டைட்டானிக் படத்தின் மூலம் உலகம் முழுவதும் உள்ள இளைஞர்களின் பேரபிமானத்தை பெற்றவர், அப்படத்தில், 'ரோஸ்' கதாபாத்திரத்தில் நடித்த கேத் வின்ஸ்லெட்! இப்போதும் அவர் படங்களில் நடித்துக் கொண்டிருந்தாலும், முன் போல், ரசிகர்களிடம் போதிய வரவேற்பு இல்லை.
இந்த இடைப்பட்ட காலத்தில், இரு கணவர்களை விவாகரத்து செய்து, தற்போது, மூன்றாவது கணவருடன் குடித்தனம் நடத்தி வரும் கேத் வின்ஸ்லெட்டுக்கு, மூன்று குழந்தைகள் உள்ளனர். சற்று இடைவெளிக்கு பின், டிரெஸ் மேக்கர் என்ற ஆஸ்திரேலிய படத்தில் நடித்து வருபவர், இப்படத்துடன் நடிப்புக்கு மூட்டை கட்டி விடலாமா என, தீவிரமாக யோசித்து வருகிறார்.
— ஜோல்னாபையன்.