாய் குடும்பம் நடத்தும் குணம் கொண்டவனே!
கணவனை குத்திக்காட்டுவதில், உனக்கு ஒரு குரூர சந்தோஷம். தீப் புண்ணை விட மோசமான வலியை தரக்கூடியது, நாக்கினால் வீசப்படும் வசவு வார்த்தைகள். அடிக்கடி குத்தி காட்டுவதன் மூலம் மறந்து விட்ட முன்னாள் காதலியை உன் கணவனுக்கு நினைவூட்டுகிறாய். அத்துடன், 'நாமே மறந்துவிட்டவளை, நம் மனைவி நினைவூட்டி காயப்படுத்துகிறாளே... இவளை பழிவாங்க, அவளுடன் மீண்டும் தொடர்பு கொண்டால் என்ன...' என, உன் கணவனை நெகடிவ்வாக நினைக்க வைத்து விடும் உன் குத்தல் பேச்சு.
முன்னாள் காதலி எப்படி முதல் மனைவி ஆவாள்? சட்டப்படி உன்னை மட்டுமே திருமணம் செய்து கொண்டார் உன் கணவர். அத்திருமணம் எப்படி இரண்டாம் திருமணம் ஆகும்? உன் ஏச்சு பேச்சு தாங்காமல் தான், உன் மீதான அக்கறை விசாரிப்பை, குறைத்துக் கொண்டுள்ளார்.
கடவுள் கொடுத்த வரம், உன் கணவன் என்கிறாய். அந்த வரத்தை சுரண்டி சுரண்டி ஏன் ரத்தம் வழிய வைக்கிறாய்?
உன் கணவனிடம் மனம் விட்டு பேசி, மன்னிப்பு கேள். இனிமேல், எக்காரணத்தை முன்னிட்டும் உன் கணவனின் முன்னாள் காதலை நினைவூட்டாதே!
முன்னாள் காதலியின் கடிதம் மற்றும் அவனின் மின்னஞ்சல் பற்றிய நினைவுகளை, உன் மனதிலிருந்து முழுமையாக அகற்று.
உன் குழந்தைக்கு சந்தோஷமாக தாய்ப்பால் புகட்டு. நீ, உன் குழந்தை மீது காட்டும் அன்பும், பாசமும் மறைமுகமாக கணவனின் மீது பாயும்; கணவனுக்கோ உன் மீது பாயும்.
பேச நினைப்பதெல்லாம் பேசாதே. பேசும் வார்த்தைகளை சென்சார் செய். மனதை பக்குவப்படுத்த, பெருந்தன்மையை வளர்த்துக் கொள்.
உன் கணவனை தூற்றவும் செய்யாதே; இந்திரன், சந்திரன் என்று புகழவும் செய்யாதே. இரண்டுக்கும் இடையில், மத்திம நிலையில் நில்.
உன் திருமண வாழ்வு சிறக்க, இறைவனை வேண்டுகிறேன்.

என்றென்றும் தாய்மையுடன்
சகுந்தலா கோபிநாத்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement

 



வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (8)
HoustonRaja - Houston,யூ.எஸ்.ஏ
12-ஆக-201504:23:35 IST Report Abuse
HoustonRaja வணக்கம். இந்த வார கடிதம் - "உன்னை அடியோடு வெறுக்கிறேன். ஆனால், நானே உன்னை விட்டு பிரிந்தாலும் - நீ என்னை விட்டு போய் விடாதே" என்ற மனோ நிலையின் வெளிப்பாடு. உணர்வுகளில் முரண்களும், அதில் தீவிரமுமே இவரது வாழ்க்கை. இனி, இவர் செய்ய வேண்டியது இது தான். 1) கவனமாக சுய பரிசோதனை செய்ய வேண்டும். தான் எதிர்மறை நிலைகளை (opposite states of character traits) தீவிரமாக உணருவதையும், உழல்வதையும் எழுதி ஆராய வேண்டும். (உ.தா) excessive guilt/blaming others, impulsivity/fear of taking action, over involvement with others/fear of intimacy, compulsive eating/compulsive eating, selfishness/caring for others. அதனால், தனது முடிவுகளில்/உணர்வுகளில் நேரும் முரண்களையும் எண்ணி பார்க்கவேண்டும். கணவனின் சொல்லை நம்பி, கருவுற்றார். ஆனால், பிள்ளை பிறக்கும் முன்பே காற்புணர்ச்சி பிறந்துவிட்டது. இந்த மனமாற்றம் நேர, நிதர்சனத்தில் (Reality) ஏதேனும் நேர்ந்ததா என்று பொறுமையாக நினைவுகூரவேண்டும். 2) தனது கட்டுப்பாட்டில் இல்லாத நிகழ்வுகளுக்கு, நாம் அளவுக்கு அதிகமாக உணர்ச்சி வயப்படுகிறோமா என்று கவனிக்க வேண்டும். 3) பழைய நினைவுகளை நினைவுகூரும் போது, பக்குவமாக இருக்க பழகவேண்டும். (உ. தா) சிறுமியாக இருக்கும் போது திரையரங்கில் பார்த்த "பேய் படத்தால்" திகிலான நாம், பல ஆண்டுகள் கழித்து அதனை தொலைகாட்சி பெட்டியில், வீட்டு விளக்குகளின் ஒளியில் பார்க்கும் போது சிறு வயது அனுபவத்தை எண்ணிப்பார்த்து ரசிக்க தோன்றுமேயன்றி, திகிலாகவேண்டிய உணர்வு தோன்றாது. 4) இருப்பதை வைத்துக்கொண்டு வாழ/விளையாட நினைக்கவேண்டும். சீட்டாடும் போது, வரும் கார்டுகளை போன்றது வாழ்கை. கார்டு போடும்போதே "ஜோக்கரோ" அல்லது "செட்டோ" வந்து சேர்ந்தால்தான் "ரம்மி" அடிக்கமுடியும் என்பது எல்லாநேரமும் நிச்சயமல்ல. வரும் கார்டு வைத்து தொடர்ந்து விளையாடும் போது தான், திறன்களை/யுத்திகளை வளர்த்துக்கொள்ள முடியும். திறன்கள் பழக பழக தான், வெற்றி தொடர்ந்து நிகழும். 5) தனது குறைகளை ஏற்றுக்கொண்டு, தன்னையே முழுமையாக நம்ப (trust) துவங்க வேண்டும். அதனிலிருந்து, மற்றவரின் குறைகளை ஏற்றுக்கொண்டு - அவர்களும் தங்களால் முடிந்தவரை மட்டும் முயல்கிறார்கள் என்பதை நம்ப வேண்டும். மாற்றங்கள், உடனடியாக நிகழாது. தொடர்ந்து முயற்சி செய்தால் மட்டுமே மாற்றங்கள், நிரந்தரமாகும். அது வரை பொறுமையும், உற்சாகமும் இருந்தால் முயற்சிகளை தினசரி தொடர முடியும். வாழ்த்துக்கள். [நன்றி - “I Hate You. Do not leave me”, a book by Jerold J. Kreisman and Hal Strass”]
Rate this:
Cancel
Sicario - La Jolla,யூ.எஸ்.ஏ
10-ஆக-201523:45:35 IST Report Abuse
Sicario திருமணத்திற்கு முன் யார் எப்படி என்று ஆராய்ந்து கொண்டிருந்தால் வாழ்க்கை நரகம் தான். திருமணத்திற்கு பின் உங்கள் கணவர் எப்படி இருக்கிறார் இல்லை நீங்கள் எப்படி இருக்கிறீர்கள் என்பது தான் முக்கியம். இந்த காலத்தில் திருமணத்திற்கு முன் காதல் மட்டுமில்லை ஆண் பெண் உறவும் சர்வ சாதாரணமாகி விட்டது. மணமான பின் அதையெல்லாம் மறந்து வாழ்வதே புத்திசாலித்தனம்.
Rate this:
Cancel
Vijay Baskar - Bangalore,இந்தியா
10-ஆக-201517:43:20 IST Report Abuse
Vijay Baskar இதுக்கு பேருதான் நாக்குல சனின்னு சொல்லுவாங்க
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Upload Photo
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X