# விலை குறைவாக உள்ளது என்று, பற்களை துலக்க தரமில்லாத, 'டூத் பிரஷ்'களைப் பயன்படுத்தினால், அது வாயின் ஆரோக்கியத்தை பாதிக்கும்.
# முட்கள் மென்மையாகவும், தலைப்பகுதி மிகவும் பெரியதாகவும் இல்லாமல், வாயின் இண்டு இடுக்குகளுக்கும் சென்று, அங்கு தங்கியுள்ள உணவுத் துகள்களை வெளியேற்றும் அளவிலான, 'டூத் பிரஷ்'ஷை வாங்க வேண்டும்
# சிலர் வாயில் உள்ள அழுக்குகள்
முற்றிலும் நீங்க வேண்டும் என, 'டூத் பிரஷ்'ஷால் கடுமையாகத் தேய்ப்பர். ஆனால், அப்படி தேய்ப்பது தவறு; கடுமையாக தேய்க்கும்போது, ஈறுகள் பாதிக்கப்படும்; சில நேரங்களில் புண்ணாகவும் வாய்ப்புள்ளது.
# ஈறுகள் அதிகமாக புண்ணானால், தொற்று ஏற்படும்; சில நேரங்களில், ரத்தக் கசிவும் ஏற்படலாம். எனவே, எப்போதும் மென்மையாகவே பற்களைத் துலக்க வேண்டும்.
# தினசரி இரண்டுவேளை பற்களை
துலக்க வேண்டும். காலையில் தூங்கி விழித்ததும், இரண்டு நிமிடங்களும், இரவில், தூங்கப் போவதற்கு முன், இரண்டு நிமிடங்களும், பல் துலக்குவது நல்லது.
# பற்களில் உள்ள கறைகளை போக்க வேண்டும் என, மணிக்கணக்கில் துலக்கினால், பற்கள் மற்றும் ஈறுகள் தான் பாதிக்கப்படும்.
# பற்பசை வாங்கும் முன், அதில் புளூரைடு, ட்ரைக்ளோசன், ஜைலிட்டால் போன்ற பொருட்கள் உள்ளனவா என்று பார்க்க வேண்டும்; இந்த கலவையில் தயார் செய்யப்பட்ட பற்பசையாக இருந்தால், அது நல்லது.
# முன் பற்களை விட, கடைவாய்ப் பற்கள் தான், உணவுப் பொருட்களை அதிகமாக உடைக்கும். அதனால், அந்த பற்களில் உணவுத் துகள்கள் அதிகம் மாட்டியிருக்கும். எனவே, பற்களைத் துலக்கும் போது, கடைவாய்ப் பற்களின் மீது, கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்.
# 'பிரஷ்' நன்றாக இருக்கிறது என்பதற்காக, அதை பல மாதங்கள் வைத்து உபயோகிக்கக் கூடாது. இரு மாதங்களுக்கு ஒருமுறை, கட்டாயம் 'பிரஷ்'ஷை மாற்றிவிட வேண்டும்; இல்லையெனில், வாயில் பாக்டீரியாக்களின் அளவு அதிகரித்து, வாய் துர்நாற்றம் ஏற்படும்.