அமெரிக்காவைச் சேர்ந்த, 'மெட்டல் இங்க்' என்ற பொம்மை தயாரிப்பு நிறுவனத்தால், 1959ல், தயாரிக்கப்பட்ட,'பார்பி டால்' என்ற பொம்மை, தற்போது உலகம் முழுவதும் பிரபலம். இந்த பொம்மைகள் மீது, ரஷ்யாவைச் சேர்ந்த, டாடினா டுஜொவ்லா என்ற, 28, வயது பெண்ணுக்கு இளம் வயதிலேயே கொள்ளை ஆசை.
நாளுக்கு நாள் இந்த ஆசை அதிகரிக்கவே, அவரே, 'பார்பி' பொம்மையாக மாறி விட்டார். தன் உடை மற்றும் சிகை அலங்காரத்தை பார்பி பொம்மை போலவே மாற்றி விட்டார். இவரின் கார் நிறமும் இளம் சிவப்பு தான். இவர், எங்கு சென்றாலும் இளம் சிவப்பு நிறத்தில் தான் உடையணிந்து செல்கிறார். ரஷ்ய மக்களிடையே தற்போது பிரபலமாகி விட்ட, டாடினாவை, அங்குள்ள மக்கள், 'பிங்க் ஏஞ்சல்' என, செல்லமாக அழைக்கின்றனர்.
— ஜோல்னாபையன்.