பாக்ஸ் மேட்டர்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar advertisement tariff
 
Advertisement
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

14 நவ
2010
00:00

* இதெற்கெல்லாமா போட்டி?
மிக அழகான, பெரிய தாடி, மீசை வளர்ப்பவர்கள் யார்? இப்படி ஒரு போட்டி சமீபத்தில் ஐரோப்பாவில் ஆஸ்திரியா நாட்டில் லியோகாங் நகரில் நடந்தது. இந்தப் போட்டியில், பல நாடுகளைச் சேர்ந்த 150 பேர் பங்கேற்றனர். 17 வகையான போட்டிகள் நடந்தன. ஜெர்மனியைச் சேர்ந்த ஜூர்ஜென் பர்கர்டி, ஆஸ்திரியாவைச் சேர்ந்த பிரன்ஸ்மிட்டர்காசர் ஆகியோரது மீசை, தாடி எல்லாரøயும் கவர்ந்தது. "மீசையையும், தாடியையும் இதே போல் பராமரிப்பதுதான் தினமும் எங்களது வேலை...' என இவர்கள் இருவரும் பெருமிதத்துடன் கூறினர்.

 — ஜோல்னா பையன்.

* தங்கம் கொட்டும் ஏடிஎம்.,
இருபத்துநான்கு மணி நேரமும் பணம் எடுக்க, இப்போது, தெருவுக்கு தெரு ஏ.டி.எம்.,கள் வந்து விட்டன. தானியங்கி பணம் வழங்கும் இந்த இயந்திரங்கள் மக்களுக்கு மிகவும் வசதியாக உள்ளன. "ஏ.டி.எம்.,மில் பணம் மட்டுமே வழங்க வேண்டுமா? தங்கத்தை வழங்கினால் என்ன?' என யோசித்தது ஒரு நிறுவனம். உடனே, தங்கம் வழங்கும் ஏ.டி.எம்., இயந்திரத்தையும் நிறுவி விட்டது. ஆனால், இது இந்தியாவில் அல்ல. ஸ்பெயின் நாட்டின் மாட்ரிட் நகர ஓட்டல் ஒன்றில் இந்த ஏ.டி.எம்., நிறுவப்பட்டுள்ளது. இந்த ஏ.டி.எம்.,மில் நீங்கள் தங்கம் வாங்க கார்டை செருக வேண்டாம். அதற்கு பதில், பணத்தை போட வேண்டும். பணத்தின் மதிப்பிற்கு ஏற்ப ஒன்று, ஐந்து அல்லது பத்து கிராம் எடையுள்ள தங்க பார்கள் வந்து விழும். தங்கத்தின் விலை அவ்வப்போது ஏறி வரும். எனவே, இந்த இயந்திரமும் தங்கத்தின் விலையை பத்து நிமிடங்களுக்கு, ஒரு முறை சரி செய்து கொள்ளும். "எக்ஸ் ஓரியன்ட் லக்ஸ் ஏ.ஜி.,' என்ற நிறுவனத்தின் தலைமை நிர்வாகி தாமஸ் ஜிஸ்லர் என்பவர், இந்த இயந்திரத்தை மாட்ரிட் நகரில் வெஸ்டின் பேலஸ் என்ற ஓட்டலில் நிறுவியுள்ளார். "விழாக்களின் போது பரிசாக கொடுக்க தங்க நாணயங்களை வாங்க கடைகளுக்கு செல்வதை தவிர்க்க, இந்த இயந்திரத்தை நிறுவி உள்ளோம். மிக குறைந்த பணத்திற்கு கூட சிறிய நாணயத்தை இந்த இயந்திரம் மூலம் வாங்கலாம்!' என தாமஸ் கூறியுள்ளார். இந்தியாவிலும் இந்த இயந்திரத்தை பொருத்தி விட்டால், நகைக்கடைகளில் கூட்டத்தை குறைக்கலாம். — ஜோல்னா பையன்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement

 



வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Upload Photo
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X